Monday, April 18, 2016

விஜய் மல்லைய்யாவுக்கு பிடி வாரண்ட்

1

அன்பு மணி முதல்வர் ஆக ராம்தாஸ் யாகம் செய்ய முடிவு -செய்தி # யாகம் வளர்த்துனா யோகம்  வரும்னா யாகம் வளர்த்தும் புரோகிதர்கள் டைரக்டா சி எம் ஆகிடுவாங்களே?


==============

2  தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி ஏற்படாமல் போனதற்கு பா.ஜ.க. காரணம் என்று கூறுபவர்கள் காய்ச்சல் வந்தவர்களாக தான் இருப்பார்கள்-பொன்.ராதா # எலக்சன் முடியும் வரை பெரிய தலைவலிதான் எல்லார்க்கும்


==============3  நீதித்துறை, அதன் நம்பகத் தன்மையை இழந்துவருகிறது' - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர் # நீதிபதியே நீதித்துறையை ”தாக்(கூர்)குறாரே?================

4  மார்ச் 24 டூ27 வங்கிகளுக்கு 4  நாட்கள் தொடர் விடுமுறை: ஏடி.எம் சேவை முடங்கும் அபாயம் #  எப்படியும் மாசக்கடைசில பேலன்ஸ் இருக்காது,ஜீரோ பேலன்ஸ் தான்

================

5  ஜாதிவெறிக் கொலை.திராவிடக் கட்சிகளுக்கு ஏற்பட்ட தோல்வி.தமிழிசை # பஸ் சை எரிச்சா திராவிடம்.ரயிலை எரிச்சா தேசியம்=========6 விக்ஸ் ஆக்சன் -500 எக்ஸ்ட்ரா மருந்து நிறுத்தம்

.பக்கவிளைவு மருந்துகளுக்கு மத்திய அரசு தடை # டூ லேட்.பாரீன் ல எல்லாம் எப்பவோ தடை பண்ணியாச்


=============

7 டி20 போட்டியில் இந்தியாவை பாக் அணி தோற்கடித்தால் நிர்வாண நடனம் -பாக். நடிகை உங்களுக்கு அப்டி ஒரு தர்மசங்கடமான சூழலை தரமாட்டாங்க

============


8

அதிமுக அணியில் இடம் கிடைக்குமா?- ஜெ. அழைப்புக்காக காத்திருக்கும் தமாகா, மமக # ஆனா அதிமுக மடம், ஆகாட்டி தேமுதிக மடம்===================

9 ஆசிரியை மாணவன் விவகாரம்
பெற்றோருடன் செல்வதாக மாணவன் கூறியதால் வழக்கு முடிந்தது #அடப்பாவி,காரியம் முடிஞ்சதும் காரிகையை கழட்டி விட்டுட்டியே?


============
10

கார்களில் கட்சி கொடியை கட்டக் கூடாது: கட்சியினருக்கு மதுரை ஆட்சியர் உத்தரவு  # அப்டியே  கார் மேல  போர்த்தி விட்ரபோறானுங்க====================


11  

சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை: லாரியில் ஓட்டுநருக்கு ஏசி வசதி,  - மத்திய அரசு அறிவிப்பு # அப்டியே ரன்னிங்க்லயே தூங்கிடப்போறாக==============
12  

இந்த மூக்கை வைத்து கொண்டுதான் உத்தரப் பிரதேச முதல்வரானேன்: அகிலேஷ் யாதவ் நகைச்சுவை # யாரும் நோஸ்கட் பண்ணலையா? இதுவரை
==================


13 

மே.வங்க அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியானதால் சர்ச்சை: திரிணமூல் காங்கிரஸ் மறுப்பு # பருப்பு  மாதிரி பேசப்படாது, அதான் வீடியோவிலேயே விளக்கமா தெரியுதே?===================

14  தெலுங்கில் குஷி 2 ம் பாகத்தை ஆரம்பித்தார் எஸ் ஜே சூர்யா,.. தமிழில் விஜய் ஹீரோ! # டைட்டில் விசை?


================
15 ஜெ. வாங்கிய வங்கி கடன் விவரங்களை நாளைக்குள் தாக்கல் செய்ய கர்நாடகாவுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு # இதனால் ஜெ வின் வாக்கு வங்கி பாதிக்கும்னு வாதிட வழி இல்லை==============16 குதிரை காலை உடைத்த பாஜக எம்எல்ஏ நரகத்தில் எரிய கடவது: திரிஷா சாபம் # ரொம்ப “ஹார்ஸ்”ஷா பேசிட்டாரோ==============


17 அது நான் கொடுத்த பேட்டி அல்ல.. நான் யாருக்கும் பேட்டி கொடுக்கவில்லை.... மல்லையா # நமக்கு எதையும் கொடுத்துப்பழக்கம் இல்லை, வாங்கிதான் பழக்கம்


=================

18     ஸ்டாலின் - அன்புமணி: இளைஞர்களுக்காக இறங்கி வரும் இணைய தலைவர்கள் # இருவருக்கும் இனி ( எதிர்காலத்தில் -2021) ஏறுமுகம் தான்

================


19 கோடையைத் தணிக்க மினி கேன்.. பெப்ஸி, கோக்க கோலா-வின் 'மெகா பிஸினஸ்' ஐடியா..! # இது மெகா ஃபிளாப் ஆகனும், கோஷாப்பழம், இளநீர், நுங்கு இருக்க கோக் எதுக்கு?


===============

20 விஜய் மல்லைய்யாவுக்கு பிடி வாரண்ட் - செய்தி # போலீஸ் எங்கயும் தேடிட்டு இருக்காதீங்க. அண்ணன் ட்விட்டர்ல தான் இருப்பார்.


================

0 comments: