Thursday, April 14, 2016

தெறி - காமெடி கும்மி

1.சார். ரிலீசுக்கு முன்பே ஏன் படத்தைக்குறை சொல்றீங்க?
 
500 ரூபா டிக்கெட் வாங்கி தமிழன் ஏமாந்துடக்கூடாதில்ல?

================


சார்.க்ளைமாக்ஸ்ல ஹீரோ செத்துட்டாலும் பேயா மாறி வில்லனைக்கொல்றாரு
 
வில்லனை மட்டுமா கொல்றாரு?

================

விகடன் மைண்ட் வாய்ஸ் = நாம வேற 11 காரணம் போட்டுத்தொலைச்ட்டோம்,இனி எந்த முகத்தை வெச்சுக்கிட்டு நாளை வெளீல வர.


=================

நீங்க ஒரு நல்ல அப்பாவா இருந்தா போதும். நல்ல போலீசா இருக்கனும்கறதில்ல
ரிசல்ட் நல்ல படமா பேர் வாங்காட்டி பரவால்ல, மொக்கை படம்னு வாங்கிட்டா?

=============

போலீஸ் டிபார்ட்மெண்ட் அவதூறு வழக்கு போட்டிருக்காமே?

எதுக்கு?போலீசை தாக்கி வசனம் வருதா?
 
போலீஸ் யூனிஃபார்ம் போட்டு ஹீரோ அடிக்கடி வர்றாராம்


==============


சார். குழந்தைத்தொழிலாளர் பற்றிய கதை இது
 
அப்பாடா, படம் ஊத்திக்கிட்டாக்கூட இது குழந்தைகளுக்கான படம்னு சொல்லிடலாம்


=============


சார். அட்லீ புது மாப்பிள்ளை. பாசிட்டிவ் ரிவ்யூ குடுக்கலாமில்ல?
 
அதுக்கு நாங்க எதுக்கு 500 ரூபா மொய் எழுதனும்? # FDFS 500


================

விஜய் = பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் எது?
 
வில்லன் = அது தெரியலைங்க. ஆனா “சனி”ங்க. குறியீடுங்க


=================

சார், மொட்டை ராஜெந்திரன் இண்ட்ரோ சீனுக்கு என் இண்ட்ரோவை விட அதிக கைதட்டலாம். அந்த சீனை தூக்கிடலாமா?
பொறுங்க.தியேட்டர் காரங்களே தூக்கிடுவாங்க

============

10 சத்ரியன் + ஆனஸ்ட்ராஜ் + என்னை அறிந்தால் = தெறி # ஃபாரீன் ட்வீட்டர் அப்டேட்படி (ராஜா ராணி அளவு தரத்தில் பாதி கூட வர்லையாம்)


=============

11 வில்லன் மகேந்திரன் நடிப்பும் , பேபி நடிப்பும் டாப்ங்க
யோவ் , பேச்சை மாத்தாத. படம் எப்படி?
விஜய் ஸோ யங் லுக்குங்க 
அய்யோ ராமா படம் எப்படி?


=============

12 விஜய் = இந்தியாவில் ராக்கெட் செய்யும் இடம் எது?
 
அடியாள் = சிவகாசி சார் # தெறி ( 1988 உ ராஜாஜி இதயம் பேசுகிறது இதழ் ஜோக்)


===============

13 ஏண்டி, ஒரு இடத்துல உட்கார மாட்டியா? என்னமா ஆட்டம் ஆடறே, உன் பேரண்ட்சை கூட்டிட்டு வா
 
எங்கப்பா இதை விட ஆட்டமா ஆடுவாரு==============


14 சத்ரியன் ரீமேக் இல்லனு அட்லீயே சொல்லிட்டாரு
 
யோவ், அவரு மவுனராகம் ரீமேக் இல்லை, ராஜாராணி புதுக்கதைன்னும்தான் சொன்னாரு


=================


1  டியர்! நீ சைவமா? அசைவமா?

சூரியப்பொழுதுகளில் பரிபூரண சைவம், சந்திரப்பொழுதுகளில் சகலவித அசைவம்

==============

2 டீச்சர். பொறுக்கி க்கு சின்ன ரு வருமா? பெரிய று வருமா? எப்டி நினைவு வெச்சுக்கறது?


வல்லினமான பொறுக்கிக்கு வல்லின று தான் வரும்


===============


3 நான் ஒரு பெண் ட்வீட்டரை லவ் பண்றேன்

 வேணாம். அது சரி வராது

ஏன்?

143  -140 ல் அடங்காது இல்ல?


=============

4 தலைவரே! உங்களை நச்சுப்பால்னு சொல்றாங்க

நீங்க தப்பா அர்த்தம் எடுத்துக்குறீங்க. அவர் சொன்னது 'நச்சுப்பால்னா, 'நச்'சுனு இருக்குற பால்னு அர்த்தம்

பால்காரிதான் நச்சுன்னு இருக்கும்., பால் எப்டி நச்சுன்னு இருக்கும்?


=================


5 ஒவ்வொரு நாளையும் இது தான் கடைசி நாள் என்பது போல் கழிக்க வேண்டும்
மிஸ்! கழிச்சுட்டே இருந்தா கூட்றது, பெருக்கறது எல்லாம் எப்போ?
================

சார், உங்களுக்குப்பிடிச்ச 2 படங்கள்  சொல்லுங்க

 மவுன ராகம், சத்ரியன்

 சரி, நீங்க டைரக்ட் பண்ண 2 படங்கள் சொல்லுங்க 


 ராஜாராணி , தெறி
-- 


====================


7 சார், பிஸ்னெஸ் பேசலாமா? ட்ரெய்லர்  செம ஹிட் ஆகிடுச்சு

 நம்ம படம் எல்லாமே ட்ரெய்லர் , டீசர் ஹிட் ஆகிட்டுதானே இருக்கு?


==================

8  சார்,  சொன்ன தேதி ல , சொன்ன டைம்க்கு கச்சிதமா ட்ரெய்லர் விட்டுட்டீங்களே? எப்டி?


படம் ரிலீஸ் ஆகறதுதான் நம்ம கைல இல்ல. ஆனா ட்ரெய்லர் எப்பவும் கரெக்ட் டைம்க்கு ரிலீஸ் ஆகிடும்


================


9 ஆளுங்கட்சிக்கு இந்தப்படம் பிடிக்காம இருக்க ஒரு காரணம் சொல்லு பார்ப்போம்

ஹீரோ பேரு விஜய்குமார். பிஜேபி ல சேர்ந்திருக்காரு விஜய்குமார்.இது போதாதா?


==================

10  பைபிள் ல என்ன சொல்லி இருக்கு?

 அது என்ன ஆடியோவா? புக்குங்க. படிச்சு தான் பார்க்கனும்


====================


11 இது டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படம்னு எல்லாரும் சொல்றாங்க, நீங்க மட்டும் இல்லைங்கறீங்களே? எப்டி? தெறி பார்த்தாச்சா?

 இல்லை, சத்ரியன் பார்த்துட்டேன்


=====================

12  சார், ட்ரெய்லரோட ஃபைனல் டச்ல என்ன சொல்ல வர்றீங்க?

 வெறும் கைல முழம் போடுவோம்னுதான்


==================

13  சார், பாலத்தில் இருந்து நீர்ப்பரப்பில் நீங்களே  டூப் போடாம குதிச்சது ஏன்?

 புரொடியூசரே இவ்ளோவ் ரிஸ்க் எடுக்கறார், நான் எடுக்கக்கூடாதா?


===================


14  பேபி-சார், இது புதுக்கதையா? ரீமேக் கதையா?

ஹீரோ-உஷ்! யார்கிட்டேயும் சொல்லிடக்கூடாது,ஓப்பனிங்க் வசூல் பாதிக்கும்,கடைசில மிஞ்சுவதே அந்த 1 தான்


====================


15  லவ்வை  சொல்ல வெட்கப்படுறவன்.. வாழவே வெட்கப்படுறான்னு அர்த்தம்.

 லவ்வர் கிட்டே கூட வெட்கப்படாதவன் லவ் பண்றதே வேஸ்ட்னு அர்த்தம்


=====================

16 சார், நம்ம பட ட்ரெய்லரை குறிப்பா இன்னைக்கு ரிலீஸ் பண்றதுக்கு எதுனா ஸ்பெஷல் காரணம் இருக்கா?

 ஒய் நாட்? இன்னைக்கு சிட்டுக்”குருவி” தினம் ( 20/3/2016)
=======================


17 சார்.நம்ம படம் எப்டி?சபாஷ் னு சொல்ற அளவு இருக்கா?

சுபாஷ் னு சொல்லலாம்

புரியல
சத்ரியன் பட டைரக்டர் கே சுபாஷ் தானே?

===============

18 டியர்.பீச்க்கு போலாமா?
போக வர டவுன் பஸ்க்கு 28 ரூபா ஆகும்.இருக்கா?

வெட்கமா இல்ல?
காசில்ல


=================

19 டாக்டர்.கை ல அடி பட்டுடுச்சு.


ஓ.இந்த மூவ் க்ரீமை தடவுங்க

நீங்க தடவுனா வலி மூவ் ஆகிடும்.கணவர் தடவுனா மூட் வரும்
என்ன ஆகும்?==================

20 சார், நம்ம பட ம்யூசிக் எப்டி?

லொள்ளு ஜாஸ்தி சார்.

அப்டின்னா?

லொள்ளு சபா தீம் மியூசிக்கை சுட்டிருக்கீங்க

=====================0 comments: