Monday, April 25, 2016

மணல் கொள்ளையை யார் கண்டுக்காம இருக்காங்களோ அவர்களுக்கே ஆதரவு?

திமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வராத காரணத்தை வெளியில் சொல்ல இயலாது - EVKS இளங்கோவன் # சரி, வீட்டுக்கு உள்ளே வந்து தான் சொல்லுங்க================
2 அதிமுக அமைச்சர்கள் நீக்கத்துக்கு விளக்கம் தேவை - கனிமொழி# இடம் சுட்டி பொருள் விளக்கு க போர்சனையே சாய்சில் விட்டவங்களாச்சே? அவுக===============3 எங்கள் கட்சி ராணுவம் போன்றது

- CR.சரஸ்வதி # சொந்த ஊருக்குப்போகும்போது மிலிட்ரி ரம்மோட போவாங்களோ?


===============

4  பாமக 200 இடங்களில் ஜெயிக்கும் - ராமதாஸ். # அந்த 34 சீட் மட்டும் ஏன் விட்டுட்டீங்க? சொல்றதுதான் சொல்றீங்க. செண்ட்டம் அடிப்போம் அடிச்சு விடுங்க


==========5 அதிமுக கூட்டணியில் இணைகிறது தமாக.ஜி கே
வாசனுக்கு ஜெ அழைப்பு # ஜி கே வுக்கு ஓக்கே?இது கலைஞருக்கும் கேப்டனுக்கும் ஷாக்கே!===============

தமிழக அமைச்சர்கள் மீதான நடவடிக்கை ஏன்? ஜெ. விளக்கம் தர கனிமொழி வலியுறுத்தல் # தப்பு பண்ணா கண்டுக்காம இருக்க அவர் என்ன கலைஞரா?

============

7   திமுக கூட்டணியில் தேமுதிக, தமாகா இணைய வேண்டும்- ஜவாஹிருல்லா அழைப்பு # வேற பக்கம் ஃபிக்ஸ் ஆன பொண்ணை இப்போ எதுக்கு பொண்ணு பார்க்க வரனும்?


===========

8 விவசாய மேம்பாடுதான் பொருளாதார வளர்ச்சி: - மோடி # அதனாலதான் நெட் தமிழன் டெய்லி கடலை சாகுபடி செஞ்சுட்டே இருக்கான்============9

மோடி உலகத் தலைவரானதற்கு டுவிட்டர் இணையதளமே காரணம்'-அமெரிக்க ஆய்வு முடிவு # அப்போ ட்விட்டர்ல இருந்தா உலகம் பூரா பரவலாம்?===========

10

பாஜக அணிக்கு தேமுதிக நிச்சயம் வரும் -இல.கணேசன்  # வரும் வரும் வரும்னு குணா கமல் மாதிரி ஆகிடாதீங்க, வரமாட்டார் இனி நமக்கில்லை ன்னு திருவிளையாடல் தருமியின் தெளிவு பெறவும்


=============


11 

அதிமுக மதுவிலக்கு வாக்குறுதி அளித்தால் மக்கள் நம்ப மாட்டார்கள்: கலைஞர் # இந்த 5 வருசத்துல ஏன் மதுவிலக்கு கொண்டு வர்லை?னு கேட்பாங்க இல்ல?===============

12

மக்கள் நலக்கூட்டணிக்கும்
மதுபான கூட்டணிக்கும் இடையேதான் போட்டி - வைகோ # மக்கள் தெளிவா இருந்தா தேவலை என்பதுதான் நடுநிலை ஆட்களின் கவலை================

13
  • சிபிஐ வழக்கை எதிர்கொள்ளும் ,அன்புமணிக்கு

  • திராவிட கட்சியை குறை சொல்ல எந்த அருகதையும் இல்லை- கனிமொழி # 2 ஜி வழக்கில் சிக்கின நீங்க மட்டும் அவரை குறை சொல்லலாமா?


=======================14

தி.மு.க.வின் வெற்றிச்சத்தம் என் காதில் கேட்கிறது- கருணாநிதி# காதும் காதும் வெச்சாப்டி ஒரு ரகசியம் சொல்றேன், அதுக்கு 1% கூட வாய்ப்பே இல்லை
==================


15

அதிகாரப் பசி கொண்ட கட்சி பா.ஜ., :கெஜ்ரிவால்  # அதி  கார பசின்னா அல்சர் வந்துடுமே
=================


16 

ஹோலி கொண்டாடினால் தாக்குங்கள்: ராஜ்தாக்ரே # இப்படிச்சொன்னதுக்காக உங்களைத்தான் எல்லாரும்  அறிக்கை விட்டு தாக்கப்போறாங்க ராஜ் ரோஜ் தாக்க ரே================


17   மக்கள்நலகூட்டணி என்பது பிரிவினை வாத கும்பல் -Hராஜா  # இப்டி கெட்ட பேர் வரும்னு தான் எந்தக் கட்சியும் மக்கள் நலம் பற்றி சிந்திப்பது இல்லை போல


================

18 

கூட்டணி சேர யாருமே வராததால் விஜயகாந்த் விரக்தி # வேற வழி இல்லை ,ஏற்கனவே தமிழகத்தை “ ஆண்டவருடன்” கூட்டணி அமைக்க வேண்டியதுதான்


================


19 

எந்த கட்சிக்கு ஆதரவு? மணல் லாரி ஓனர்கள்  இன்று அறிவிப்பு # மணல் கொள்ளையை யார் கண்டுக்காம இருக்காங்களோ அவர்களுக்கே ஆதரவு?


================

20 

முஸ்லிம் ஓட்டுகளில், 95 சதவீதம் எங்களிடம் உள்ளது. எங்களை மதிச்சு யாரும் கூப்பிடலை':இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பு விரக்தி # இது தெரிஞ்சா கலைஞர் ஓடி வந்து கதவை தட்டுவாரே?


====================

0 comments: