Wednesday, April 27, 2016

ஜாதி மல்லி ஜாதி முல்லை

1  வாஸ்துப்படி இந்த வீட்டை மாத்தனும்எப்டி?
என் பேருக்கு எழுதி வெச்சிடுங்க டாடி.ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன்


=============

2 தலைவரே! நாடே பர பரப்பா பேசிட்டு இருக்கும் ஜாதிப்பற்று பற்றி கருத்து சொல்லுங்க.எத்தனையோ மலர்கள் இருந்தாலும் ஜாதி மல்லி ஜாதி முல்லை தனி கிக்
==============

3 கால் மேல கால் போட்டு உட்கார்ந்திருந்ததால உனக்கு ஆபீஸ்ல மெமோ கொடுத்துட்டாங்களா?ஆமா.ரிசப்சனிஸ் ட் மடி மேல கால் போட்டு உட்கார்ந்திருந்தேன்


============

4 டியர்.நீ என்னை லவ் பண்ணலைன்னா தேனையும் நெய்யயும் கலந்து சாப்ட்டு சாவேன்


்அந்த ரெண்டையும் ஏன் வேஸ்ட் பண்றே? என் கிட்டே குடுத்துட்டு சாவு


==============

5 நான் MALE ஜாதி யை விட FEMALE ஜாதியையே அதிகம் ஆதரிக்கிறேன்.ஏன் எனில் பெண்கள் ஓட்டு தான் அதிகம்.ஆதாயம் இல்லாமல் நான் ஆற்றோடு போவதில்லை


=============

6 எடிட்டர் சார்,மிஸ் கஸ்தூரி கிட்டே ஃபோனைக்குடுங்க, பேசனும்.ஆஃபீஸ்ல அவங்க இருப்பது உனக்கு எப்டி தெரியும்?
ஜோக் சன்மானம் மணிஆர்டர் ஃபார்மில் சைன் பார்த்தேன்===============


7 சுவாமி! திருப்பதி லாட்ஜ்ல எதுக்கு தங்குனீங்க?

ஊட்டி , கொடைக்கானல்னா ரெய்டு வரும். இங்கே கோயிலுக்கு வந்தோம்னு நம்பி ஏமாந்துடுவாங்க இல்ல?


===============


8 உங்க லோன் அப்ளிகேஷன்ல வி . ம கடன் அப்டினு சொல்லி இருக்கீங்க. விவசாயிகள் மறுவாழ்வுக்கடனா?அதான் தர மாட்டீங்களே? விஜய் மல்லைய்யா டைப் கடன்

=================\\\


டியர், ஆம்பளைங்க எல்லாம் இப்போ காதுல ஸ்டெட் போட்டுட்டு சுத்தறாங்களே அது எதுக்கு?

 பொண்டாட்டி எது சொன்னாலும் காதுலயே போட்டுக்கறதில்லைனு குறை சொல்லிடக்கூடாதுன்னுதான்

================


10  தியானம் டெய்லி செஞ்சா நினைவாற்றல் பெருகும்னு சொன்னேனே, ஏன் போன வாரம் தியானம் செய்யலை?

 சாரி டாக்டர். மறந்துட்டேன்


===============


11 டியர், என் கூட  பேசும்போது மட்டும் உங்க தமிழ்ல சந்திப்பிழை வருதே ஏன்?

 நம்ம சந்திப்புல பிழை நடந்துடுமோன்னு ஒரு பதட்டம் தான்


===================

12  பச்சபுள்ள சிவா - டி சர்ட் போட்டிருப்பது பையனா? பொண்ணா? என கண்டுபிடிக்கவே எனக்கு 10 நிமிசம் ஆகுது

ஆ”பத்து” நிமிடங்கள் ஆச்சே? அடி விழலை?


===============


13 ஆஃபீஸ்ல ஒர்க்கிங்க் டைம்ல தூங்கிட்டு இருக்கியா? வீட்டுக்குப்போ.

 உங்க வீட்டுக்கா? என் வீட்டுக்கா? சார்!


==================

14 இன்ட்டர்வ்யூக்கு கொஞ்சம் கூட பதட்டமே இல்லாம வந்திருக்கீங்களே எப்டி?


கொஞ்ச நஞ்சமாவது ஜி கே இருக்கறவன் தான் பயப்படனும்


=============

15 எதுக்கு 1 மார்க் போடுங்கன்னு கெஞ்சறே.?எப்டியும் FAILதானே


பேன்சி நெம்பர் வேணும் டீச்சர்.142/1200,1 போட்டா எந்தப்பொண்ணு மார்க் எவ்ளோ?ன்னு கேட்டாலும் 143 சொல்வேன்்


=================16 டேய்.நீ தமிழ் மீடியம்.அவ இங்க்லீஷ் மீடியம்.எட்டிப்பார்த்து என்ன பண்ணப்போறே?


டீச்சர்.நீங்க இன்னும் வளரனும்

==============

17 காதலன் = நீ காற்று நான் மரம்.என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்


காதலியின் அப்பா.= நான் இப்போ மரத்தை.வெட்டுவேன்

===============

18 தேர்தலுக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்?எதுக்கு அவர் சிலையை மூடனும்?


திருக்குறளுக்கு நம்ம தலைவர் உரை எழுதி இருக்காரில்ல?===============

19 ஜட்ஜ் = சட்டம் என்ன சொல்லுது?விதி யை மீறி தப்பு செஞ்சிருக்கே.


கைதி = சட்டம் படம் பார்க்கலை.விதி படத்தில் காட்ன மாதிரிதான் தப்பு செஞ்சேன்


================

20 டாக்டர்.நீங்க ஒரு சினிமாப்பைத்தியமா?


யா.ஒய்?
நாடித்துடிப்பு என்ன சொல்லுதுன்னா பர்ஸ்ட் ஆப் ஸ்லோ னு சொல்றீங்க?


==================

0 comments: