Saturday, April 02, 2016

ஹலோ நான் பேய் பேசறேன் - சினிமா விமர்சனம்


நான் சின்னப்பையனா இருக்கும்போதெல்லாம் பேய்ப்படம்னா திகிலா இருக்கும், பயந்துட்டே பார்ப்பாங்க ஜனங்க. இப்போ கோலிவுட் அந்த ட்ரெண்டை உடைச்சு பேய்ப்படம்னா காமெடி , சிரிச்சுட்டே ரசிக்கலாம் கற மாதிரி கொண்டு வந்துட்டாங்க

 சுந்தர் சி டைரக்சனா இருந்தாலும்  சரி தயாரிப்பா இருந்தாலும் சரி மினிமம் கேரண்டி வசூலும் , ஃபேமிலி எண்ட்டர்டெயின்மெண்ட்டும் உண்டு. இது எப்டின்னா அறிவாலயம் போய்ட்டா துண்டு துக்கடா டப்பா கட்சிக்கு கூட சீட் உண்டு எலக்சன்ல .கலைஞர் உங்களை அழைக்கிறார், பாவிகளை அவர் ரட்சிப்பார் என்பது போல ‘ சரி படத்தைப்பார்ப்போம்


இந்த மாதிரி பேய்பப்டம், காமெடிப்படம் பார்க்கும்போது மூளையை தனியா கழட்டி வெச்சுட்டு தான்  படம் பார்க்கனும்,. பெரிய  இவரு மாதிரி  படம் பார்க்கக்கூடாது. லாஜிக் பார்க்கப்படாது


ஹீரோ ஒரு சாதா ஃப்ராடு, சின்ன சின்ன மோசடிப்பேர்வழி.ஹீரோயினை கரெக்ட் பண்ண ஒரு சேட்டு கம்பெனியில் வேலை  செய்யும் அவரைப்பார்க்கப்போறார்.க்ளிக் ஆகிடுது.ஆனா ஃபிகரோட அண்ணன் ஒரு கண்டிசன் போடறார். சாவுக்குத்து ஆட்டம் நல்லா ஆடுனாத்தான் பொண்ணு தருவேன்கறார். 

 யாரையாவது சாகடிக்கனும்னு கண்டிஷன் போட்டாலே தமிழன் டக்னு மர்டர் பண்ணிட்டு வந்துடுவான். இதெல்லாம் ஒரு ஜூஜுபி கண்டிசன். 

ஹீரோ  ஆடிக்காட்டிடறார்.

 இப்போ ஓக்கே ஆகிடுது ஃபிகரு’ இது முத்ல்  அரைமணி நேர  முன்னோட்டக்கதை




 ஹீரோ ஆட்டையைப்போட்ட செல்ஃபோன்ல  ஒரு பேய்  குடி  இருக்கு. சொன்னா  யாரும் நம்பல. ஹீரோயினோட அண்ணன்& கோ வை  தன் ரூமில் தங்க வைக்கறார்.

அவங்க உண்மைனு நம்பறாங்க. 

 பேயோட  ஃபிளாஸ்பேக் என்ன?  அது ஒரு பேங்க் ஸ்டாஃபை லவ் பண்ணி இருக்குது. ஆனா எதிர்பாராத ஒரு சாலை விபத்துல மர் கயா. அதனோட ஆசை என்னான்னா தன் காதலன் கூட ஒரு நாளாவது குடும்பம் நடத்தனும். ஆஹா இதுவல்லவோ ஆசை

ஆனா இப்போ காதலனுக்கு வேற ஃபிகர்  கூட மேரேஜ் ஆகி இருக்கு.  எப்டி கில்மா பண்ண? இதுதான் க்ளைமாக்ஸ் டர்னிங் பாய்ண்ட்


ஹீரோவா வைபவ் ரெட்டி. அசால்ட்டா பண்ணிட்டுப்போகும் கேரக்டர் . நல்லா பண்ணி  இருக்கார். குட் 

 ஹீரோயினா  ஐஸ்வர்யா ராஜேஷ். நல்ல கிளாமர்  லுக். லோ ஹிப்னாடிசம் தெரிஞ்ச  மிடில் க்ளாஸ்  ஃபிகர்  நடிக்க வாய்ப்பு, பின் பாதியில் பேயாக மாறுகையில்  அப்ளாஸ் 


பேயாக  ஓவியா. கிளாமர்  காட்ட வழி இல்லை. ஆனா உலக சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக  பேய்  வெள்ளை சேலை இல்லாம  பிங்க் கலர் சேலை பச்சை கலர் பஃப் கை வெச்ச எம்ப்ராயடரி ஜாக்கெட் போட்டுட்டு வருது. நல்ல முன்னேற்றம்.பேயைப்பார்த்து ஒரு பயலுக்கும் பயம் வர்லை , செம கிளுகிளுப்பு . கேமரா மேன் வேற  ஓவியாவுக்கு ஒன் சைடா நின்னு கேமரா ஆங்கிள் வெச்சது பிளஸ்


காமெடிக்கு கருணா. அவர் தான் அந்த பேய்க்காதலன்


 பேய்  ஓட்டும் சாமியாராக அதகள காமெடி  சிங்கம் புலி. அவர் மச்சினியுடன் அடிக்கும்  லூட்டி  செம 

 ஃபேமியோட படம் பார்க்கலாம். ரத்தம்  கோரம் இல்லை வல்கர் இல்ல.

விடிவி கணேஷ் ஹீரோயினோட அண்ணனா வந்து அவர் பங்குக்கு காமெடி பண்றார்



தியேட்டரிக்கல் ட்விட்டர்  அப்டேட்ஸ்

திருப்பூர் வளர்மதி ஸ்டாப் - சக்தி சினிமாஸ் -,ஹலோ நான் பேய் பேசறேன் =8 30 PM ஷோ


2 B,C சென்ட்டர் ஆடியன்சின் ஆரவாரமான கை தட்டலுடன் லோ கிளாஸ் காமெடி வசனங்களுடன்


3  சில்லாட்டி டும்மா சாவுக்குத்துசெம டப்பாங்குத்து சாங்


கிரேசி மோஹன் =ஹை க்ளாஸ் ,சுந்தர் சி = பி ,ராமநாராயணன் =சி ": காமெடியிலும் என்ன சார் லோகிளாஸ் ஹைகிளாஸ் 😩😩"


5 இன்னொரு சினிமா இனி பார்த்தா டார்லிங் நெ.1,திட்டும் : Darling 2????"

நச் டயலாக்ஸ்

1 மிஸ்! உங்களை உஷார் பண்ணலாம்னுதான் ஆபீஸ் வந்தேன்.பணம் பார்த்ததும் மனசு மாறி பணத்தை உஷார் பண்ணிட்டேன்

கேர்ள்ஸ் கிட்டே லவ் சொல்றது பீர் பாட்டில் ஓப்பன் பண்றமாதிரி.பொங்கும் நாம சைட் டிஷ் போட்டு அமுக்கனும்


அய்யய்யோ.போன் வந்துடுச்சு

வந்தா எடு.
யோவ்.போன் ல பேய் வரும
போன் ல எப்டிய்யா பேய் வரும்?,

நீ ஒரு அப்பனுக்கு பிறந்த பேயா இருந்தா இப்போ என் கண் முன் வா


இவ்ளோ லைட் எரியும்போது எதுக்கு மாப்பி கைல லைட்?

பேய் இருக்கும் வீட்ல திடீர்னு லைட் (கரண்ட்) போய்ட்டா யூஸ்.ஆகுஙில்ல?


டாக்டர்.வீடு வரைக்கும்.வர முடியுமா?
ஏன்?யாருக்காவது.வயித்தால போகுதா?
ஒரு பேய் உங்களை கூட்டிட்டு வரச்சொல்ச்சு


இப்போ பாட்டு பாடப்போறீங்களா?
பிளாஸ்பேக்கா சொன்னா 40,நிமிசம் ஆகும்.பாட்டா சொன்னா 4,நிமிசம்.எது வசதி?


நீ படிச்ச பேய் தானே?ஒரு ஆம்பளையை இப்டிப்போட்டு அடிக்கலாமா?

சிங்கம்புலி = நான் சாதா சாமியார் இல்ல.சந்திரமுகியையே சந்து ல வெச்சு அடிச்சவன்.சாமி.கேம் சாமி


10 ஹிந்தி பேயை ஓட்ட ஹிந்தி சாமியாரை ரெடி பண்ணிட்டேன்.எப்பூடி




சி.பி கமெண்ட் - ஹலோ நான் பேய் பேசறேன்.= 120 நிமிசம் நான் ஸ்டாப் காமெடி பேய்ப்படம் பி & சி ஹிட்.விகடன்.=41,ரேட்டிங் -2.75 / 5


ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( யூகம்) =41

குமுதம் ரேட்டிங்க் = ஓக்கே



வசூல் = போட்ட முதலீட்டை விட 5 மடங்கு லாபம் சம்பாதிக்கும், பி , சி செண்ட்டரில் செம ஹிட் அடிக்கும், ஏ செண்ட்டரில் மீடியமா போகும்

Tirupur no 1 theatre 🎦 sri sakthi cinemas


0 comments: