Sunday, April 17, 2016

ஜேக்கப்பிண்டே ஸ்வர்க்க ராஜ்ஜியம்-Jacobinte Swargarajyam- (மலையாளம்) - சினிமா விமர்சனம்-

ஹீரோவோட அப்பா ஒரு தொழில் அதிபர் . இரும்பு வியாபாரம் பெரிய அளவில்  செய்பவர். துபாய்ல சந்தோஷமா ஃபேமிலியோட இருக்கார். 3 பசங்க 1 பொண்ணு , ஒரு சம்சாரம்

மாச சம்பளக்காரன் மாசம் ஆனா சம்பளம் வாங்கி அதுக்குள்ளே செலவு பண்ணி நிம்மதியா குடும்பம் நடத்துவான் எந்த தொந்தரவும் டென்சனும் இருக்காது. ஆனா அந்த மாதிரி ஆளுக்கு எவன் இப்போ பொண்ணு தர்றான். விஜய் மல்லய்யா மாதிரி  கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் தொழில் அதிபருக்குத்தான் மவுசு. நடிகைங்க கூட தொழில் அதிபராப்பார்த்துதான் வேய்க்கானமா ( புத்திசாலித்தனமா என்பதன் கொங்குத்தமிழ்) லவ்வுதுங்க

நம்ம ஹீரோவோட அப்பாவும்  ஒரு தொழில் அதிபர் என்பதால்  தன்னோட தொழில் அபிவிருத்திக்காக நண்பர்கள் , தெரிந்தவர்களிடம் பணம் கை மாத்து ( கடன்) வாங்கி முதலீடு போட்டு பிஸ்னெஸ் ரன் பண்றார்.

 ஆஃபீஸ் வாழ்க்கை, கம்பெனி வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, நட்பு வாழ்க்கை இப்படி எந்த   வாழ்க்கைல பார்த்தாலும் கூடவே இருக்கறவன் தான் துரோகம் செய்வான். நாம தான் ஜாக்கிரதையா இருக்கனும்

பார்ட்னர் ஒருத்தர் நம்ம கேப்டனை சந்திரகுமார் ஏமாத்துன மாதிரி 13 கோடி ரூபா பணத்தோட விஜய் மல்லய்ய்யா மாதிரி  ஊரை விட்டு ஓடிப்போய்டறார். அது தெரிஞ்ச மற்ற முதலீட்டாளர்கள் குடுத்த பணத்தை திருப்பிக்கேட்கறாங்க, நெருக்கடி தர்றாங்க.ஹீரோவோட அப்பாவோட நண்பர் கம் பார்ட்னர் உடன் பக்கத்து நாட்டுக்கு பணம் புரட்ட போய்டறார்.  ஹீரோ  தன் அம்மாவுடன்  இங்க இருக்கும் வீடு சொத்து எல்லாவற்றையும் வித்து சமாளிக்கறாங்க.

 ஹீரோ  தனக்குத்தெரிந்த  புரோக்கர் ஒர்க் அதாவது கை மாற்றி விடுவது.அதன் மூலம் கமிசன் பிஸ்னெஸ் பண்ணி பணம் சம்பாதிச்சு முன்னுக்கு வர்றார்.

இதான் கதை.


 இது முழுக்க முழுக்க உண்மைச்சம்பவம் என்பதால்  திரைக்கதை  மிக இயல்பாக போகுது. படம்  முடிஞ்சு டைட்டில் ஓடும்போது உண்மைச்சம்பவத்துக்கு சொந்தக்காரர் ஃபேமிலியை ஃபோட்டோவோடு அறிமுகப்படுத்தும்போது ஆடியன்ஸ் அப்ளாஸ் மழை

ஹீரோவா நிவின் பாலி.  நல்ல முக வெட்டு மாதவன்  அப்பாஸ்   ஷாம்  போல   சாஃப்ட் ஃபேஸ். இவருக்கு ஏகப்பட்ட ரசிகைகள் கேரளாவில். இயல்பான நடிப்பு . அண்டர்ப்ளே ஆக்டிங். குட்  


ஹீரோவோட அப்பாவா  ரஞ்சி பணிக்கர், அம்மாவா  என்னம்மா இப்படிப்பண்றீங்களேம்மா புகழ் லட்சுமி ராமிருஷ்ணன் இருவரும் குணச்சித்திர நடிப்பில்  நம் மனம் கவரும்படி  அழகா பண்ணி இருக்காங்க.

 ஹீரோயின் ரெபோ மோனிகா ஜான். ஃபிகர் நல்லா தான் இருக்கு. ஆனா திரைக்கதையில் இவருக்கு வேலை இல்லாததால் எண்ணி சரியா 12 நிமிடங்கள் தான் வர்றார். எவ்ளோவ் சம்பளம் வேஸ்ட். தமிழ்ப்படமா இருந்தா கனவில் ஒரு டூயட் போட்டிருக்கலாம் அதுக்கும் வழி இல்லை


ஒளிப்பதிவு அருமை. துபாய் சாலைகள்  கட்டிடங்கள் எல்லாம் அழகா படம் ஆக்கப்பட்டிருக்கு

சபாஷ் டைரக்டர்

1   எடுத்துக்கொண்ட  கதை என்னவோ அதை நேர்த்தியாக ஒரு நெசவாளியின் பொறுமையுடன் சொன்ன விதம் அழகு


2 ஓவர் ஆக்டிங் யாருக்கும் இல்லை. மிக நேர்த்தியான நடிப்பு 

3   குடும்பத்துடன் பார்க்கும்படி காட்சி அமைப்புகள்  மிக கண்ணிய்ம்


லாஜிக் மிஸ்டேக்ஸ்

1  ஒரு சீனில்  ஹீரோவும் அவர் அம்மாவும் ஒரு உதவி கேட்டு ஒரு கோடீஸ்வர தொழில் அதிபரை பார்க்கப்போறாங்க. அப்போ அவர் தம் அடிக்கறார். இந்த அம்மா உணர்ச்சி வசப்பட்டு ராம் தாஸ் மாதிரி சூடாகி தாட் பூட் தஞ்சாவூர்-னு குதிக்கறாங்க. அவரும் சாரி சொல்றார். நிஜத்தில் இப்படி நடக்க வாய்ப்பே இல்லை.


 அதாவது எந்த  தொழில் அதிபரும் ஏ சி  ரூமில்   தன்னைப்பார்க்க வரும் லேடி கெஸ்ட் முன் தம் அடிக்க மாட்டார். இமேஜ் மெயிண்ட்டெய்ன் பண்ண.

அதே போல்  நாமே உதவி கேட்கப்போறோம் அடக்கி வாசிக்காம இப்டி  குதிச்சா  செய்யறவனும் உதவி செய்ய மாட்டான்2 ஒரு  சீனில்  ஹீரோ புது நோட்டுக்கட்டை  சாலையில்  தவற விடறார் . அது காற்றில் பறக்க மக்கள் பொறுக்கறாங்க. கஷ்டமான சூழலில் இருக்கும்  ஹீரோ அந்தப்பணத்தை பணக்கட்டை பின் அடிக்காமலோ ரப்பர் பேண்ட் போடாமலோ அப்படித்தான்  லூஸ்  நோட்சாக கொண்டு வருவாரா?


3   சிரமமான சூழலில் அப்பா மகன் யாரும் எந்த பேங்க்கையும் ஏன் அணுக வில்லை?அட்லீஸ்ட் ஒரு முயற்சி எடுப்பது போல் கூட காட்டவில்லை

இயக்குநருக்கு சில அட்வைஸ்

1  சில காட்சிகளில் கேரளாவை மட்டம் தட்டியும் ஃபாரீனை உயர்த்தியும் வசனம் வருது. வன்மையான கண்டனங்கள்.சாலைகள் குண்டும் குழியுமா இருக்கு ரோடு டாக்ஸ் கட்றோம் ஏன் இப்டி என்ற அங்கலாய்ப்பு சரிதான். ஃபாரீனில்  ரோடு சூப்பர் என்பதும் சரிதான் .ஆனால் குறை சொல்லும்போது நிறையும் சொல்லனும். நம்ம கலாச்சாரம் குடும்பம் பாரம்பரியம் இதெல்லாம் ஃபாரீனில் இல்லை. இதையும் சொல்லனும் ( எதிர்க்கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான்? ஃபாரீன்காரன் பார்த்தா என்ன நினைப்பான் நம்மைப்பற்றி?)


2  டாக்குமெண்ட்ரி டைப்பில் பல காட்சிகள்  ரொம்ப ஸ்லோ. வேணும்னே விருதுப்பட பாணியில்  திரைக்கதை அமைக்கபட்டிருக்கு. இன்னும் ஸ்பீடு ஏத்தி  இருக்கலாம்

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

ஜேக்கப்பிண்ட ஸ்வர்கராஜ்ஜியம் (நிவின் பால் மலையாளம் ) @ திருவனந்தபுரம் பத்மப்ரியா
நச் டயலாக்ஸ்

1 உன்னோட டிரஸ்சிங் சென்சை மாத்தனும்.கம்பெனி எம் டி ன்னா கோட் சூட் முக்கியம்.இடத்துக்கு ஏற்ற உடை தேவை s
2 பிடிச்சவங்க நம்ம கிட்டே பேசாம விட்டா நம் அகங்காரம் தானாக்குறையும் #;J S3 புதிய நாட்டில் புது ஆட்களுடன் நீ பணி புரிந்தால் உனக்கு வாழ்வில் புதுப்புது அனுபவங்கள் கிடைக்கும் S
4 வாழ்க்கைல 30,வயசுக்குள் செட்டில் ஆகிடனும்.25 டூ 30 நல்லா அனுபவிச்சிடனும் S
5 பிஸ்னெஸ் பண்ணலாம்னு இறங்கிட்டா லாபம் நட்டம் எல்லாத்துக்கும் தயாரா இருக்கனும் S6 வாழ்க்கையைக்கத்துக்க நீ வெளில எங்கயும் போக தேவை இல்லை.நீ வாழும் தெருவில் ஒரு நடை போய் வந்தாலே போதும் # JS7 படையப்பா படத்தில் வருவது போல் ஒரே பாட்டில் பணக்காரன் ஆக முடிஞ்சா நல்லாதான் இருக்கும்

ஆனா நிஜ வாழ்வில் அது நடக்காது


பூமியில் நீ வசிக்கும்போது மத்தவங்களுக்கு உதவினா சொர்க்கத்தில் உனக்கு இடம் உண்டு


மனிதர்களால் செயல்படமுடியா கையறு சூழ்நிலையில் தெய்வ அனுக்ரஹம் கிடைக்கும் S


10 குளிக்கும்போது பாத்ரூம் ல எட்டிப்பார்க்காத


பெரிய சல்மான் கான்.பாடியை காட்ட மாட்டாரு S11 நீ வாழும் காலத்திலேயே சொர்க்கம் பார்க்க நேர் வழி உண்டு.உன் குடும்பத்துடன் நீ செலவழிக்கும் தருணங்களே உன் சொர்க்க ராஜ்ஜியம்

12  
தொழில் முன்னேற்றத்தில் நீ யாரை முன்னோடியா எடுத்துக்குவே?

அதுல சைன் பண்ணவங்களை

இல்லை, உன் அப்பாவை முன்னுதாரணமா எடுத்துக்கோ


13 எதிராளியை உன் வசம் ஆக்க ஒரு வழி எதிராளியின் கண்ணைப்பார்த்து தீர்க்கமா உன் வாதத்தை முன் வைத்தல் #JS


14

 எந்த ஒரு பிஸ்னெஸ் மீட்டிங்கையும் நைட் டைமில் வை. அப்போதான் எல்லாரும் ரிலாக்ஸா இருப்பாங்க#JS


15 உ லகில் இருக்கும் ஒவ்வொரு 7 பேரிலும் ஒரு மலையாளி இருப்பான்னு கிண்டலா சொல்வாங்க. அதில் பொதிந்திருக்கும் உண்மை  நாம் எந்த நாட்டுக்குப்போனாலும் முன்னேறிடறோம்சி.பி கமெண்ட் -ஜேக்கப்பின்ட சொர்க்க ராஜ்ஜியம் (மலையாளம்)-,பார்ட்னரால் வஞ்சிக்கப்பட்ட தொழில் அதிபர் மீண்ட கதை.உண்மை சம்பவம்.பேமிலி பிலிம்.ரேட்டிங் - 3/5
Jacobinte Swargarajyam (2016) - Poster.jpg
First Look Poster
Directed byVineeth Sreenivasan
Produced byNoble Babu Thomas
Screenplay byVineeth Sreenivasan
StarringRenji Panicker
Nivin Pauly
T.G Ravi
Saikumar
Music byShaan Rahman[1]
CinematographyJomon T. John
Edited byRanjan Abraham
Distributed byLJ Films
Release dates
8 April 2016
CountryIndia
LanguageMalayalam

0 comments: