Monday, April 04, 2016

டாக்டர்! டெய்லி அரை கிலோ வெயிட் ஏறிக்கிட்டே இருக்கு

1 சார், எங்க பட டீசர் மார்ச் 13 ல வருது, நியூமராலஜி எப்டி இருக்கு?

13/3/2016 =1+3+3+2+0+1+6=16 =1+6 = 7 வருது,  ஏழுக்குப்பின் வருவது ஏழரை


============

2 ஏய் மிஸ்டர்! நான் எது சொன்னாலும் நீ நம்பிடுவியா?

 அப்டி இல்லையே?எல்லாரும் என் அழகைப்பாராட்னதா  நீங்க சொன்னதை நம்பலையே?


============

தலைவரே! குளம் சம்பந்தப்பட்ட தொகுதி தான் நமக்கு ராசியா?எப்டி?


சிம்ப்பிள் லாஜிக்.மகாமகம் குளம்.எதிரிக்கு கண்டம்.அப்போ குளம் நமக்கு ராசிதானே?==========

4 இன்னைல இருந்து பொண்ணுக கிட்ட பேசவே கூடாது.


ஆமா மாப்பி.10 அடி யாவது கேப் விடனும்.நீங்க 10 இஞ்ச் கேப் கூட விடாம கிட்ட போய் கடலை============

5 டியர்.போன வருசமும் ஜிமிக்கிதானே பர்த்டே கிப்டா தந்தீங்க?இந்த வருசமும் அதே ஜிமிக்கி தானா?


ஆமா.அதே தான்.அடமானம் வெச்சிருந்தது


===========

6 மேடம்.பாரத ரத்னா விருது கிடைக்கும்னு எப்டி நம்பறீங்க?


ரத்தத்தின் ரத்தம் ல ரத் இருக்கே?=========


7 டாக்டர்! டெய்லி அரை கிலோ வெயிட் ஏறிக்கிட்டே இருக்கு
அப்போ ஸ்லோமோஷன் பிராப்ளம் போல. பேதி மாத்திரை சாப்ட்டா சரி ஆகிடும்


============


8 பழம் நழுவி பால்ல விழப்போகுது, வெற்றி நமக்குதான்
தலைவரே! ஏற்கனவே கெட்டுப்போன ,திரிஞ்சு போன பால்ல பழம் விழுந்தா யாருக்கு என்ன லாபம்?


===============9 டியர், என்னை பிடிச்சிருக்கா? இல்லையா? தேங்காய் உடைச்ச மாதிரி சொல்லு
இருங்க, இன்னும் 3 பேர் ப்ரப்போஸ் பண்ணி இருக்காங்க
நீ என்ன தேமுதிகவா?===============
10 பழம் கனிஞ்சிடுச்சு
தலைவரே ! கனிஞ்சாத்தான் அது கனி, பழம், இல்லைன்னா காய்.
===============
11 மிஸ்! சைட் அடிச்சா கூட கீழ குனிஞ்சு பாக்குறிங்க ஏன்?
லூசு. மேலே பார்த்தா சூரியகிரஹணம் இல்ல?
================12 தலைவரே! கூட்டணி முடிவை எப்போ அறிவிப்பீங்க?
சூரியகிரஹணம் முடியட்டும், சொல்றேன்
ராக்கெட் ஏறிப்போய் சூரியன் கூடயா கூட்டணி வைக்கப்போறீங்க?===============
13 மிஸ்! உங்க ட்வீட்டை நீங்களே லைக் பண்ணிக்கறீங்களே? ஏன்?
நம்ம படைப்பை நாமே லைக்கலைன்னா மத்தவங்க எப்படி லைக்குவாங்க?
================
14 தலைவரே! ஏகப்பட்ட ரத்தினக்கற்கள் வாங்கி குவிச்சிருக்கீங்களே?எதுக்கு?
இந்தியாவிலேயே அதிக ரத்னக்கல் நம்மகிட்டேதான், பாரத ரத்னா நமக்கு தானே?===============


15 தலைவரே! உங்க குழந்தை 500 ரூபா நோட்டை முழுங்கிட்டானாமே?
ஆமா, அப்பனுக்குப்பிள்ளை தப்பாம பிறந்திருக்கான், பிற்காலத்துல பெரிய ஆளா வருவான்===============


16 ஜட்ஜ் = 134 பேங்க்ல லோன் வாங்கி இருக்கே, எதுக்கு?
கைதி= முதல் பேங்க்ல வாங்குன கடனை 2 வது பேங்க்ல லோன் வாங்கி அடைப்பனுங்க===============17 அரிசியை விட கம்புதான் உடலுக்கு நல்லது, கம்பு கூழ் டெய்லி சாப்ட்டா வலுவாகும் உடல்
டாக்டர்! உங்க “கம்பு”ராமாயணத்தை கொஞ்சம் நிறுத்தறீங்களா?================18 எங்க ஊர்ல தண்ணிப்பஞ்சம் இருப்பதால் நான் வாரம் ஒருவாட்டி தான் குளிப்பேன்
மேடம், கவர்ச்சி நடிகை இப்போ கவுச்சி நடிகை ஆகிட்டீங்க==============


19 நிச்சயதார்த்த விழாவில் செம சரக்கு பார்ட்டியாம்
அப்போ நிச்சய”தீர்த்தம்”னு சொல்லு==============


20 தலைவருக்குப்பிடிச்ச தமிழப்படம் எது?
பாலும் பழமும் பிடிச்ச பாட்டு ?
பாலும் பழமும் கைகளில் ஏந்தி, பாலிருக்கும்,பழமிருக்கும் பசி இருக்காது==================

0 comments: