Monday, April 11, 2016

விஜய் மல்லையாவும், தென் காசி டீச்சரும்

1   மார்ச் டூ மே  வெய்யில் கொடுமை ஜாஸ்தியா இருப்பதும் நல்லதுதான் ஒரு வகைல 

 எப்படி?

சூரியனால் தான் வெய்யில்னு நெகடிவ் ஓட்டு விழ ஒரு வாய்ப்பு இருக்கில்ல?

===============

என் டி எம் ஒர்க் ஆகலை,அதனால யாரும் டி எம் அனுப்ப வேண்டாம்

மிஸ், இதான் சாக்குன்னு அதை செக் பண்ண உங்க ஃபாலோயர்ஸ் எல்லாரும் டி எம்மப்போறாங்க

============

3  யுவர் ஆனர் , கட்சித்தலைவர் கிட்டே நல்ல பேர் எடுக்கத்தான் 3 பேரை உயிரோட எரிச்சோம்

ஓஹோ, அப்போ முதல்ல ஜெயில்ல தள்ள வேண்டியது கட்சித்தலைவரைத்தான்


==================


4 டியர், புது தோசைக்கல்லில் முதல் தோசை நல்லா வர மாட்டேங்குதே அது ஏன்?

விஜய் மல்லைய்யாக்கு கொடுத்த பேங்க் லோனும்,  புதுக்கல்லில் சுடும் தோசையும் 1. வராது


==================


5  சார், உங்க ஜோக்ஸ் எல்லாம் படிச்சா சுவரில் முட்டிக்கலாம்னு தோணுது

 அப்டியா? உங்க ஃபேஸ்புக் WALL ல போடறேன், அதுலயே முட்டிக்குங்க====================

6  மிஸ்! எதுக்காக என்னை கெட்ட வார்த்தைல திட்டுனீங்க?

என் கிட்டே ஒரு வார்த்தையாவது பேசுனாத்தான் ஃபாலோ பண்ணுவேன்னீங்களே?================


7 கடல் கன்னியை நேர்ல பார்த்தவங்க இருக்காங்களா?


கடல் கன்னியோட பாலோயர்ஸ் யாராவது எதிர் வீட்டில் குடி இருந்தா பார்த்திருப்பாங்க


============

8 பர்த்.சர்ட்டிபிகேட் பார்்க்காமயே அந்தப்பொண்ணுக்கு 19 வயசுதான் னு எப்டி சொல்றே?


மடோனா செபாஸ்"டீன்" ,அப்போ டீன் ஏஜ் தானே?
============

9 தலைவரே! ஒரு வேளை ( ஒரு பேச்சுக்கு) நீங்க ஜெயிச்சுட்டா துணை முதல்வர் பதவி யாருக்கு கொடுப்பீங்க?

 எனக்கு “வாங்கி”த்தான் பழக்கம். யாருக்கும் தரமாட்டேன்


===================


10   தலைவரே!  உங்க ஆட்சில ஏன் விஜய் மல்லைய்யாவை தப்பிக்க விட்டீங்க?

அவங்க ஆட்சில மட்டும் லலித் மோடியை தப்பிக்க விடலையா?அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா


==================


11 தலைவரே! மாடு எப்படி உங்களை முட்டுச்சு?இப்டி காயம் ஆகி இருக்கு?

4 நாளா தீனி போடலைங்கறது  தெரியாம தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார்?னு அது கிட்டேப்போய் கேட்டேன்=================


12 இன்ஸ்பெக்டர், 7000 கோடி ஏமாற்றி நாட்டை விட்டு ஓடிப்போன ஆளை பிடிச்ட்டீங்களா?

 அது முடியலை சார், வீட்டை விட்டு ஓடிப்போன டீச்சரை திருப்பூர்ல பிடிச்ட்டோம்


==================


13 ஏட்டய்யா, நான் மாசமா இருக்கேன். அவர் கூட என்னை சேர்த்து வைங்க
ஏம்மா? 2 பேரும் சேராம எப்டி மாசமா ஆனே?


================


14  சார், உங்க பொண்ணு கடல் கன்னியைக்காதலிக்கறேன்

 உனக்கு நீச்சல் தெரியுமா?

ம்ஹூம்

 அப்புறம் எப்டி டெய்லி நடுக்கடலுக்குப்போய்  அவளைப்பார்ப்பே?


=================


15    நைட் ஓவரா குடிச்சியா?

எப்டி தெரியும்?

வாசல்ல 6 ஃபுல் பாட்டில் கிடக்கே?


================

16 ஒரு பொண்ணு உங்க கிட்ட சாரி கேட்டா நீங்க என்ன செய்வீங்க?

நான் பதிலுக்கு பேன்ட் சர்ட் கேட்பேன்


============

17 பூரி ஒரு செட்

DMK பூரியா? ADMKபூரியா?
அப்டின்னா?
3,பூரி வாடிப்போய் இருந்தா அது DMK பூரி.செட்
2 பூரி பூரிப்பா இருந்தா அது ADMK பூரிசெட்

===========

18 தலைவரே! மேட்டூர் அணையை 80,வருசமா யாருமே தூர் வாரலையாமே ஏன்?

எங்கே டைம்?,ஒருவரை ஒருவர் காலை வாரி விடவே நேரம் சரியா இருக்கு


=============

19 டாக்டர்.சந்தோசமா இருந்தா சாப்புட முடியலயே..என்ன பண்ண?

உங்க சம்சாரத்தை நினைங்க.கடுப்பாகும்.டக்னு சாப்ட்ருங்க


===============


20 சார்.ஏழே கால் லட்சம் பேர் உங்களை பாலோ பண்றாங்க.ஆனா நீங்க வெறும் 24,பேரை மட்டும் பாலோ பண்றீங்க?

24 பட ப்ரமோ


================

0 comments: