Sunday, April 03, 2016

வசூல் மன்னன் ரஜினி? அஜித்?, விஜய்? - தீர்ப்பு

1 சக்தி வாய்ந்த மக்கள் பிரதிநிதிகளாக பெண்கள் உருவாக வேண்டும்: பிரதமர் மோடி # மாற்றத்தை அவரவர் வீட்டிலிருந்தே ஆரம்பிக்கலாமே?


==============


2 தனித்துப் போட்டியி டுவதாகக் கூறி தேர்தல் நிதி வசூலிக்கும் தேமுதிக! # வசூல் மன்னன் ரஜினியோ, அஜித்தோ, விஜய்யோ இல்லை, நம்ம கேப்டன்தான்


==============

3 சிறைக்குள் கவிதைகள் எழுதிய சஞ்சய் தத்: விரைவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது # டைட்டில் கல்நாயக் கவிதைகள்?


===============

4 அனைத்து கிராமங்களுக்கும் 2018ம் ஆண்டுக்குள் மின்வசதி எரிசக்தி பியூஷ் கோயல் #  நீங்கஆஃபீஸ்போய்ட்டா “ஃபியூஸ் போயிடுச்சு”ம்பாங்களா? உங்க வீட்ல


===============


“என்னை புரிந்து கொண்ட கதாநாயகன், விமல்” நடிகை அஞ்சலி # அப்போ ஜெய் ,மு களஞ்சியம் ?============6 10 நாட்களில் பா.ம.க. தேர்தல் அறிக்கை டாக்டர் ராமதாஸ் #11 வது நாள் திமுக தேர்தல் அறிக்கை
============
7 பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இயக்கம் தி.மு.க.கருணாநிதி மகளிர்தினவாழ்த்து

,ராசாத்தி,தயாளுஅம்மாள்,துர்காஸ்டாலின்,காந்தி அழகிரி

==========

8 தே.மு.தி.க.வில்இருந்து 300பேர் பா.ம.க.வில் சேர்ந்தனர்:விலகி வந்தவர்களுக்கு பதவி வழங்குவதாக ராமதாஸ் அறிவிப்பு
# நல்ல தலைவர்யா டாக்டர் அய்யா

===========

9 BJPதனித்து போட்டியிட தயார் நிலையில்- தமிழிசை # ஊரெல்லாம் பொண்ணு தேடியும் கிடைக்காதவன் நான் அய்யப்ப பக்தன் அதான் மேரேஜ் பண்ணலைன்னானாம்


===========

10 தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கை அமல்படுத்துவதுதான் முதல் கையெழுத்து: ஸ்டாலின் # கள்ளுக்கடை திறப்பு 2 வது,எலைட் சாராயம் 3 வது

============

11 தி.மு.க.வுடன்கூட்டணி:மயிலாடுதுறை தொகுதியில்போட்டியிடசீட் கேட்கும் டி.ராஜேந்தர்
# வாடா என் மச்சி வரப்போகுது நம்ம ஆட்சி. னு பாடுவாரா?

============

12 அரசு அலுவலகங்களில் இருந்து ஜெ படங்கள் உடனடியாக நீக்கம.# ்லட்சுமிராய்க்கே லட்டா? அமாவாசைக்கே அல்வாவா?ஸ்டிக்கருக்கே ஸ்டிக்கரா?


===========

13 அதிமுக அமைச்சர்கள் என்னோடு மேடையில் விவாதிக்க தயாரா? : மு.க.ஸ்டாலின் சவால்# பேசா மடந்தை னு தெரிஞ்சிட்டு பில்டப்.அவங்க எப்போ வாயைத்திறந்தாக

===========

14 விஜயகாந்தை கிங்மேக்கராக பார்க்க விரும்புகிறேன்: நடிகர் கார்த்திக் # நல்ல வேளை.சோடா மேக்கராப்பார்க்க விரும்பலை


=============

15 திமுக - காங் கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவில்லை என்றாலும் தேரை இழுப்போம் - வீரமணி # கல்லுக்குள் ஒளிந்திருக்கும் தேரை இழுத்தா கடிச்சிடும்


===============


16 ஸ்மிருதி இரானி எங்களுக்கு உதவவில்லை: விபத்தில் சிக்கியவர்களின் புகார்# மகளிர் தின சிறப்புப் புகாரா?விபத்துக்குக்காரணமே இரானியின் காரா?


=============

17 மனைவியை விற்க விரும்புவதாக முகநூலில் பதிவு செய்தவர் மீது வழக்கு # இனி எந்த முகத்தை வெச்சுக்கிட்டு மனைவி முகத்தில் விழிப்பார்?

===========

18 ரூ. 20,000 லஞ்சம் வாங்கிய மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு அலுவலகதுணைஇயக்குநருக்கு, 3 ஆண்டு சிறை # அப்போ 66 கோடி, 200 கோடி சுருட்டுனவங்களுக்கு?


==============

19 "எம்.பிக்களின் ஃபாரின் விசிட்”- புதிய நடைமுறை விதிகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு # இந்த விதி பிரதமருக்கும் பொருந்துமா?அவர் விதிவிலக்கா?

============

20 அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படவில்லை- ராஜேஷ் லக்கானி # இரண்டு வாழை இலைல சாப்ட்டீங்களாமே?அப்போ இரட்டை இலைக்கு ஆதரவுதானே?


==============

0 comments: