Friday, April 08, 2016

திமுக வின் கடைசி அஸ்திரம்

1  இன்னும் 10 வாரத்தில் தமிழகத்தை பிடித்த எல்லா கிரகணங்களும் விலகி விடும்!"-ராம்தாஸ் #,அரசியல்வாதிகள் எல்லாரும் பாரீன் போய்டுவாங்களா?===========2 ஜெ. சிறை தண்டனையை கண்மூடித்தனமாக ரத்து செய்தார் நீதிபதி குமாரசாமி- கர்நாடகா வக்கீல் தவே # கை மேல் பலன் கிடைச்சிருக்கும்

============
3 ரூ16.32 கோடி சொத்து குவிப்பு என்பது வருமானத்துக்கு அதிகமாக 76.7% - கர்நாடகா வக்கீல் தவே"# மாட்னது மல்லிகாஷெராவத் அளவு.மாட்டாதது நமீதா அளவு
=============
4 செக் மோசடி வழக்கு: மகளுடன் ஏப்ரல் 13-ம் தேதி ஆஜராக இயக்குனர் சேரனுக்கு கோர்ட் உத்தரவு # அதுவரை டெய்லி ஸ்டேஷன்ல போய் “ஆட்டோகிராஃப்”போடனுமா?
===========5 சிறை செல்வோமே தவிர ஒரு பைசா கூட அபராதம் செலுத்த மாட்டோம்: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உறுதி # சட்டத்தை நல்லாவே மதிப்பவர் போல, ரவி சர்க்கார்
============6 அரியலூர் அருகே அரசுப் பள்ளியில் போதையில் தடுமாறிய நாகல்குழி கிராம தலைமையாசிரியர் # போதை என்னும் புதை குழியில் விழுந்த பின் எதுக்கு HM பதவி?
==============7 திமுக விளம்பரங்கள் மக்களிடம் எடுபடாது: நடிகர் செந்தில் நம்பிக்கை # அப்போ கவுண்டமணி திமுக வில் இருந்தா மேட்சிங்கா இருக்குமில்ல?
============
8 அடுத்த வாரம் கூட்டணி அறிவிப்பு: தனித்து போட்டியிட மாட்டோம் -GKவாசன் # ஏன் பாஸ்? தனியா நடு ஜாமத்தில் சுடுகாட்டுக்குத்தானே போக பயம்?
=============9 ஊழலை எதிர்க்கும் விஜயகாந்துக்கு மக்கள் நல கூட்டணி தான் இயல்பான தேர்வு - வைகோ # பணம் தரும் கட்சியுடன் தான் கூட்டணி என்பதே கேப்டனின் இயல்பு
===============10 இறந்துவிட்டதாக தகவல் பதிவு: விக்கிபீடியா மீது பாஜக பெண் எம்.பி. அஞ்சு பாலா புகார் # வெரிகுட், எதற்கும் அஞ்சாத பாலா
=============11 மல்லையா தப்பிச் செல்ல எப்படி அனுமதித்தீர்?- ராகுல் கேள்வி # பிரதமரைப்பார்க்கனும்னார்.அவர் ஃபாரீன்ல இருக்கார்னதும் கிளம்பிட்டார்னு சமாளிங்க
===========12 அதிமுக இரண்டாக உடையப் போகிறது.-பிரேமலதா #ஆளுங்கட்சி எதிர்ப்பு வாக்குகளை பெற அது ஒரு தந்திரமாகவும் இருக்கலாம்
===============13 தேமுதிக தனியாக நிற்கும் - விஜய்காந்த் # இது இறுதியான முடிவாக எனக்குத்தோணலை, பேரம் படிய ஒரு மிரட்டலாகவும் இருக்கலாம்
===============14 தேமுதிக தனித்துப்போட்டி என விஜயகாந்த் அறிவிப்பு: கூட்டணி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி # இனிமே தான் மக்களுக்கு குழப்பமே ஆரம்பம்
==================15 திமுக,அதிமுக இரண்டுமே தில்லுமுல்லு கட்சிகள் - பிரேமலதா # ஏம்மா, இதை அப்பவே சொல்லி இருந்தா அவங்கவங்க அவங்கவங்க வேலையைப்பார்த்திருப்பங்கைல்ல

===============
16 விஜயகாந்த்தின் முடிவு நம்பகத்தன்மை இல்லாதது -அன்புமணி # ஆமா, அரசியலில் அவருக்கு முடிவு இல்லை, இது ஒரு ஆரம்பம் தான்
=================
17 மகளிர் தின பொதுக்கூட்டத்திற்கு தள்ளாடியபடி வந்த விஜயகாந்த் - செய்தி # தள்ளாடினாரோ இல்லையோ, அவர் அறிவிப்பில் பலர் ஆடிப்போய்ட்டாங்க
===============
18 தே.மு.தி.க. தனித்து போட்டி; விஜயகாந்த் திட்டவட்ட அறிவிப்பு # திமுக ,அதிமுக இரண்டையும் திட்டிட்டே விட்ட அறிவிப்பு============
19 ஜெ.,க்கு எதிரான மேல்முறையீடு சொத்து குவிப்பு வழக்கு மார்ச் இறுதிக்குள் தீர்ப்பு -செய்தி # திமுக வின் கடைசி அஸ்திரம்=============

20 மல்லையாவை தப்ப விட்டதாக காங். புகார்,ஐ.மு. அரசே கடன் வழங்கியதாக ஜெட்லி குற்றச்சாட்டு # லோன் குடுத்தது, வசூலிக்காம தப்ப விட்டது 2ம் தப்பு


==================

0 comments: