Tuesday, April 19, 2016

டாக்டர். பொண்ணுங்க பக்கத்துல வந்தாலே கை காலெல்லாம் நடுங்குது..

1 டியர், பொண்ணு பார்க்க வந்தப்போ மிளகாய் பஜ்ஜி வெச்சியே செம டேஸ்ட், அந்தக்கைக்கு முத்தம் தான் தரனும்அப்டியா? இருங்க எங்க அம்மாவைக்கூப்பிடறேன்
======================2 நீங்க இனிமே எண்ணெய்ப்பலகாரம் கிட்டேயே போகக்கூடாது, ஆயில் டேஞ்சர்ஓக்கே டாக்டர், என் சம்சாரம் பேரு ஆயில்யா. கிட்டே போலாமா?


===========

3

 டியர், நான் எழுதுன லெட்டர்ல உங்களுக்குப்பிடிச்ச வரி எது?

 உன் தங்கச்சி வீட்டு முக”வரி”

=================


4    டியர் , உனக்காக லட்சக்கணக்கில் செலவு பண்ணி இருக்கேன், நீ எனக்கு என்ன செஞ்சே? இப்டி பிளாட்ஃபார்ம்ல நிறுத்திட்டியே?

 சரி, இந்தாங்க 10 ரூபா, பிளாட்ஃபார்ம் டிக்கெட் எடுங்க


==================


5   டெய்லி உன்னை  ஏதாவது ஒரு பழம் சாப்பிடச்சொன்னேனே? ஏன் சாப்பிடலை?

 சாரி டாக்டர் , பழம் நழுவி பால்ல விழட்டும்னு பார்த்துட்டு இருந்தேன்


=================

6  டீச்சர், என் கட்டுரைல எதுனா எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை இருக்கா? பார்த்து  சொல்லுங்க

ம்ம், இலக்கணப்பிழை கில்மாப்பட  டிவிடி வேணும்னு சுத்தி வளைச்சுக்கேட்கறியா? இந்தா================

7  

 இந்த ஜவுளி லோடை ஈரோட்டுக்கு கொண்டு போகனும்

 சரிங்க எஜமான். ரோஸி எங்கே வந்து லாரில ஏறிக்கும்

 டேய். அது ரோசி இல்லை ஏ சி. இன்னும் பரிசீலனையில் தான் இருக்கு


==================


8   டாக்டர்,திடீர் திடீர்னு ரெய்டு வந்துடுது எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. கையும் ஓடல,காலும் ஓடல!

தலைவரே! கால் தானே ஓடும்?


=============

9 தலைவரே! கூட்டணிக்கு ஓக்கே சொன்னா உங்களுக்கு  சிலை வைக்கறாராம்

 ஓக்கே சொல்லலைன்னா?

 உலை வைப்பாராம்,

================10  யுவர் ஆனர் , காதலிச்சது போதும். நான் அம்மா கூட வே போறேன்

 உங்க அம்மா கூடவா? உன் குழந்தைக்கு அம்மா கூடவா?=====================


11  ஆக்‌ஷன் படங்களை தடை பண்ணீட்டாங்களாமே?நாம எப்டி இனி குப்பை கொட்றது?

யோவ் அது விக்ஸ் ஆக்சன் 500 டேப்லட்

 ===================

12 மிஸ்! நாளைக்கு நீங்க  பச்சைக்கலர் சேலை தானே கட்டப்போறீங்க?
 யா, எப்டி தெரியும்?
நேத்து சிவப்பு, இன்னைக்கு மஞ்சள், ட்ராஃபிக் ரூல்ஸ் பிரகாரம்  அடுத்து பச்சை தானே?


================

13    டியர். நிஜமாவே என்னை லவ் பண்றீங்கதானே?
கிட்டத்தட்ட காதலன்
அதென்ன கிட்டத்தட்ட?
நீ என் கிட்டே இருக்கும்போது லவ்வுவேன்,தள்ளிப்போய்ட்டா டவுட்


=====================


14  சண்டே ஊற வெச்ச துணியை  நேத்து மண்டே துவைச்சதுக்கு அம்மா திட்னாங்களா? ஏன் மேடம்?

 ஊற வெச்சது போன வாரம் சண்டே==================


15  டியர், என் காதுக்கு இனிப்பான ஒரு சேதி சொல்லுங்க பார்ப்போம்

 ம், 2 பவுன்ல ஜிமிக்கு வாங்கி கிஃப்ட் பண்றேன்


===============


16  டியர், கர்ச்சீஃபோ , பேனாவோ யாருக்காவது பரிசாக்குடுத்தா அவங்களுடனான தொடர்பு முறிஞ்சிடுமாம்

அடடா, இந்த டெக்னிக் எனக்கு இத்தனை நாளா தெரியாம போச்சே?


==================


17 டியர்.உங்க கனவுல நான் வர்றேனா?


நீயும்


==============

18 மிஸ் விலாசினி.உங்களுக்கு சுகர் இருக்கு.


டாக்டர்.இனி என்ன பண்ண?
சைன் பண்றப்ப விலா"சீனி"னு பண்ணுங்க.நினைவுபடுத்திட்டே இருக்கும்=============

19 டாக்டர். பொண்ணுங்க பக்கத்துல வந்தாலே கை காலெல்லாம் நடுங்குது..


யோவ்.முதல்ல ஒரு பொண்ணு கிட்டே.சிங்குலர்
அப்புறம் ப்ளூரல்===============

20

தலைவரே! பாரத் மாதா கி ஜெ சொல்ல  மாட்டீங்களா? ஏன்?


 நான் பாரத் மாதா கி கலைஞர்னு தான் சொல்வேன்.

====================

0 comments: