Friday, April 22, 2016

சிம்பு தேவன் vs அட்லி

1  கொய்யாப்பழம் என ஒன்று இந்த உலகில் இல்லை, எல்லாபழங்களும் மரத்தில் / செடியில்/ கொடியில் இருந்து கொய்த பழங்களே!


===============2 ஒரு கரணை ( 10 செமீ நீளம் உள்ள துண்டு ) கரும்பை கடித்து சாப்பிட்டால் அது  உங்கள் 32 பற்களையும் வாட்டர் வாஷ் செய்ததற்கு சமம்,
==============
நம் பேச்சில் அன்பும்,பாசமும் இருந்தால் எதிரிகளை கூட நண்பர்கள் ஆக்கிடலாம் ;))னு சொல்ற ஐடி பேரு திமிரான தமிழச்சி, அன்பான தமிழச்சினு மாத்திக்கலாம்
==============4 அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு . ரேஷன் கடைல விஷத்தை கொடுத்தாக்கூட அளவு கொஞ்சம் கம்மியாதான் இருக்கும் போல
==============
5 ஒரு வார இதழுக்கு சிறுகதை அனுப்பினேன். நல்லா இல்லை என்ற பின் குறிப்போட திருப்;பி அனுப்பினாங்க.படிக்க படிக்க பிடிக்கும் படிச்சுப்பாருங்கன்னு திருப்பி அனுப்பிட்டேன்
===========6  உங்க முதுகில் குத்தினது துரோகியாத்தான் இருக்கனும்னு அவசியம் இல்ல.காதலி கூட செல்லமா குத்தி இருக்கலாம் # புறமுதுகில் குத்திய பூந்தளிர்===========7 இளைஞர்கள்.வார்த்தைகளில் கண்ணியம் ,கருத்தில் பெண்ணியம் ,உடையில் தமிழ் மண்ணியம்.இந்த கிழ போல்ட்டுங்க தான் சகிக்க முடியாத அளவு லூட்டி அடிக்குது
==========
8 செல்போனில் பேட்டரி தீர்ந்து போன போது சிறிது பார்வை ஜன்னல் பக்கம் வீசப்படும்
========
9 கடலை போடுவது உனக்கு உற்சாகத்தையும் உன்னை வேடிக்கை பார்ப்பவருக்கு கடுப்பையும் ஒருங்கே தர வல்லது
==========10 அம்மாக்கள் எப்போதும் சின்ன வெங்காயத்தை நறுக்கித்தான் வெங்காய தோசை சுடுவாங்க.பொண்டாட்டிங்க பெரிய வெங்காயம்.ஏன்னா அது அரிவது ஈசி
=========11 வாழ்க்கையில் யாரையும் கறிவேப்பிலையாய் ஒதுக்கிவிடாதீர்!,உணவில் கறிவேப்பிலையை தினம் சேர்ப்பீர்.அது கூந்தலுக்கு நல்லது
=============12 உணவு உண்ண உகந்த நேரம்


காலை 8 டூ 9

மதியம் 1 டூ 2
இரவு 8 டூ 9
தூங்க இரவு 10 டூ அதிகாலை 5 / 11 டூ 6


=============

13 கிரவுண்டுக்கு வராமல் அவரவர் வீட்டு மொட்டை மாடியிலேயே வாக்கிங் போய்விடும் ஹை க்ளாஸ் பிகர்களை மென்மையாக கண்(ண)டிக்கிறேன்


============

14 கூந்தல் சுருட்டையா அடர்த்தியா வளரனும்னு அமாவாசை அன்னைக்கு கூந்தல் நுனி ல கொஞ்சம் வெட்டி விட்ருவேன்.ஓஹோ.கர்லிங் ஹேர் கட் அழகி?


============

15 காலை உணவு தவிர்த்து விட்டால் ஒல்லி ஆகலாம் என நினைப்பது தவறு.அல்சர் தான் வரும்


============

16 சிம்பு தேவன் = நீங்க நிஜமா விஜய் ரசிகரா? அஜித் ரசிகரா?
அட்லி = அது இருக்கட்டும். நீங்க வடிவேலுவை வெச்சே செம ஹிட் கொடுத்த ஆளு.ஆனா......


==============

17 பிழைப்புத்தேடி வெளியூர் போகும் பேச்சிலர் பசங்க எல்லாம் 16 வயசுலயே சமையல் கத்துக்கறாங்க, பொண்ணுங்க 23  வயசு ஆனாலும் இன்னும் அம்மா முந்தானையையே பிடிச்ட்டு இருக்காங்க


=================


18  நெட் தமிழன் தன்னை விட 6 வயசு சீனியர் அக்கா கிட்டே  லவ் ப்ரபோஸ் பண்ணிட்டு இருக்கான்.நல்ல வேளை, அக்கா ஐ ல வ் யூ சொல்லலை=============

19  சாதம் மீந்து போனா தண்ணீர் ஊற்றி பின் தாளிச்சு அதை பொடி சாதம் ஆக்குவதும், இட்லி மீந்து போனா அதை உதிர்த்து இட்லி உப்புமா ஆக்கி சுவை கூட்டுவதும் அம்மாக்கள் கை வந்த கலை


====================

20  
ஒடுக்கப்பட்ட இனத்திற்கு இருக்கும்  வலியை விடக்கொடுமையானது அன்புக்கு உரியவரால் ஒதுக்கப்பட்ட  தருணத்தில் உண்டாகும் வலி

===================


0 comments: