Tuesday, April 12, 2016

ஆண்களுக்கு ஆபத்து என வதந்தி: வீடுகள் முன்பு பெண்கள் விளக்கேற்றி வழிபாடு

2ஜி ஊழல் 5 வருடம் முன்ன நடந்தது அதை இன்னும் பேசுறோம் - குஷ்பு # உலகமே வியந்து பேசும் அளவு பிரம்மாண்டமான ஊழல் ஆச்சே மேடம்?===============2 திமுக பலமாகவே உள்ளது

அதை அசைக்க முடியாது - கனிமொழி # அப்பா எதிர்பார்த்த பழம் கிடைச்சிருந்தா பலம் ஆகி இருக்கும்

=================

3 திமுகவை அழிக்கவே அதிமுக ஆசைப்படி அனைவரும் தனித்தனி அணி அமைக்கிறார்கள-மு.க # தோல்வி என்பது அழிவு கிடையாது, எதிர்க்கட்சிகளிடம் தெளிவு கிடையாது


=============

4 2016 சட்டமன்ற தேர்தலில் மாற்றம் வந்தால்தான் நாட்டை காப்பாற்ற முடியும்; குஷ்பு # கைக்கு எட்ட வேண்டியது மாம்பழத்துக்கு எட்டப்போகுது உங்க பேச்சால


===============
5 சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட வேண்டும்; சீமான் # தனக்குக்கிடைக்காதது வேற யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதே நாம் தமிழர் கொள்கை===========
6 அனைத்து பெண்களின் வாக்குகளும் பா.ம.க.வுக்கே கிடைக்கும்’ - அன்புமணி # இது உண்மைன்னு தெரிஞ்சா இந்நேரம் கலைஞர் உங்களை கூட்டணிக்கு வலிந்து அழைத்திருப்பார்
==============
7


  • வேட்பாளர்கள் தவறான தகவல் அளித்தால் 2 ஆண்டு சிறை: மத்திய அரசு பரிசீலனை # எல்லாரும் ஜெயிலுக்கு போய்ட்டா யாருக்கு தமிழன் ஓட்டுப்போடுவான்?

================தாடகை ஆட்சியை அகற்ற கருணாநிதிக்கு ஆதரவு தாருங்கள்

- பழகருப்பையா # பழம் கிடைக்கும்னு பார்த்தா பழ கருப்பையா கிடைச்சிருக்கு, சரி வந்தவரை லாபம்=================


9 தஞ்சை விவசாயியின் வங்கிக்கணக்கில் ஒரு லட்சம் போட்ட காமெடி நடிகர் ் கருணாகரன் # கருணை கரம்============

10 விஜயகாந்த் தலைமையில் 15 கட்சிகள் கூட்டணி: திடீர் திருப்பம்! # 1+15= 16 ம் பெற்று பெரு வாழ்வு வாழ் னு கலைஞர் வாழ்த்துவாரா?

============


1 1 சம்பள பாக்கியை வாங்கி கொடுங்க: மோடிக்கு கடிதம் எழுதிய கிங்பிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் # சம்பளமும் தர்லையா? மல்லைய்யா.இதெல்லாம் நல்லாலைய்யா


============

12 கூட்டணிப் பேச்சு... 5 கட்சித் தலைவர்களைச் சந்தித்தார் ஜெ # ஹால்ல ஒரு சேர் தான் போட்டிருந்திருக்குமே?

============


13 நெருங்கும் சட்டசபை தேர்தல்: துப்பாக்கிகளை ஒப்படைக்க நெல்லை கலெக்டர் உத்தரவு # கத்தி வெச்சிருக்கலாமா? அதையும் ஒப்படைக்கசொல்லுங்க


============


14 திமுக கூட்டணிக்கு 13 அமைப்புகள் ஆதரவு # நல்ல ராசியான நெம்பர் ஆச்சே 13.13ம் நெம்பர் வீட்லயா கூட்டணிப்பேச்சுவார்த்தை?


==============


15 செக் மோசடி வழக்கு. மல்லையாவுக்கு ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்ட் பிறப்பிப்பு # நல்லவேளை ஒரு செக் தான்மோசடி. இல்லை செக்ஸ் மோசடி ஆகி இருக்கும்


==============


16இன்னும் 2 மாதம் பொறுத்திருங்கள்: விவசாயிகளுக்கு கருணாநிதி வேண்டுகோள் # அதுக்குப்பின் ஃப்ரீ ஆகிடுவாரு தலைவர்


==============17 முதலில் இந்தப் பக்கம் வாங்க விஜயகாந்த், பேசிக்கலாம்: வைகோ அழைப்பு # பக்கத்தில் வந்தால் என்ன தீந்த்தனா @ உறவைக்காத்த கிளி


=============

18 அதிமுகவிற்கு இந்தியக்குடியரசுக் கட்சி ஆதரவு # இந்தியக்குடிமகனான எனக்கு இப்டி ஒரு கட்சி இருப்பதே இன்றுதான் தெரியும்


=============


19 அ.தி.மு.க.–தி.மு.க.விற்கு எதிரான வாக்குகளே பா.ஜனதாவின் இலக்கு: இல.கணேசன் # நமக்குன்னு சொந்தமா வாக்கு வங்கி இல்லை என்பதுதான் பேடு லக்கு


==============

20 ஆண்களுக்கு ஆபத்து என வதந்தி: வீடுகள் முன்பு பெண்கள் விளக்கேற்றி வழிபாடு # பெரும்பாலான ஆபத்தே பெண்களால் தானே ஆம்பளைக்கு வருது?

==============0 comments: