Tuesday, April 26, 2016

முதல் இரவு என்பது....

உன்னை விட பிரபலமான ஒரு பெண்ணைக் கல்யாணம் கட்டிக்கொண்டால்  உன் அடையாளம் இழப்பாய் # சானியா மிர்சா புருசன்================  சமூக வலைத்தளங்களில் ஆண்கள் யாரும்  தான் வாங்கிய டிகிரி யை தன் ஹேண்டிலில் சேர்ப்பதில்லை. ஆனால் பல பொண்ணுங்க டிகிரி சேர்த்துக்கறாங்க # நீதி - ஆண்  அடக்கம்
==============வாலிப வயோதிக அன்பர்களே! இன்று உலக சிட்டு குருவிகள் தினம்.சேலம் போய் சிட்டுக்குருவி லேகியம் சாப்பிடாம மாடியில் குருவிுக்கு தண்ணீர்.வைப்பீர்!
==========
4 ஜித்து ஜில்லா டி


ஊழல் புரிவதில் நான் கில்லாடி.
கூச்சப்படாமல் வாக்கு சேகரிப்பேன் ஓடி ஓடி


===========

5 அன்புக்கு உரியவர் உனக்கு ஆசிட் டெஸ்ட் வைத்தால் அந்த எக்சாம் ஹாலுக்கே போகாமல் எஸ்கேப் ஆகி விடு


=============

6 ஒரு கிலோ மீனுக்கு எவ்வளவு மசாலா வேணும்ங்குற அளவு கூட தெரியலை.


மிஸ்!,நமக்குதான் மண்டைல மசாலா இல்லையே.அம்மாக்கு போன் பண்ணி கேட்கலாமில்ல?=============

7 வெற்றிகரமான திரைக்கதையின் முதல் விதி பார்வையாளனை திரைக்கதையுடன் பயணிக்க வைப்பதில் இருக்கிறது


===========

8 மனிதனுக்கு கஷ்டங்கள் வரும்போதும் வறுமை.வாட்டும்போதும் கடவுள் நம்பிக்கை கூடும்

==========

9 சுயநலமி உனக்கு உதவும்போது கண்ணுக்குத்தெரியாத செக் வைத்திருப்பார்கள்


=============


10 கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் தனக்கு சாதகமாக உபயோகிக்க முயல்பவனின் ஜாதகத்தை பிரம்மன்.அவன் இஷ்டப்படி எழுதிட முடியாது


============

11 பெற்றோரை விட்டு தனிக்குடித்தனம் வருபவன் அதிர்ஷ்ட தேவதையின் அரவணைப்பை அவனையும் அறியாமல் உதறுபவன்


===============

12 எந்த சந்தர்ப்பத்திலும் போலீஸ் ,அரசியல்வாதி , வகையறாக்களை நம்பி விடாதே!


============


13 தன் பசிக்காகப்பிச்சை எடுப்பவன் இரக்கம் காண்பிக்கப்படவேண்டியவன்.தன் ஆடம்பர வாழ்வுக்காக வாக்குப்பிச்சை எடுப்பவன் வெறி நாயை விட ஆபத்தானவன்


===========

14 எதிரியை ஜெயிக்க அவன் மனதில் மானசீக பயத்தை முதலில் ஏற்படுத்தனும்.சதுரங்கத்தில் ,அரசியலில் ,வாழ்க்கையில்

==============


15 நஷ்டப்படுவதற்குத்தன்னிடம் எதுவும் இல்லை என்ற சூழ்நிலையில் ஏற்படும் துணிச்சல் அசாத்திய தைரியம் தரும்


==============


16 குந்தவை வீட்டில் இன்றைய டிஃபன் சந்தவை அடடே!!


==============

17 திமுக என்பது தமிழ் நாட்டின் சூரியகிரஹனம்

அதிமுக என்பது சந்திரகிரஹனம்.
இரண்டாலும் தமிழகத்துக்கு ஆபத்தே!சூரியகிரஹனம் பாதிப்பு அதிகம்==========

18 அன்பே  எமி!  நீ டூயட் சீனில் போட்டிருக்கும் டிரஸ் ரொம்ப கம்மி==============19  1 எவ்ளோ

2 அழகா
3 பாடறாங்க
4 சித்ரா
5 சேச்சி
6 அடடே!

அப்டின்னு ஒரே ஸ்டேட்டசா போட வேண்டியதை 6 ஸ்டேட்டஸாப்போடும் புத்திசாலித்தனம் பெண்களுக்கு மட்டுமே உரித்தானவை


==================

20 முதல் இரவு என்பது பெரும்பாலான தமிழ்ப்பெண்களுக்கு கண்ணைக்கட்டி COT ல விட்டது போல் தான்


==================

0 comments: