Friday, April 08, 2016

LOVE GAMES - சினிமா விமர்சனம் ( ஹிந்தி) கில்மா க்ரைம் த்ரில்லர் 18+

சிவனும் சக்தியும் ஒண்ணாசேர்ந்தா மாஸ்டா-ன்னு பாடுன மாதிரி மகேஷ்பட்டும்,விக்ரம் பட்டும் ஒண்ணா சேர்ந்தா கில்மாடான்னு தாராளமா சொல்லலாம். இவங்க படங்கள் எல்லாவற்றிலும்  கொலை, கிளாமர்  கில்மா  நிச்சயம் இருக்கும். உலகப்புகழ்(!!??) பெற்ற மல்லிகா ஷெராவத்-ன் மர்டர் ஹிந்திப்படம் எடுத்தவங்களாச்சே ( இது ஹாலிவுட் படமான அன் ஃபெயித் ஃபுல் ஒயிஃப் படத்தின் தழுவல்- படம் பூரா  யாராவது  யாரையாவது தழுவிட்டே  இருப்பாக)இந்தப்படத்தோட கதையும்  விவகாரமானதுதான்.ஹீரோ செல்வராகவன் படங்கள் ல வர்ற ஹீரோ போல் ஒரு சைக்கோ. அதாவது டென்சன் ஆனா  தன் கையை தானே மணிக்கட்டில் கட் பண்ணிக்குவார். இவரோட சம்சாரம் விநோதமான கேரக்டர். லைஃப்ல எதுனா த்ரில்லிங்கா பண்ணிட்டே இருக்கனும். அதுக்கு தன் புருசனை பகடைக்காயா  யூஸ் பண்ணிக்குது.

சம்சாரம் லவ் கேம்ஸ் ஆட ஆசைப்படுது.அதாவது  ஒரு பார்ட்டி நடக்கும் இடத்துக்குப்போக வேண்டியது. அந்த கூட்டத்தில் சந்தோசமா இருக்கும் தம்பதியை தேர்வு செய்ய வேண்டியது.ஹீரோ அந்த ஜோடில இருக்கும் லேடியை, ஹீரோயின் அந்த ஜோடில இருக்கும் ஆணை கரெக்ட் பண்ணனும். இன்னும் விளக்கமா சொல்லனும்னா எக்சேஞ்ச் ஆஃபர் மாதிரி , ஆனா சம்பந்தப்பட்ட ஜோடிக்கு மேட்டர் தெரியக்கூடாது.

 இந்த கேவலமான  கேம்ல  ஹீரோ ஜெயிச்சுடறார். அந்த லேடியை கரெக்ட் பண்ணி  மியாவ்  முடிச்சடறார். ஹீரோயினும் தான் ஆனா அவர் ஃபர்ஸ்ட் , இவர் செகண்ட்


அடுத்தது தான் வில்லங்கம். அடுத்ததா ஒரு  ஜோடியை செலக்ட் பண்றாங்க


அதுல புருசன் கிரிமினல் லாயர் . சம்சாரம் டாக்டர்.அந்த லாயர்  புருசன் ஒருசந்தேகப்பேர்வழி. சம்சாரம் கூட அடிக்கடி சண்டை. லவ் கேம்ல அடுத்த டார்கெட்  இவங்க தான்.


இதுல  ஹீரோயின் ஜெயிச்சுடுது. அந்த கிரிமினல் லாயரை மியாவ் முடிச்சுடுது. ( ட்விட்டர் ல அபிஷேக் மியாவ், மியாவ் பாய்ஸ் பெயர்க்காரணம் இப்போ புரிஞ்சிருகுமே எல்லோருக்கும் )( இந்த மியாவ்க்கு ஒரு விளக்கம். கன்னிப்பருவத்திலே படத்துல ஆண்மை இழந்த  ராஜேஷ் சம்சாரத்தை (வடிவுக்கரசி)கே பாக்யராஜ்  ஏக்கமா பார்க்கும்போது பிஜிஎம்மா மியாவ் வரும். அப்போ இருந்து மியாவ் = ஹிஹி)


ஹீரோ அந்த லேடி டாக்டரை நிஜமாவே லவ் பண்ண ஆரம்பிச்சடறார். இது  சம்சாரத்துக்குப்பிடிக்கலை.அவங்களை எப்படியாவது  பிரிக்கனும்னு கிரிமினல் வேலை எல்லாம் செய்யுது.

ஒரு கட்டத்தில்  ஹீரோயினும் அந்த லேடி டாக்டரும் ஒண்ணு சேர்ந்து என் புருசனை  நீ கொன்னுடு , உன் புருசனை நான் கொன்னுடறேன்னு ஒப்பந்தம் போடுறாங்க.

 இது எப்டி இருக்குன்னா கேப்டன் ஆள் சந்திரகுமாரை  திமுக விலைக்கு வாங்குனதும்  கேப்டன் கட்சி பொருளாளர்  அழகிரியும் கனிமொழியும் எங்க கட்சில இணையப்போறாங்கன்னு சொல்ற மாதிரி.


 இந்த கொலைல கிரிமினல் லாயர் செத்துடறார். ஆனா  ஹீரோ சாகலை. லேடி டாக்டரை  கொலை செஞ்சுட்டதா நாடகம் ஆடி தன் மனைவியை எப்படி  ஏமாத்தறார் என்பதே மிச்ச மீதிக்கதை.
ஹீரோ க்கு நல்ல வாய்ப்பு. 4  ஃபிகரோட  கில்மா சீன்.ஹீரோயின் தகர டப்பா  ஃபேஸ். ஃபைனான்சியர் பொண்ணா இருக்கும்.


அந்த லேடி டாக்டர்  நல்ல ஃபிகர் . அதுதான் மெயின். அதை வெச்சுதான்  கதை சதை எல்லாம் நகருது. வில்லனா வரும் லாயர்  வேஸ்ட்

ஒளிப்பதிவு டாப். இந்த மாதிரி கில்மாப்படத்துக்கு கேமரா தானே  முக்கியம்?இசை  ஓக்கே ரகம். எடிட்டிங்க்  பக்கா 


 சபாஷ் மீனா 


1   லேடீஸ்  கேரக்டர்ஸ் எல்லோரும்  நல்ல ஃபிகர்சே   ஹீரோயின் தவிர 

2   பார்ட்டிகளில் நடக்கும்  கொடுமைகளை  துகில்  உரித்தது

3  காமெடி  டிராக்  சோகப்பாடல்  எதுவும் வைக்காதது


4  லேடி  டாக்டர்  பிணம்  போல்  நடிப்பது எப்படி என டெக்னிக்கல் விளக்கம் தரும் காட்சி  , க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  குட்


லாஜிக் மிஸ்டேக்ஸ்


Tara Alisha Berry has done an important role in Love Games. (YouTube)

1 கிரிமினல் லாயர்  லேடி டாக்டரை சித்ரவதை பண்றார்.  அதை ஹீரோவிடம்  முறையிடறார். லாயர்  ஹீரோயின் கிட்டே கசமுசா பண்றப்போ எடுத்த  வீடியோ க்ளிப்பிங் கை வசம் இருக்கும்போது அதை வெச்சு  அவரை  மிரட்டலையே ஏன்?

2 போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்ட ( தாக நம்பப்பட்ட)லேடி டாக்டர்  மார்ச்சுவரியில்  ஐஸ் பெட்டியில்  ஒரு இரவு முழுக்க எப்படி தாக்குப்பிடித்தார்?

3 சந்தேகப்பிராணியான  கிரிமினல் லாயர்  ஓப்பனிங்  சீனில் தன் மனைவியை பார்ட்டி நடக்கும் இடத்தில் ஹீரோ கூட விட்டுட்டு கிளம்புவது ஏன்?


நச் டயலாக்ஸ் 


வாழ்க்கைல எது ஈசியா உன் கைக்கு கிடைக்குதோ அது மேல் உனக்கு சுவராஸ்யம் இருக்காது , குறிப்பா காதல்ல #LOVE GAMES( HINDI)


எனக்கு இது பிடிக்கும்னு உனக்கு எப்டி தெரியும்?
 பிடிச்சவங்களுக்கு எது பிடிக்கும்னு தெரிஞ்சு வெச்சுகறது எனக்குப்பிடிச்ச விஷயம் #LOVE GAMES( HINDI)


3  தனியா இருக்கியா? போர் அடிக்கலை?

 தனியா இருந்தா போர் அடிக்கும்னு யார் உனக்கு சொன்னது?#LOVE GAMES( HINDI)


4  இப்டி பைத்தியகாரத்தனமா நடந்துக்காத

காதலிக்காத ஒரு நபர் காதலிக்கறவங்களைப்பார்த்து இது பைத்தியக்காரத்தனம்னு எப்டி சொல்லலாம்?அது ஒரு பைத்தியகாரத்தனம் இல்லையா?#LOVE GAMES( HINDI)


5   காதல்ல கிடைச்ச ஏமாற்ற வலி வலிக்காம இருக்க கை மணிக்கட்டில் காயம் பண்ணிக்கறது சைக்கோத்தனம்தான்,ஆனா வலியை மறக்க வேற வழி தெரியல#LOVE GAMES( HINDI)


சி.பி கமெண்ட் -LOVE GAMES (HINDI) -  எ ஸ்டோரி ஆஃப் எக்சேஞ்ச் ஆஃபர் ஆஃப் எ கப்பிள்-கில்மா க்ரைம் த்ரில்லர்- ரேட்டிங் = 1.75 / 5 கண்ணியமான கில்மாப்படம்

 திருவனந்தபுரம் ரம்யா தியேட்டர்ல ரம்யமான இந்தப்படத்தை 70 MM A/C டிடிஎஸ்  ஆரோ 3 டி ல பார்த்தேன்

Love Games is an upcoming Indian urban-thriller film directed by Vikram Bhatt and produced by Mukesh Bhatt and Mahesh Bhatt. The cast of the film includes Patralekha, Gaurav Arora and Tara Alisha Berry. It will be released on 8 April 2016. Wikipedia 
Release dateApril 8, 2016 (India)

0 comments: