Wednesday, April 27, 2016

அடாது கேப்டன் அடம் பிடித்தாலும் விடாது கலைஞர்

1  தேமுதிக உடன் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை
-கருணாநிதி # அடாது கேப்டன் அடம் பிடித்தாலும் விடாது கலைஞர் பேச்சு வார்த்தைக்கு அழைப்பார்


============

2 தென் மாவட்டங்களில் கூலிப்படை ஆதிக்கம் அதிகரிப்பு- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்உ.வாசுகி # அப்போ வட மாநிலங்களில் சம்பளப்படை ஆதிக்கம் அதிகமா?


==============



3 மீண்டும் திமுக கூட்டணி குறித்து ஆலோசனை: மாவட்ட செயலாளர்களுடன் விவாதிக்க விஜயகாந்த் முடிவு # பேரம் படியுது, கேட்ட வரம் கிடைக்குது



============




4

விஜயகாந்துக்கு நெருக்கடி கொடுக்க மாட்டோம் : தமிழிசை # இப்டித்தான் அடிக்கடி சொல்றீங்க, ஆனா விடாம துரத்திட்டு தானே இருக்கீங்க?



===============


5

கோவையில் அரிய வகை 'பறக்கும் பாம்பு' மீட்பு # தேர்தல் கமிசனின் பறக்கும் படைல சேர்த்து விட்ருங்க, அவனவன் ஆடிப்போய்டுவான்


===============


தேர்தலில் சீட் வாங்கும் ஆசையில் ரூ.1 கோடி வரை பறிகொடுத்த அதிமுகவினர் # தூண்டிலில் இருக்கும் சின்ன மீனே ஒரு கோடின்னா கூடையில் இருக்கும்  பெரிய மீன் எத்தனை கோடியோ?



============

இந்தியாவுக்கு கடவுள் தந்த பரிசுதான் மோடி: வெங்கய்ய நாயுடு புகழாரம் # கடவுளுக்கு நன்றி காணிக்கையாய் மோடி தரும் பரிசுதான் ஃபாரீன் டூர்


==============


வைகோ, திருமா வருகைக்காக காத்திருந்து ஏமாந்த விஜயகாந்த் # காத்திருந்த மில்லி மில்லி வேர்த்திருக்கு புள்ளி புள்ளி புதுசா வருமா கூட்டணி?


================

9 டெல்லியில் நாய்களைக் கொலை செய்யும் கொடூரனுக்கு போலீஸ் வலைவீச்சு # டெல்லில நாய்கள் ஜாக்கிரதை போர்டை ஹிந்தில எழுதி மாட்டனும்


=================



10 விஜயகாந்த், பிரேமலதா மீது விமர்சனம் வேண்டாம்-அதிமுக

பேச்சாளர்களுக்கு ஜெ., திடீர் தடை # சஸ்பென்ஸ் படத்துல க்ளைமாக்ஸ்ல தான் ட்விஸ்ட் வரும்


================

11 பொன்னான வாக்கு:டிராபிக் ராமசாமியுடன் ம.ந.கூட்டணி # எறும்பு போல் ஒவ்வொரு வாக்கா சேகருக்கறாங்க போல

============


12 அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்தது பிழைதான்:பழசை நினைத்து வருந்தும் வைகோ # நல்ல வேளை, கலைஞர் கூட இருந்ததும் பிழை தான்னு சொல்லலை

================

13 வெற்றிகொடியைபார்த்தால் 92 வயதுபலனைஅடைவேன் - கருணாநிதி# அன்னக்கொடி, பூங்கொடி, மலர்க்கொடி எல்லாம் பார்க்கக்கூடாதா? வெற்றிக்கொடியேதான் வேணுமா?


===============

14 கருத்துக் கணிப்புகள் பணம் கொடுத்து வெளியிடப்படுபவை- சமாஜவாதி கட்சி ஆஸம் கான் # மக்கள் செம்மறி ஆடுகள்னு நினைச்ட்டாங்க போல



================

15 மூழ்கும் கப்பல் போல் உள்ள திமுக தற்போது தேமுதிக கூட்டணிக்காக கெஞ்சிக்கொண்டிருக்கிறது: அன்புமணி # கூட்டணி அமைஞ்சுட்டா திமுக வுக்கு அது டானிக், அமையலைன்னா டைட்டானிக்


==================


16 சோதனை என்ற பெயரில் வணிகர்களிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்யக் கூடாது-தேர்தல் கமிசன் #இதைக்கண்காணிக்கு இன்னொரு படை அமைக்கனும்


=================

17 

======================

18 

பல்லடம்-மது அருந்திய கணவரை அரிவாளால் வெட்டிய மனைவி # வெரிகுட், வீட்டுக்கு வீடு இப்டி வெட்டினாப்போதும், மது விலக்கு தேவை இல்லை



===================


19 

ஒரே நாளில் 1.71 லட்சம் டன் நிலக்கரி வெட்டி எடுப்பு: என்எல்சி புதிய சாதனை # 2 ஜி ஊழல் கவுண்ட்டிங்க்கையே மிஞ்சிட்டாங்களே?



==================


20 

அதிமுகவில் தொகுதிக்கு 3 பேருக்கு அழைப்பு: நேர்காணலை நடத்தினார் ஜெ # யாருக்கு முதுகு ? போல் வளைஞ்சு இருக்கோ அவங்களுக்கு சீட் 


====================

0 comments: