Tuesday, April 26, 2016

இந்த குலுக்கலை உங்களுக்கு வழங்குபவர் உங்கள் சரிதா நாயர்?

தேமுதிக-விடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை - ஸ்டாலின் # நீங்க கெஞ்சுனீங்க.அவர் மிஞ்சினார் னு ஓப்பனா சொல்லுங்க.இதுல எதுக்கு கூச்சம்?==========2 நடைபெறவுள்ள தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் -கருணாநிதி # நம்பிக்"கை"தான் வாழ்க்"கை"
============3 இந்த நச்சுப் பாலைத்தானே 30 ஆண்டு காலம் குடித்தார் வைகோ.. சுப.வீ கிண்டல் # நச்சுப்பால் தான் திமுக னு ஒத்துக்கறீங்க.இந்த நேர்மை பிடிச்சிருக்கு
===========4 நாகர்கோவிலில் சசிகலா..நாகராஜா கோவிலில் சாமி கும்பிட்டார் # 5 வருசம் பூரா பாவம் பண்ணிட்டு கோர்ட் கேஸ்.தேர்தல் வந்தா கோவில் போனா பாவம் தீருமா?
==========5 தொகுதி பங்கீடு தொடர்பாக முதற்

கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்துள்ளது: வைகோ # எல்லாரும் பிரிச்சுக்கிட்டது போக மீதி 200 தொகுதியை என்ன செய்யப்போறீங்க?


===============


6 கட்டாயப்படுத்தி கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை: பாமகவுக்கு தமிழிசை பதில் #தாமரை க்கும் , மாம்பழத்துக்கும் ஆகறதே இல்லை எப்பவும்


================


7 கலைஞரின் பெருமைகளை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் -சுப.வீரபாண்டியன் # யாருக்கு சார் நம்ம தலைவரோட அருமை பெருமை எல்லாம் தெரியாம இருக்கு?==================

8 ஓட்டு போட்டால் குலுக்கலில் பரிசு:கேரளாவில் தேர்தல் கமிஷன் அதிரடி  #  இந்த குலுக்கலை உங்களுக்கு வழங்குபவர் உங்கள் சரிதா நாயர்?


===============


கூட்டணி அரசுக்கு தி.மு.க., தயாரில்லை என ஸ்டாலின் திட்டவட்டம்! # அட்லீஸ்ட்  ஊழலிலாவது பங்கு தருவீங்களா?


==========================

10 பணம் பறக்கிறது; பறக்கும்படை 'கப்சிப்': கருணாநிதி கண்டனம் #  எல்லாரும் நம்ம ஃபார்முலாவையே ஃபாலோ பண்றாங்களேன்னு தலைவர் மனம் பரபரக்குது==================


11 தேர்தல் வெற்றிக்காக யாகம் செய்த
-திமுக # மக்களுக்கு நல்லது மட்டும் செய்ய மாட்டாக.ஊழல் செய்வாக ,அராஜகம் செய்வாக ,யாகம் செய்வாக

==========

12 கிரிக்கெட் போட்டியில் தேசிய கீதம் பாட அமிதாப்புக்கு 4கோடி ரூபாய் #,தேசிய கீதம் இயற்றியவருக்குக்கூட அவ்ளோ சன்மானம் இல்ல


============

13 அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு இல்லை. - ஸ்டாலின் # ரன்னிங் ரேஸ் நடக்காததுக்கு முன்னமே சேட்டு கிட்டே கப் க்கு பேரம் பேசுன மாதிரி


=============


14 விஜய் ஒருவார்த்தை பேசினாலும் நறுக்கென்று இருக்கும் : நடிகை மீனா # நறுக் னு கிள்ளிட்டாரோ?

=========

15 மற்றவர்களுக்கு இலக்கை நீங்கள் நிர்ணயுங்கள்: ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை . # எப்டி?இந்த 100 கோடி ரூபா வசூல் டார்கெட் போலவா?

=============

16 வைகோ இல்லத்தில் ம.ந.கூ. தலைவர்கள் பேச்சுவார்த்தை! விஜயகாந்த்துக்கு மீண்டும் அழைப்பு!"# டேக் ஆப் ஆன விமானம் டக் அவுட் ஆகிடுச்சா?


============

17 திராவிட இயக்கம் பழுத்த மரம்.... எத்தனை கற்களை வீசினாலும் அது தாங்கும்!- ஸ்டாலின் # வீசுன கல்லை வீணாக்காமல் கல்குவாரில வித்துடுவாரு


==============


18 என் ஒரே எதிரி கலைஞர்!
-சீமான்! # அவரோட அனுபவத்துக்கு நீங்க எல்லாம் உதிரி மிஸ்டர் சீமான்


===========


19 விளம்பரமே பிடிக்காதவர் அம்மா-நாஞ்சில் சம்பத் # டி வி ல விளம்பரம் வந்தா டக்னு சேனல் மாத்திடுவாராம்


=============

20 தேமுதிகவுடன் பேசி வருகிறோம் -கலைஞர் # பேசிப்பேசியே ஆட்சியையே பிடிச்சவர் ஆச்சே?


===============

0 comments: