Friday, April 29, 2016

இப்போ நமக்கு நாமே பொய் சொல்வது அப்பாவா? பையனா?

தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வரலாம்: இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை’ கருணாநிதி # ஆனா கழகத்தோட மானம் ,மரியாதை இழந்துட்டமே?


============

2 மக்கள்நல கூட்டணியில் விஜயகாந்த் கைகோர்க்க இருக்கிறார்’ சென்னை ஆர்ப்பாட்டத்தில் வைகோ #,விமானம் கிளம்பிட்டதா மானஸ்தர் சந்துரு சொன்னாரே?

=============

3 எந்த துறையாக இருந்தாலும் பெண்கள் வளர்ந்து மேலே வருவது கடினம்: ரம்யா # விமானப்பணிப்பெண் துறையில்?"


===============


4 மக்களை சந்திப்பது முதலமைச்சர் வேலை கிடையாது. - சி.ஆர்.சரஸ்வதி # மக்களைப்பற்றி சிந்திக்காதவங்களுக்கு முதல் அமைச்சர் வேலையே கிடையாது


==========


5 கூட்டணிக்கு நானாக யாரையும் அழைப்பதில்லை - கருணாநிதி
# நரம்பில்லா அரசியல்வாதி நாக்கு எப்டி வேணா பேசும் என்பதற்கு வாழும் உதாரணமே!

==============

6 விஜயகாந்த் வாசலில் காத்துக்கிடக்கிறார் கருணாநிதி -வைகோ # இதை விஜ ய்காந்த் வீட்டில் கொல்லைப்பக்கத்திலிருந்து வழங்குபவர் உங்கள் வை கோ


==================

7

குடும்பத் தகராறில் கொல்லப்பட்டாரா கலாபவன் மணி..? : மனைவி, மாமனாரிடம் தீவிர விசாரணை # மாமனார் வீட்டில் சாப்பிடுவோர் எச்சரிக்கை, ரசம் ல விஷம் வெச்சிடப்போறாக


================

8 கருணாநிதி கட்டுப்பாட்டில் திமுக இல்லை- வைகோ குற்றச்சாட்டு # கடமை, கண்ணியம் , தட்டுப்பாடு================

9 ரூ.40 செலுத்தினால் வண்ண வாக்காளர் அட்டை வீடு தேடி வரும்... தேர்தல் ஆணையம் அதிரடி # அய்யோ அப்போ அது இன்னா 40 , இலவசமா தந்தா இனியவை 40

==============

10 

5 ஆண்டுகளாக பதவியில் நீடித்த 7 அமைச்சர்கள்.. ஜெ. ஆட்சியில் # ஏழரையை சந்திக்காத 7 அரைகுறைகள்

=================


11 தேமுதிகவுக்கு புதியதாக அழைப்பு விடுக்கப்படவில்லை- பேச்சுவார்த்தையும் இல்லை... - மு.க.ஸ்டாலின் # இப்போ நமக்கு நாமே பொய் சொல்வது அப்பாவா? பையனா?


==============


12 நாட்டிலேயே நம்ம சென்னை மாநகர பேருந்துகளில் தான் கூட்டம் அதிகமாம்! # பிக்பாக்கெட் திருடனுங்களுக்கு கொண்டாட்டம், ஜனங்களுக்கு திண்டாட்டம்


===============

13 தமிழர்களை முட்டாளாக்கிய விஜய் டிவி...! - பின்னணி பாடகரை போட்டியாளராக்கி 70 லட்சம் மோசடி # பின்னணியில் இருந்த மோசடி முன்னணிக்கு வந்துடுச்சா?


================


14 கலாபவன் மணி மரணத்தில் நீடிக்கும் மர்மம்: மாமனார் பூச்சி மருந்து வாங்கியது உறுதி # அடப்பாவி விருந்து சாப்பிட அழைச்சு மருந்து வெச்சுக்கொன்னுட்டீங்களா?

==============


15 விருப்பமில்லாத விஜயகாந்தை கட்டாயப்படுத்த மாட்டோம்!- தமிழிசை # படுத்தி எடுத்துட்டீங்களே

=============


16 ஆபாச பாடல் வழக்கு மே 12ல் கோவை கோர்ட்டில் அனிருத் ஆஜராக உத்தரவு # ஒண்ணு”மே” புரியல உலகத்துல-ன்னு சோகமா பாடுவாரோ?


===========


17 திமுக வின் நிலை கவலை அளிக்கிறது _வைகோ # நம்ம நிலைமையை முதல்ல கொஞ்சம் நினைச்சுப்பாருங்க தலைவரே!3% ஓட்டுக்கு வழியைக்காணோம், 35% வாக்கு வங்கி உள்ள கட்சியைப்பார்த்து கவலை எதுக்கு?


===============

18 வீராட் கோலிக்கு காதல் வலை வீசும் பாகிஸ்தான் நடிகை # பாகிஸ்தானுக்கு பொண்ணு குடுப்போம், ஆனா இந்தியப்பெண்ணைத்தான் கட்டுவோம்


=========

19 தி.மு.க கூட்டணிக்கு தே.மு.தி.க.வுக்கு புதிதாக அழைப்பு எதுவும் விடுக்கபடவில்லை -மு.க ஸ்டாலின் # கலைஞர் = இருக்கு
ஸ்டாலின் = ஆனா இல்லை
மக்கள் = ஒரே தொல்லை


================

20 பெல்ஜியம் நாட்டின் தலைநகரான ப்ரஸெல்ஸ்
விமான நிலையத்தில் இன்று குண்டுவெடிப்பு # யாரும் இது பற்றி வார்னிங்க் பெல் அடிக்கலையா?

=================

0 comments: