Friday, April 01, 2016

டேய், நீ எவ்ளோ லோன் வாங்கினே?

1  டுட்டர்ல நாம இல்லனா யாராவது தேடறாங்களா


மிஸ்! நாமதான் காடாறு நிமிசம், நாடாறு நிமிசம்னு ஃபேஸ்புக்ல, ட்விட்டர்ல மாறி மாறி இருக்கமே?

===========

2 ஒரு ஊர்ல ஒரு ராசா இருந்தாரு

1001 படங்களுக்கு இசை அமைச்ச ராசாவா?1000 கோடிக்கு மேல் சுருட்டுன ராசாவா? எந்தக்கதை? தெளிவா சொல்லுங்க


============

என் பொண்ணுக்கு பையன்னாலே அலர்ஜி டாக்டர்


அதுக்காக life"boy" சோப் கூட போட மாட்டேன்னா எப்டி?===========

4 ஹலோ.டியர்.இன்னைக்கு என்ன டிரஸ் ?சேலை?சுடி?


சொல்லமாட்டேன்
அப்போ எதுவுமே போடலைனு கற்பனை பண்ணிக்குவேன்.பரவால்லியா?


==========

5 தலைவரே! தீக்குளிப்பேன்னு சொன்னீங்களே?,யாருக்காக வெய்ட்டிங்?


மகளிர் அணித்தலைவி வரட்டும்.சேர்ந்து குளிக்கலாம்னு


============

6 மேடம்.உங்க கணவரை கட்சியில் சேர்ப்பீங்களா?


யா.விரைவில் சுந்தர் சி சுந்தர் சி எம் ஆவார்===========


7 நமக்கு நாமே நடைப்பயணத்தால மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது
என்ன மாற்றம் தலைவரே?
ஸ்டாலின் இப்போ இளைச்சு ஸ்டா”லீன்” ஆகிட்டாரில்ல?

================

8 தலைவரே! போலீஸ் வந்திருக்கு


?
தீக்குளிப்பேன்னு தற்கொலை மிரட்டல் விடுத்ததுக்கு சட்டப்படி 6 மாசம் நக்மா இல்லாத ஊர்ல ஜெயில்ல போட்ருவாங்களாம்


===========


9 7 பேர் உயிர் காப்பாற்ற ஒரு உயிர் போனால் பரவாயில்லை என யுத்த சாஸ்திரம் கூறுவதால் தியாகச்சுடர் திருமூர்த்தி இப்போது தீக்குளிப்பார்

=========

10 தலைவரே! நம்ம கூட்டணியோட பலம் என்ன?


மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்.அது முடிந்த பின்னும் ஒரு பேச்சிருக்கும்.
கடமை ?.
நோ.குஷ்பூ ,நக்மா============

11 மேடம்.அந்த கட்சியை விட்டு ஏன் விலகினீங்க?


அது வந்து.. ஆங்.கொள்கை பிடிக்கலை.
ஓ.இப்போ நீங்க இருக்கும் கட்சி யார் கூட கூட்டணி?
ஹிஹி


===============

12 தலைவரே! எந்த வயசு வரை ஒருவர் இளைஞர்?


18 டூ 30
அப்போ இளைஞர்.அணித்தலைவர்?
60 டூ 80


==============


13 டேய், நீ எவ்ளோ லோன் வாங்கினே?
1000 ரூபாங்க
உனக்கு 6 மாசம் ஜெயில், சார், நீங்க?
5000 கோடி
ப்ளீஸ் சார், 10% ஆவது கட்டுங்க================


14 தலைவரே! வயல்ல நாத்து நட்டுட்டு இருக்கும் பொண்ணை எதுக்கு கட்டிப்பிடிச்சீங்க?
விவசாயிகளை அரவணைப்போம்னு சொன்னமில்ல?சொன்னதைத்தான் செய்வோம்==============


15 தலைவரே! நலத்திட்டங்கள் அறிவிப்பதில் நீங்க தான் நெ 1, எப்படி?
90% கமிஷன் அடிச்ட்டு மிச்சம் மீதியை பிச்சை போட்ருவேன்============16 தலைவரே! உங்க மனைவிக்கு விஷம் வெச்சு கொலை பண்ணும் தைரியம் எப்டி வந்தது?
சசி தரூர் = மோடியை வாழ்த்தி அப்பப்ப ஒரு கவிதை சொல்லிடுவேன்==============

17 டியர், நீ சுமாராதான் இருக்கே.


வாட்?நீ தானே சொன்னே -மனசுக்குள்ளே ஒளிச்சி வைக்கிறதை காட்டிலும் உளறி கொட்டி விடுங்கள்-னு=============


18 டியர், உங்க மேல ரொம்ப மரியாதை வெச்சிருந்தேன், அது இப்போ போய்டுச்சு
ஏன்?
சொப்பன சுந்தரியை நான் தான் வெச்சிருந்தேன்னு சொன்னீங்களே?==========


19 தலைவரே! உங்க வீட்டு வாசல்ல ஏகப்பட்ட ஓட்ஸ் பாக்கெட் இருக்கே? டயட்டா?
ஓட்டுப்போடுங்கன்னேன். ஓட்ஸ் போட்டுட்டாங்க போல==============


20 ஜட்ஜ் = நகைக்கடைல திருடும்போது எப்டி மாட்னே?
கைதி = கால வரையற்ற ஸ்ட்ரைக்னு சொல்லி 4 நாள்ல ஓப்பன் பண்ணிட்டாங்க அய்யா============

0 comments: