Tuesday, April 05, 2016

விஜய் மல்லைய்யாவுக்கும் மோடிக்கும் என்ன ஒற்றுமை?

1  ஜட்ஜ் = 10 வருசத்துக்கு முன் 200  கோடி திருடுனியா?

கைதி = ஆமாங்க எஜமான்

ஜட்ஜ் = உனக்கு 200 கோடி அபராதம்

நன்றிங்க, வட்டி மிச்சம்

==============

2 மிஸ்டர்! லவ் லெட்டர்னே, இதுல எதுவுமே எழுதலையே?

ஏதாவது எழுதுன லெட்டர்னா போலீஸ் கிட்டே புகார் தருவீங்க, இப்போ என்ன செய்வீங்க?


=================


3 டியர், பழம் நழுவி பால்ல விழும்னு நினைச்சேன்

 என்னாச்சு?

 பாழுங்கிணத்துல விழுந்திடுச்சு, வடை போச்சே

 குழப்பாதீங்க, பழம் தானே போச்சு?


==================


4 சார், திரட்டி ஃபங்க்சன்ல எள் தர்லை.

எதுக்கு தரனும்?

பெண் வயக்சுக்கு வரும்போது எள்ளுருண்டை கொடுப்பாங்கன்னாங்களே?
யோவ், அது அந்தப்பொண்ணுக்கு

=================

5 இனி ஃபேஸ்புக் வர மாட்டேன், ஒரு பையனை லவ் பண்றேன்

 மிஸ்! எப்படியும் அவன் வேற யார் கூடயாவது கடலை போடறானா?னு கண்காணிக்க வருவீங்க இல்ல?


================


6 மன்னா! இது கோவலனின் செல் ஃபோன் தான்

கண்ணகி, ஏதாவது ஆதாரம் இருக்கா?

 அதுல டூயல் சிம் இருக்கும் பாருங்க, அவருக்கு எல்லாமே டபுள் தான்

================

7 ஜட்ஜ் = எப்படி திடீர்னு ஃபாரீன் போனீங்க?

விஜய் மல்லைய்யா = 7000 கோடி அடிக்கனும்னு முடிவு பண்ணப்பவே ஃபிளைட் புக் பண்ணிட்டனுங்க


================

8 தலைவரே! எப்போ ஃபாரீன் போறீங்க?

இப்போத்தானே 200 கோடி அடிச்சிருக்கேன், இன்னும் அடிக்கவேண்டியது 6800 கோடி இருக்கு,விஜய் மல்லைய்யாவை முந்தனும்


=================

9 டாக்டர்! நாளைக்கு என்னை டிஸ்சார்ஜ் பண்ணிடுவீங்களா?

 ஆமா, நாளை சண்டே, நர்ஸ்ங்க எல்லாம் லீவ், எந்த பயமும் இல்லாம நிம்மதியா அனுப்பலாம்


================

10 சார்! உங்க பொண்ணு என்னை விரும்புது, கட்டி வைங்க.

 விரும்புதா? ஏதாவது ஆதாரம் இருக்கா?

 ஃபேஸ்புக்ல நான் எந்த ஸ்டேட்டஸ் போட்டாலும் லைக்குது

=================


11 பழம் நழுவி பால்ல விழும்னு நினைச்சேன், ஆனா அதுக்குள்ள...

என்னாச்சு தலைவரே?

சைடு டிஷ் நழுவி சரக்குல விழுந்திடுச்சு


==================


12 வரலாறு மிஸ் வனஜா= புராணக்கதை ஏதாவது சொல் பார்ப்போம்

லொள் மாணவன் = சுய புராணக்கதை வேணா சொல்ட்டா? டீச்சர், வெட்கப்படாம கேளுங்க


================

13 பைத்தியம் மாதிரி லூசுத்தனமா மெண்டல் மாதிரி இருக்கேன்

 குட் மிஸ்! உங்களை மாதிரி இயல்பா இருக்கும் பொண்ணுங்களை பிடிக்கும்


===============

14 மேனேஜர் சார், வழக்கமா லோனுக்கான வட்டி 0.8% தானே, திடீர்னு 2% வசூல் பண்றீங்க?

7000 கோடி நட்டத்தை இப்டித்தான் வசூல் பண்ணி சரி செய்வோம்


================

15 டியர், முதல் இரவில் வந்து என்ன வேடிக்கை? வெய்ட்டிங்க்?

பழம் நழுவி பால்ல விழட்டும்னு பார்த்துட்டு இருக்கேன்

நாசமாப்போச்சு, சரியான சோம்பேறி

=================


16 டியர், உங்களூக்கு புல்லாங்குழல் வாசிக்கத்தெரியும்மா?

ம்ஹூம், குமுதம் , விகடன் , சினிமித்ரன், திரைச்சித்ரா வேணா டெய்லி வாசிப்பேன்


==============

17 டியர், நான் எப்போ வெளில கிளம்பினாலும் என் கையை இறுக்கமாப்பிடிச்சுக்கறீங்களே?என்னைப்பிரிய முடியலையா?

நீ போய்ட்டா செலவுக்கு பணம் யார் தருவா?


===============


18 சொத்துக்குவிப்பு வழக்குக்கு சாட்சியா ஒரு பசு மாட்டை ஏன் கோர்ட் க்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க?
66 கோடி சொத்து சேர்த்தது யார்?னா அம்மாங்கும்


===============

19 ஜட்ஜ் = விஜய் மல்லையாவை பார்த்தீங்களா?

மோடி = இதை ஏன் என் கிட்டே கேட்கறீங்க?

நீங்களும் வெளி நாட்ல இருக்கீங்க, அவரும் அங்கே தானே இருக்கார்?

================

20 உங்களுக்கு உமா வைத் தெரியுமா?

 தெரியும், விஜய் ரசிகை, தெறிஉமா


=============

0 comments: