Monday, April 25, 2016

அதிகம் சம்பளம் வாங்கும் பெண்ணைக்கண்டால்

தன்னை விட அதிகம் சம்பளம் வாங்கும் பெண்ணைக்கண்டால் ஆணுக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விடும்


===========

2 பெரும்பாலான பெண்களின் பெரும்பாலான அழுகை தனக்கானதாக இருக்கும்.ஒரு ஆணின் அழுகை பிரியமான பெண்ணுக்காக இருக்கும்

==========

3 ஒரு ஆணின் செல்வத்தை/பதவியைப்பார்த்து காதலித்த பெண்கள்.பலருண்டு.ஆனால் எந்த ஆணும் பணத்துக்காக எந்தப்பெண்ணையும் காதலித்தது இல்லை

==========


4 கோபம் ,எரிச்சல் ,ஆத்திரம் ் ஒருவர் மீது வந்த பின்பும் அவரை விட்டு விலக மட்டும் மனம் வர வில்லை எனில் அவரே உன் அன்புக்கு உரியவர் என்பதை உணர்

===========

5 நடிகர்கள் தன் மனம் கவர்ந்த பெண்ணை மணக்கிறார்.கள்.ஆனால் நடிகைகள் மட்டும் தொழில் அதிபர்களாகப்பார்த்து தேடி காதலித்து மணக்கிறார்கள்்

===========

6 நாம் சாப்பிட்ட வாழை இலையை நாமே எடுத்து விட்டால் அது வாழை இலை.அடுத்தவரை எடுக்க விட்டால் அது எச்சில் இலை

=========

7 தேர்தலில் வெற்றி பெற கட்சிக்கு கூட்டு முக்கியம்.வாழ்வில் ஆரோக்யம் தழைக்க உணவில் கூட்டு ,பொரியல் முக்கியம்.உணவின் அளவு 75% பொரியல் 25%

============

8 சனிக்கிழமை என்பது சின்ன ஞாயிறு.திங்கட்கிழமை என்பது பெரிய ஞாயிறு.மொத்தத்துல ஆபீஸ்ல வாரம் 3 நாள் ஒரு பயலும் வேலை செய்யறதில்லை


============

9 ஒரு படைப்பாளியின் படைப்பு வாசகர் இதை ஏற்றுக்கொள்வார்களா?என்ற பயமோ சந்தேகமோ கொள்ளாமல் தோன்றியதை அப்படியே படைக்கப்பட்டதாக இருக்க வேண்டும்

============

10 மொக்கையா எதுனா எழுதுனா நெட் தமிழன் ஓடி வந்து துக்கம் விசாரிக்கறான்.சுமாரா எதுனா எழுதிட்டா இது உங்களுதுதானா?னு சந்தேகப்படறான்

============

11 காலைல 8 மணிக்கு ஒரு நெட் தமிழன் நான் நல்லவன் னு சூடம் அணைச்சு சத்யம்செஞ்சான், இப்போ ஒரு பொண்ணு கிட்டே உம்மா குடுக்கறியா?ன்னு கேட்கான்


=============

12 ஒரு பூனை கிட்டேப்போய் இன்னைக்கு உங்க வீட்டம்மா  சவுமியா  வீட்ல என்ன சமையல்?ன்னேன் அது  சே”மியாவ்”னுச்சு- நன்றி - ராமராஜன்


==================

13  சிக்ஸ் பேக் வைத்திருக்கும் வீரர் சிக்சர் அடிப்பார் என எதிர்பார்ப்பதும் ஒரு வித மூட நம்பிக்கையே


===================


14  அன்பை வளர்க்கத்தெரிந்த எனக்கு அதை வெட்டியெறியவும் தெரியும்

வெட்டுதல் , எறிதல் இதுவெல்லாம் புரிதல் இல்லாதவர்கள் செய்யும் செயல்


===============

15 அன்பு எனப்படுவது யாதெனின் தனக்கு சாதகமாக இல்லாத போதும் தன் அன்புக்குரியவரை விலகி இருந்து எப்போதும் போல் நேசிப்பதே!


===============


16 தன்னை விரும்பியவரை விரும்பி வெறுக்கும்போது தானும் வெறுப்பவர் கண்ணாடி இதயம். விரும்பினாலும், வெறுத்தாலும் விரும்பிக்கொண்டே இருப்பவர் முன்னோடி இதயம்


============

17 உன் வெற்றியின் இலக்கு தூரம் குறைக்கப்பட்டால் உன் வேகம் ஆரம்பத்தில் இருந்தே அதிகரிக்கப்பட வேண்டும்


=================


18 திருடியது நீயாக இருந்தாலும் உன்னை போலீஸ் துரத்தினாலும் அய்யய்யோ திருடன் திருடன் என கத்திக்கொண்டே ஓடினால் நீ தப்பித்துக்கொள்ளலாம்=================


19 கிரிக்கெட் ரசிகையை திருமணம் செய்தவன் மேட்ச் நடக்கும்போதெல்லாம் மேட்ச் இல்லாமல் திண்ணையில் தான் படுப்பான்


================

20  மழை வந்தால் காதலருக்கு , தம்பதியருக்கு , விவசாயிக்கு  சந்தோஷம். நடை பாதை வியாபாரிகளுக்கு , கிரிக்கெட் மேட்ச் ரசிகர்களுக்கு தர்மசங்கடம்


======================

0 comments: