Monday, April 04, 2016

எதிர் வீட்டு ஃபிகர் பேரு மேரி, நான் சொன்னது தப்புன்னா ஐ ஆம் வெரி சாரி

மொபைல் சேவை அடுத்து கேபிள் டிவிக்குள் நுழையும் "முகேஷ் அம்பானி"..# மு"CASH" அம்பானி பேர்லயே துட்டு இருக்கு


============2 கொளத்தூரில் மீண்டும் போட்டியிடுகிறார் மு.க.ஸ்டாலின் # குளம் மூழ்கடிக்காம இருந்தா சரி.வழுக்கி விடாம பார்த்துக்குங்க==========3 தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேரும் என்ற நம்பிக்கை நிச்சயமாக இருக்கிறது. -கலைஞர் # நம்பிக்"கை"ல தானே வாழ்க்"கை" இருக்கு தலைவரே
==============4 ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது கேட்ட அதிமுக எம்பிக்கள்.. # எவ்ளோவ் விலையா இருந்தாலும் பரவால்லையாம்
==========5 இளங்கோவன் தலைவர் ஆனதால் காங்கிரஸ் கட்சி வளர்ந்துள்ளது: நடிகை குஷ்பு பாராட்டு # இது இளங்கோவனுக்கே அதிர்ச்சி தகவல்
==========6 கருணாநிதியிடம் விஜயகாந்த் ஏமாந்து விடக்கூடாது: வைகோ #,ஏற்கனவே ஏமாந்தவர் எச்சரிக்கை=========7 இந்த தேர்தலில் ரஜினிகாந்தின் தாக்கம் இருக்காது: இளங்கோவன் # க"பாலிடிக்ஸ் இல்லாம தமிழக அரசியலா?
==========8 தேமுதிக கூட்டணி


பழம் கனிந்துவிட்டது
பாலில்
முடிவாகவில்லை-மு.க
எப்போது விழுமென
# எப்படியாவது ஜெயிச்சுடலாம்னு மனப்பால் குடிக்காதீங்க தலைவரே!


==========

9 கருணாநிதியிடம் விஜயகாந்த் ஏமாந்து விடக்கூடாது: வைகோ
$ மக்கள் ஏமாற மாட்டாங்க.கவலைப்படாதீங்க

==========

10 விஜய்மல்லையா நாட்டை விட்டு வெளியேறத் தடை கோரி வங்கிகள் வழக்கு # லோன் குடுக்கும்போது அள்ளி அள்ளி குடுத்துட்டு லோ லோ-னு அலையறாங்க

============

11 திமுக-தேமுதிக கூட்டணி பழம் நழுவி பாலில் விழும் நிலையில் உள்ளது-மு.க # பால் இருக்கும் பழம் இருக்கும்கூட்டம் போட்டா கூட்டம் வரும்.ஓட்டு வராது

===========

12 கூட்டணி அமையாவிட்டால் தனித்துப் போட்டியிட தயார்: தமிழிசை சவுந்தரராஜன் # எனக்குப்பொண்ணே கிடைக்கலை, ஆனா கல்யாணமண்டபம் போகத்தயார்னானாம்


============

13 மதுவினால் அதிக பெண்களை விதவையாக்கியது அதிமுக -கனிமொழி # ஊக்க”மது” கை விடேல்னு தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க போல==============
14 மின் வாரியத்தில் ரூ.11,000 கோடி முறைகேடு... # நிஜமாவே இது தான் ”ஷாக்”கிங்க் நியூஸ்,மின் வாரியத்துறை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
================
15 ஷரபோவா ‘ஷாக்’: ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார் -செய்தி # ஜெயிலுக்குப்போ, தண்டனை அனுபவிச்ட்டு வா, ஷர ”போ””வா”
============
16 பெண்களை இழிவாக பேசிய குற்றச்சாட்டு : மன்னிப்பு கேட்டார் பாலகிருஷ்ணா # எதிர் வீட்டு ஃபிகர் பேரு மேரி, நான் சொன்னது தப்புன்னா ஐ ஆம் வெரி சாரி============
17 அதிமுக ம.ந. கூட்டணி இடையேதான் போட்டி: தேர்தலில் திமுக 3-வது இடம் - இரா.முத்தரசன் கணிப்பு # தவறான கணிப்பு,ஊழலில் நெ 1 தேர்தல் முடிவில் நெ 2=============18 வங்கிகளில் வாராக்கடன்களில் 73% பேர் ஒரு கோடி ரூ க்கு மேல் வாங்கியவர்களே ! # ஏழை மனசாட்சிக்கு பயந்து கட்டிடுவான், பணக்காரன் ஏமாத்துவான்=============

19 சரத்குமாரின் சுய மரியாதையை பாதிக்காத வகையில் கூட்டணி - ராதிகா # கடந்த 5 வருசமா அவருக்கு பாதிப்பே வர்லையா?வாட் எ மெடிக்கல்மிராக்கிள்


============

20 நல்லாட்சியிலேதான் நல்லவர்களுக்கு தீமை வராது; - கலைஞர் # முயல் விழிப்புணர்வுடன் இருந்தால் ஆமை முதல் இடம் வராது


==========

0 comments: