Wednesday, April 20, 2016

பாரத் பிதா கே கலைஞர்.பாரத் மாதா கி ஜெ

தலைவரே! பாரத் மாதா கி ஜெ சொல்லாதவங்க நாட்டை விட்டுப்போய்டனுமாம்

 இதான் சாக்கு. பாரத் பிதா கே கலைஞர்னு சொல்லியே ஆகனும்னு சொல்லிடுவோமா?


==================


2  சார், உங்க  ஜோக்க படிச்சு சிரிச்சத விட இதெல்லாம் ஜோக்குனு சொல்லி எழுதுறாரேனு நெனச்சு சிரிச்சது தான் அதிகம் :P


அப்டியா? தேங்க்ஸ் மிஸ். எப்டியோ என்னை நினைக்கறீங்களே அதுவே போதும்

================


3 தலைவரே! பாரத் மாதா கி ஜெ சொல்ல மாட்டீங்களா? ஏன்?நான் பாரத் மாதா கி கலைஞர்னு தான் சொல்வேன்.

=============

4 பொண்ணு கிளி மாதிரி இருக்கும்னு சொன்னீங்க.முகம் எல்லாம் வெட்டுக்காயமா இருக்கு?சரி.வெட்டுக்கிளி மாதிரி னு வெச்சுக்கோங்க============

5  டியர், கிளிப்பச்சைக்கலர்ல சர்ட் எடுத்து கிஃப்ட் பண்றியே? என்னை என்ன ராமராஜன்னு நினைச்சியா?

இதுதாங்க இப்போ ஃபேஷன், தெறி லுக் வந்திடுச்சு  பாருங்க


================6  ஓட்டுக்குப்பணம் வாங்கினா ஜெயில் தண்டனையாமே?

 ஆமா, பணம் கொடுத்தா அவங்களுக்கு பதவியும் சல்யூட்டும்


=============


  தலைவரே!  திருவள்ளுவர் சிலையை தெரியாத்தனமா மூடிட்டோம், சமாளிங்க,

ம்ம், வாசுகிக்கு அவர் எதுவுமே செய்யலைன்னு புகார் வந்ததால் கண்டனம் தெரிவிக்க அப்டி செஞ்சோம்


============

 டாக்டர்,  நைட் பெட்ரூம்ல லைட் ஆஃப் பண்ணிட்டா என் கணவர் வாசல் திண்ணைல போய் படுத்துக்கறார்

அடடா, ஏன்?

 யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை?ங்கறார்

===============

9  டாக்டர்! மீன் குழம்புல முருங்கைக்காய் போடலாமா?

என்னய்யா இது? மீனம்மா கைல வளையல் போடலாமா?ங்கற மாதிரி,உனக்குப்பிடிச்சிருந்தா ஓக்கே


=================


10 மேனேஜர் சார், இண்ட்டர்வ்யூக்கு வந்தவங்கள்ல பர்சனாலிட்டி இல்லாத பசங்களா செலக்ட் பண்றீங்களே? ஏன்?

அதுக்கு பரிகாரமா பர்சனாலிட்டி பொண்ணுங்களை செலக்ட் பண்றேனே?


================

11 நான் ஒரு பச்சை மண்ணுங்க

 ஹீரோ சார், அதுக்கு கிளிப்பச்சை  சர்ட் போட்டு தான் நிரூபிக்கனுமா?


================


12  தலைவரே! அவங்க வளையல் கொடுத்ததுக்குப்போட்டியா நீங்க கொலுசு தர்றீங்களா?


 ஆமா, கொலுசை மாட்டி விடும் சாக்கில் கால்ல விழுந்த மாதிரி ஆச்சில்ல

================


13  சார், உங்க ஜோக்ஸ் எல்லாம் மொக்கையா இருக்கே?

 தெரியும்யா , சமைச்சவனுக்குத்தெரியாதா சமையலோட லட்சணம்


===============


14   தலைவரே! ஒரு கோடி ரூபா சம்பாதிச்சிருந்தாலும் அது முறைகேடுதானே?னு வக்கீல் கிழிக்கறாரு, என்ன பண்ண?

 டி வி யை ஆஃப் பண்ணிடுங்க


===================


15   டெய்லி  ஒரு கேரட் பச்சையா சாப்பிடனும், அப்போதான் உங்க கண்ணுக்கு நல்லது

 டாக்டர் , எல்லா கேரட்டும் ரோஸ் கலர்ல தான் இருக்கு


================16   நீங்க சொன்னபடி டெய்லி30பழம் சாப்பிட்டேன், வயித்தால போகுது
யோவ், நான் எப்போ அப்டி சொன்னேன்?
ஆரஞ்சுப்பழம் சாப்பிடுன்னீங்களே? 6*5 = 30 தானே?================


17 மிஸ்! எதிர் வீட்டுப்பையன் டக்ளசைப்பிடிக்குமா?

ம்ஹூம், நெக்லஸ்னா பிடிக்கும்


===============


18 எந்தப்பாவமுமே பண்ணாத நீ எதுக்கு தினமும் பாவ மன்னிப்புக்கேட்க சர்ச்க்குப்போறே?

அங்கே இருக்கும் கன்யாஸ்த்ரீயை லவ் பண்றதால


===============


19 சார். எதிர் வீட்ல ஃபிகர் இருந்தும் நல்ல பாட்டா போடாம ஏன் மொக்கைப்பாட்டா போடறீங்க?

நல்ல பாட்டு போட்டா பாட்டை ரசிக்கும், என்னை ரசிக்காதில்ல?


==============


20 போன வாரம் குறைச்ச பெட்ரோல் விலையை இந்த வாரம் ஏன் ஏத்துனீங்க?

விஜய் மல்லைய்யா கிட்டே விட்ட காசைப்பிடிக்கனுமில்ல?


===============


0 comments: