Sunday, April 10, 2016

கட்சில நெ 2 வுக்கெல்லாம் இடம் இல்லை, நெ1 மட்டும் தான்

1  தமிழகத்தின் பிரச்சனைகளை நாங்கள் விஞ்ஞானப்பூர்வமாக அணுகுகிறோம்-அன்புமணி # அப்போ இந்த தேர்தல் உங்களுக்கு ஒரு ஆசிட் டெஸ்ட் டா?================
2 சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்- ஆற்காடு சீதாராமய்யர் # ஜாதகம் யாருக்கும் சாதகம் இல்லையாம்==============
3 11மாதம்போலீசுக்கு தண்ணி காட்டிய
தென்காசிஆசிரியை-மாணவன் காதல்ஜோடி திருப்பூரில் சிக்கினர் # மேமாசம்தானே மெகாட்வீட்டப்? இப்ப எதுக்கு வந்தாங்க?
=================4 தி.மு.க., பலமாக தான் உள்ளது: கனிமொழி # அப்புறம் ஏன் தலைவர் கேப்டனை பழமாக கூட்டணிக்கு பாலமாக வர்ணிச்சாரு?வரச்சொன்னாரு?
================
தி.மு.க., வெற்றி பாதிக்காது: ஸ்டாலின் # பாதிக்குப்பாதி பாதிக்கும்னு தேர்தல் முடிவு உங்களுக்கு போதிக்கும்

=================6  

ஆவிகளுக்கு பயப்படவில்லை:பாவிகளுக்கு பயந்தேன்- சகாயம் ஐ ஏ எஸ் # ஆனந்த விகடன் உட்பட எல்லா இதழ்களும் உங்களுக்கு சப்போர்ட்தானே? எதுக்கு ஆ.வி, ஜூ.வி க்கு பயப்படனும்?===================


7  இனி அதிகபட்சமாக 140 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் பறக்கலாம். அனுமதிக்க மத்திய அரசு திட்டம்  # 140 தான் லிமிட்டா? ஹை வே ரோடு என்ன ட்விட்டரா?


================


விஜயகாந்தை மீண்டும் அழைக்கிறோம்: வைகோ # மீண்டும் மீண்டும் வா, வேண்டும் வேண்டும் வா சாங்க் டெடிகேட்டட் டூ கேப்டன்


=============

9 கட்டிய பணத்தை திரும்பக் கொடுங்க.விஜயகாந்தை நெருக்கும் தேமுதிக மாசெகள்! # சம்பா கோதுமை வயலை வித்து தந்த பணமாம், சம்பா திக்கலாம்னு பார்த்தாங்க


============


10 விஜயகாந்தின் முடிவுக்கு நான்தான் காரணம்.- டிராபிக் ராமசாமி # இப்போதானே அவருக்கு அரசியல்ல முன்னேற்றம் ஆரம்பம், அதுக்குள்ள ஏன் முடிவு?


==========


11 விஜயகாந்த் ஏன் தவறான முடிவை எடுத்தார் என தெரியவில்லை- இளங்கோவன் # தவமாய் தவமிருந்து பாத்தீங்க, தவறாய்ப்போய்டுச்சு


=============


12 திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பற்றி பேச விரைவில் குழு அமைக்கப்படும்- EVKS # மகளிர் குழு நக்மா, குஷ்பூ வை அனுப்புங்க,நிறைய கிடைக்கும்


=============

13 ரஜினி எனக்கு ஆன்மீக குரு மாதிரி!- தன்ஷிகா # ஓஹோ, ஒரு படத்துல கவர்ச்சி காட்டி முடிச்சதும் இமயமலை ல தலையை காட்டிட்டு வந்துடுவீங்க?


===========


14 ஊழலில் தமிழகம் முதலிடம். ஜெ. அரசின் சாதனை இதுதான்: மு.க.ஸ்டாலின் # இந்த தன்னடக்கம் தான் தலைவரே உங்க கிட்ட பிடிச்சதே, நம்மளை வி்டவா?


============


15 தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிட முடிவு - செய்தி # இந்த  தேர்தல்ல ஏகப்பட்ட ”தனி ஒருவன்” கள் போல, எது ஹிட் ஆகுமோ?=================

16  அதிமுக ஆட்சியில்  கலெக்சன் , கரப்சன்,கமிசன் அதிகரித்து விட்டது- ஸ்டாலின் #  என் கண்ணுக்கு கலெக்”சன்” , கரப்”சன்”கமி”சன்” என SON , SUN  தான் தெரியுது


===============


17  நகைக்கடைக்காரர்கள் முதுகில் குத்துகிறார் மோடி:கெஜ்ரிவால் # இருக்காதே, வழக்கமா அவர் ஏழைங்க வயிற்றில் தானே குத்துவாரு?


=================


18 அதிமுக ஆட்சியில் 'கமிஷன், கலெக்‌ஷன், கரெப்ஷன்' அதிகரித்து விட்டது: ‪-ஸ்டாலின்‬ #  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிமுக வின் சாதனையை முறியடிப்போம்?


=================19 

தேமுதிக அறிவிப்பால் அதிமுகவினர் மகிழ்ச்சி, பட்டாசு வெடித்துக்கொண்டாட்டம் -செய்தி # வி”ஜெ”யகாந்த்க்கு உள்ளே ஜெ விசுவாசம் இருக்குமோ?================


20 

அதிமுகவில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பதவி தொடர்ந்து பறிப்பு # கட்சில நெ 2 வுக்கெல்லாம் இடம் இல்லை, நெ1 மட்டும் தான்


==================


0 comments: