Thursday, April 07, 2016

உங்க படத்துக்கு ஏன் அன்வர் னு டைட்டில் வெச்சிருக்கீங்க?

1  டியர், நான் கோபமா இருந்தா டக்னு சமரசம் பண்ணிடறீங்களே? எப்டி?


சாம்பார், பொரியல் எல்லாம் வைக்கறேன், இந்த ரசம் மட்டும் நீயா வைக்கப்போறே?


=============

டாக்டர்.என் புருசன் உடல் ஆரோக்யத்தில் அக்கறை இல்லாம அசால்ட்டா இருக்கார்.


உப்பு கெடுதல்.அதான் அ"சால்ட்"டா இருக்கார்.உப்பு சேர்த்திக்கறதில்லை


============

3 சார்.மிஸ் அன்பு எங்கே?அர்ஜென்ட்டா பார்க்கனும்.


யோவ்.நீ யாரு? அ ன்பு யாரு?
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் னு போஸ்டர் பார்த்தேன்============


4 எல்லாரும் FULL ஸ்லீவ் சர்ட்தான் போடனும். இந்த ஆஃபீஸ் ரூல்சை மீறி HALF ஸ்லீவ் சர்ட் போட்டதால் 250 ரூபா FINE.


ஸார்.நேத்து ரிசப்சனிஸ்ட் ரீட்டா ஸ்லீவ்லெஸ் ஜாக்.கெட் போட்டுட்டு வந்துது.அப்போ 1000RS ஃபைனா?


================


5 நான் கெட்டவன்னு நிரூபிச்சுட்டா ட்விட்டரை விட்டு போய்டறேன்
சார், எங்கே போவீங்க?
வேறெங்கே? ஃபேஸ்புக் தான்


=============6 ஜட்ஜ் = எதுக்காக விஜய் மல்லையாவை விமானம் ஏறி தப்பிக்க விட்டீங்க?
அரசாங்கத்தோட மானம் கப்பல் ஏறாம இருக்கனும்னுதான்


===================


7 நீங்க வாங்குன 3000 கோடி லோனை எப்போ கட்டுவீங்க?
கட்டக்கிளம்பினேன்.நான் பேங்க் பக்கம் தான் போறேன், கட்டிடறேனு மல்லையா வாங்கிட்டு போனாரு


============


8 டாக்டர், மனசு சரி இல்லாட்டி சுவத்தில
4 முட்டு நறுக்குன்னு முட்டுனா சரி ஆகிடுமா?
மனசு சரி ஆகுதோ இல்லையோ மண்டை உடைஞ்சி ரிப்பேர் ஆகிடும்


===============9 தலைவரே! 500 கோடி கொடுக்க அவங்க ரெடியா இருந்தும் போகலையே? நீங்க அவ்ளோ நல்லவரா?
அங்கே போகாம இருக்க இவங்க 600 கோடி தர்றேன்னாங்க================10 தலைவரே! பழம் நழுவிப்பால்ல விழும்னீங்க?
எனக்கென்ன போச்சு? பழத்துக்கு பால் ஊத்திடுவாங்க மக்கள்===============


11 சொந்தப்பையனை நம்பாம துரத்தி அடிச்சோம், இப்போ யார் யாரோ நம்மை துரத்தி அடிக்கறாங்க
தலைவரே!பையன் கூட ஒரு கூட்டணி போட்ருவோம்


===============


12 தலைவரே!பெரிய பிஸ்னெஸ் ”மேக்னெட்”டா இருந்தவங்களை இப்போ உங்களுக்கு சுத்தமாப்பிடிக்கலையா? அது ஏன்?
தெரில.”காந்தம்”னாலே கடுப்பாகுது


==================


13 டாடி, எனக்கு எப்போப்பா கல்யாணம்?
இப்போ என்னம்மா அவசரம்?
ம்ஹூம், நீ Cindrella @Sirumi123ம்மா, வளரனும் இன்னும்
20 வயசு ஆகுதில்ல=================
14 தலைவரே! அவர் முடிவைச்சொல்லீட்டார். இப்போ நாம என்ன செய்ய?
விடியட்டும், மப்பு தெளியட்டும்=================


15 தலைவரே! பிரஸ் ரிப்போர்ட்டரை ஏன் அடிக்கப்போறீங்க?
தலைவர் கட்சி ஆஃபீஸ் ”விஜயம்”னு போட்டு எதை மறக்கனும்னு நினைச்சனோ அதை நினைவுபடுத்தறார்


=================


16 தலைவரே! பழம் பாலில் விழும்னீங்க.கை நழுவிப்போய்டுச்சே?

உடன் பிறப்பே! "கை" நழுவிப்போகலை.நம்முடன் தான் இருக்கு # சமாளிபிகேசன் சாணக்யத்்தனம்


=========


17 ஹனிமூனுக்கு மாப்ளை வர்லைன்ட்டாரா?

ஆமா.யார் கூடவும் கூட்டணி இல்லை.தனிமூன் கொண்டாடிக்கறேன்ட்டார்

=========

18 டியர்.காந்தக்கண்கள் னு.வர்ணிப்பீங்களே.இப்போ ஏன் வர்ணிக்கலை?

காந்தம் னாலே பயமா இருக்கு
கழட்டி விட்டுட்டு தனியா போய்ட்டா?


===============

19 தலைவரே! இயற்பியல் விதியே மீறிட்டாரு அவரு

எப்படி?
இரும்பு இதயம் படைத்த உங்க கிட்டயே காந்தம் ஒட்டலையே?


============


20 உங்க படத்துக்கு ஏன் அன்வர் னு டைட்டில் வெச்சிருக்கீங்க?அதே பேர்ல படம் வந்தாச்சே?

அப்டியா?சரி.ஹசீனா பானு னு மாத்திட்டா போச்சு.2ம் 1 தானே?

================

0 comments: