Thursday, April 21, 2016

டீச்சருடன் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் கசப்பானவை - மாணவன் பேட்டி

இந்தியாவிலேயே அதிகமாக குப்பையை உருவாக்கும் நகரம் சென்னை. இங்கு தினமும் 6500 டன் குப்பை வீசப்படுகிறது- அன்புமணி # குறிப்பா கோடம்பாக்கம், ஏகப்பட்ட குப்பைபடம்===============
2 டீச்சருடன் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் கசப்பானவை - மாணவன் பேட்டி # ஏன்? டெய்லி பாகற்காய் குழம்பு வெச்சுதா?அல்வா கொடுத்துட்டு பேட்டி குடுக்கறான் பாரு
===============
3  பா ஜ க வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - தமிழிசை் # 2 தொகுதி ல ஜெயிச்சாலே 3 லோகமும் 4 பக்கமும் திரும்பிப்பார்க்கும் மேடம்
==========4 திமுக - காங் கூட்டணி வலுவானது-பழ.கருப்பையா # ஆமா.கூடா நட்பு ன்னு திட்டினாக்கூட தேர்தல் நேரத்தில் சேர்ந்து கொள்ளும் அளவு வலுவானது
===========5 மக்களிடையே எங்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது; - அன்புமணி # இதே டயலாக்கைத்தான் எல்லாத்தலைவர்களும் சொல்லிக்கறாங்க.
========
6 சட்டசபை தேர்தலில் ஜெ வுக்கும், அன்புமணிக்கும் இடையே தான் போட்டி: ராமதாஸ் காமெடி நல்லா.வருது.ஆனா 4% க்கு மேல ஓட்டு வரமாட்டேங்குது
==========7 பாஜக கூட்டணிக்கு தேமுதிக வரும் ் காத்திருக்கும் முரளிதர் ராவ் # சினிமாலயும் சரி அரசியல்லயும் சரி முரளி ன்னா காத்திருக்கனும் போல===========8 சமூக வலைத்தளத்தில் மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது- வைகோ" # ட்விட்டர்ல எல்லா கட்சியையும் பாலோ பண்ணலாம் எல்லாரும் , ஆனா ஓட்டு ஒருத்தருக்குத்தானே போட முடியும்?
================
9 அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 32 தொகுதிகள் கேட்க வாசன் திட்டம் # 3+2 =  5  தொகுதி கொடுப்பாரு

=====================

10  முதல்வர் வேட்பாளராக ஏற்கும்படி விஜயகாந்த் கேட்டால் பரிசீலிப்போம்- பாஜக  முரளிதர ராவ்  # நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா?================


11 

அவசரப்படாதீர்கள். பலமான கூட்டணி அமைப்போம்:  விஜயகாந்த் #தேடி வந்தத விட்டுட்டா தேடிப்போவது துரத்தி விடும் ===============


12 கனிமொழியின் பிறந்த நாளன்று நேரில்  வாழ்த்துச் சொன்னார் ஷகிலா.ஆனால் கட்சியில் இணையவில்லை #அப்டி இணைஞ்சுட்டா பிரம்மாண்டமான கூட்டம்கூடுமே மேடைல


================

13 தேர்தலைஅமைதியாக நடத்த17,350 ரவுடிகளை வெளியேற்ற திட்டம் -தேர்தல் ஆணையம் #  எல்லா ரவுடிகளையும் வெளியேற்றிட்டாஜனங்கயாருக்கு ஓட்டுப்ப்போடுவாங்க?


=============

14 

நான் சீட் கேட்டு விண்ணப்பிக்கவே இல்லை: உதயநிதி ஸ்டாலின் #  ஏன்? உங்களுக்கே நம்பிக்கை உதயம் ஆகவில்லையா?===============


15 
திமுக "ஐஸ்கிரீம்"தேமுதிக "செர்ரி".விஜயகாந்த் எங்களுக்குத் தேவையில்லை- துரைமுருகன் # மேலிடத்துக்கு நல்லா ஐஸ் வைக்கறீங்க,ஜனங்க காதில் பூ வைக்கறீங்க


================

16 இந்திய கிரிக்கெட் அணியின் தோல்விக்கு சீருடை கலரை மாற்றியதுதான் காரணம்: வீரர்கள் புகார் # ஆடத்தெரியாத நாட்டியக்காரி மேடை கோணல்னாளாம்


============

17 முரசுக்கு வில்லனாகும் கூடை... தேர்தல் கமிஷனிடம் தடை கேட்க தேமுதிக முடிவு # முரசுக்கு விஜய்காந்த்தான் வில்லன்னு சிலர் பேசிக்கறாங்களே?


================


18 ஓட்டு போட பணம் வாங்கும் வாக்காளர்களுக்கு ஓராண்டு சிறை: தேர்தல் ஆணையம் அதிரடி # ஜூஜூபி சட்டம், தமிழன் செக்கா, டிடியா வாங்கிக்குவான்


=============


19 மல்லையாவின் கிங்பிஷர் ஹவுஸ்... ரூ. 150 கோடி யாரும் வாங்க முன் வரவில்லை # ஜனங்க என்ன பேங்க் ஆஃபீசர்சா? நம்பி வாங்கி ஏமாற?


===============


20 சமூக வலைத்தளத்தில் எங்களுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது
- வைகோ # அதெல்லாம் ஃபேக் ஐடிகளா இருக்கும்.இங்கன அன்வர்களும் ஹசீனாபானுகளும் அதிகம்

 


=============

0 comments: