Monday, April 11, 2016

கருங்குழலி.,செங்குழலி,பூங்குழலி,வெண்குழலி,அல்டிமேட் குழலி - வரையறு

உன் ஒரே ஒரு (பிளாஸ்டிக் ) வளையலை குளத்தில் வீசினேன்.
இப்போது குளம் பூரா பெருகிக்கொண்டே இருக்கிறது எண்ணற்ற நீர் வளையங்கள்


===================


2  நெட் தமிழன் ஒரு காதல் கவிதை இருந்தா கடன் குடுங்க -னு கேட்கறான், அடுத்து காதலியையே கடன் கேட்பானோ?


===============

3 நைட் 9 மணிக்கு குட் நைட் சொல்லிடறான் நெட் தமிழன், ஆனா மிட் நைட் ஆனாலும் கிளம்பறதில்லை, இங்கனயே தான் சுத்திட்டு இருக்கான்


===========

4 நீங்க வாக்கிங் போக கிளம்பும்போது பூனை குறுக்கே போனா இதுதான் சாக்குன்னு குப்புறப்படுத்துக்காதீங்க.பூனையும் வாக்கிங் தான் போகுது


============5 வீணா போய்டுமேனு எப்பவும் கவலைப்பட்டுட்டே இருக்கக்கூடாது.வீணா போய்ட்டா அடுத்த நிமிசமே ஒரு ரீணா வோ சோனா வோ FB வந்துடும்
==========6 ட்விட்டர் பாஷையில்ககபோ = கடல் கன்னி போகுது============

7 முதல் 5 வருசம் நான் மொள்ளமாரியா இருப்பேன், அவரு கேப்மாரியா இருப்பாரு. அடுத்த 5 வருசம் நான் கேப்மாரி, அவரு மொள்ள மாரி. வாக்காளர்களுக்கு நன்றி================8  மானாட மயிலாட கலா மாஸ்டருக்கு  லவ் ப்ரப்போஸ் ( யாராவது ஒரு வேளை )பண்ணி இருந்தா அவனை கலா ரசிகன்னு சொல்லிட முடியாது
==============கெமிக்கல் கலந்த ஷாம்பூ/சோப் போடாம அரப்பு,சிகைக்காய் தேய்ச்சுக்குளிச்சா நீ கருங்குழலி.
நரை முடி மறைக்க
மருதாணி தேய்ச்சுக்குளிச்சா செங்குழலி===========

10 தலை முடி அடர்த்தியா மென்மையா வளர செம்பருத்திப்பூ இலை / பூ தேய்ச்சுக்குளிச்சா அது பூங்குழலி


================

11   நரையை அப்படியே விட்டுவிட்டால் வெண்குழலியா?"

இல்லை.அசலா அப்டியே இருந்தா அல்டிமேட் குழலி


==============

12 காதலிக்கும் வரை எல்லா சித்ரா க்களும் மித்ராவா (நட்பா)இருப்பாங்க.கல்யாணம் ஆகிட்டா ருத்ரா ஆகிடுவாங்க


================

13 ஆண்கள் எல்லோரும் அன்புமணி போல்.தன் முடிவை ஓப்பனா ஓப்பனிங்ல சொல்லிடுவாங்க.பொண்ணுங்க விகாந்த் போல்.இழுத்தடிச்ட்டு கடைசில காலை வாரி விட்ருவாங்க

=============

14 மும்முனைப்போட்டி வந்தால்

1,அதிமுக
2,தேமுதிக தலைமையில் கூட்டணி
3,திமுக கூட்டணி
இந்த வரிசையில் ரிசல்ட் வந்துடனும்

=========

15 1 ஒரு பரம்பரைக்கே பல்லக்குத்தூக்கத்தயாராய் இருக்கும் அடிமைகள்

2 ஒரு தனி நபர் காலில் விழுந்து கிடக்கும் அடிமைகள்
என தமிழக அடிமைகள் இரு வகை


=============
16 அன்புக்கு அடிமை ஆனால் நீ வாழ்வாய்.
அழகுக்கு அடிமை ஆனால் உன் காதல் வாழும்.
அரசியல்வாதிக்கு அடிமை ஆனால் அவன் வாழ்வான்.நீ வீழ்வாய்


========

17 எதிரி உன்னை துரத்திட்டு வரும்போது நீ ஓடிட்டே இருக்கனும்னு அவசியம் இல்லை.நீ ஓடிட்டு இருப்பதா அவனை நம்ப வெச்சா போதும்


=============

18 பயம் என்பது கோழைத்தனம் அல்ல.அது சிலசமயம் நீ பாதுகாப்பா இருப்பதற்கான கவசம்

==============

19 நீ புத்திசாலி என எதிரி ஒத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக உன் சமயோசிதபுத்திகளை அவனிடம் பட்டியல் இட்டுக்கொண்டிராதே!


============

20 நெட் தமிழன் பார்வையில்
திருமணம் = மெயின் பிக்சர்
நிச்சயதார்த்தம் = ட்ரெய்லர்
பெண் பார்க்கும் படலம் = டீசர்
போட்டோ பார்த்தல் = பர்ஸ்ட்லுக்

============

0 comments: