Wednesday, April 13, 2016

ஹேப்பி பர்த்டே

டியர், தெறி பட லேட்டஸ்ட் ஸ்டில் போல் என் தோள் மீது நீ உட்கார்ந்தபடி ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா?

போக்கிரி ல வருவது போல் துப்பாக்கியால் எங்க அப்பா சுட்டுடுவார் , பரவால்லியா?


===========

2  யாராவது வேட்பாளர்கள் துப்பாக்கி வெச்சிருந்தா குடுத்திடுங்க, தேர்தல் முடிஞ்சு வாங்கிக்கலாம்

 சார், நான் சொப்பன சுந்தரியை வெச்சிருக்கேன், ஆனா உங்களை நம்பி எல்லாம் தர முடியாது


==============

3 ஜட்ஜ் =  ஹலோ! உங்க மேல  செக் மோசடி வழக்கு போட்டிருக்காங்க. எப்போ இந்தியா வருவீங்க?

 ஹலோ  ஹலோ டவர் இல்லை. சரியா கேட்கலை


============

4  நான் அரசியலுக்கு வந்த புதிதில் எம் ஜி ஆர் என் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்

 தலைவரே! அவர் உங்களுக்கு மட்டுமா குடுத்தாரு? லதா, மஞ்சுளா, சரோஜாதேவி


===========

5 தலைவரே! இந்தியக்குடி உரிமைக்கட்சிக்காரங்க யார் யார்?

 இது தெரியாதா? டாஸ்மாக் ரெகுலரா வரும் குடிகாரப்பசங்க தான்


==============6  தலைவரே! பேச்சு வார்த்தைக்குப்போனீங்களே  என்ன ஆச்சு?

 தெரில . குப்புறக்கா படுத்திருந்தோம். எல்லாருக்கும் ஒரு தொகுதி பிச்சை போடறோம்னாங்க, வந்துட்டோம்


===============

7  என்னோட டாப் 5 ஃபாலோயர்ஸ் இவங்க 5 பேரும்தான் 

ஓஹோ, நாங்க என்ன டாப்லெஸ் ஃபாலோயர்சா?

===============

8  குறைந்த அளவே நிலம் வைத்திருப்பவர்களுக்கு எதுக்கு சொந்தமாக ட்ராக்டர்? 

 நிறைந்த அளவு நிலம் உள்ளவங்களுக்கு வாடகைக்கு விடலாமே?தப்பில்லை


==============

9   ஜட்ஜ் = செக் மோசடி வழக்கில் கைது ஆகி இருக்கீங்க, ஏன் பணம் கட்டலை?

மல்லைய்யா = இப்போ தான் கல்யாணம் கட்டுனேன், 2 சின்ன வீடு கட்டுனேன். இனி தான் லோன் ட்யூ கட்டனும்================


10  டிடிஆர் = திருட்டு ரயில் ஏறி வந்துட்டு அகராதி பேசறியா?


 சார். அப்டி வந்தவங்க எல்லாம் பெரிய கட்சித்தலைவர் ஆகி கோடிக்கணக்கில் சம்பாதிச்சிருக்காங்க, மைண்ட் யுவர் வோர்ட்ஸ்


==================11  டைரக்டர் சார். கொலையாளி என்ன ஆனான்? க்ளைமாக்ஸ்ல கம்யூட்டர் கீ போர்டை க்ளோசப்ல காட்றீங்க?

எஸ்கேப்டு.esc  காட்னேனே?கீபோர்டில்


=================


12  

Tesla என்றொரு எலக்ட்ரிக் கார், சும்மா ரதம் மாதிரி இருக்கு

ரிப்பேர் ஆகிட்டா ஊர் கூடி தேர் இழுக்கனுமா?


================


13

 தலைவரே! உங்க வாழ்க்கை வரலாறு படம் ஆகுதாம், உங்களூக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்கா?

எனக்கு சேரவேண்டியதைக்கொடுத்துட்டா வழக்கம் போல் நான் எதையும் கண்டுக்கமாட்டேன்

===============

14 ஹேப்பி பர்த்டே மிஸ்

 தாங்க்ஸ்

 என்ன வயசு?
 ஆங், சொல்லமாட்டேன்

 இது எத்தனாவது பிறந்த நாள்?

 28 வது

=================

15  லேடி டாக்டர் = உங்க உடம்பை செக் பண்ணிட்டேன், எந்தப்பிரச்சனையும் இல்லை 

 ஓஹோ, அப்டியே உங்க ட்விட்டர் டி எம்மையும் செக் பண்ணுங்க டாக்டர் ,ஹிஹி


=================

16  கிச்சன் கார்னர் கிச்சா = தலைவரே! இதுவரை நீங்க சாப்ட்டதுல உங்களுக்குப்பிடிச்சது எது?

மக்கள் பணம் , ஊழல் பணம் , கமிசன் பணம்


===============

17  தலைவரே! மைக்கை ஆஃப் பண்ணிட்டு ஏன் மேடைல பேசறீங்க?

 சத்தமா பேசாத , சுத்தமாப்ப்பிடிக்காது, மொத்தமா தூக்கிடுவேன்னு ஆளாளுக்கு மிரட்றாங்க

================


18  தலைவரே! பிளாஸ்டிக்கை  யூஸ் பண்ணமாட்டேன்னு சத்தியம் செஞ்சதை மீறிட்டீங்களே?

 எப்டி?

 பிளாஸ்டிக் சர்ஜரி கன்னத்தில் பண்ணிக்கிட்ட மகளிர்அணித்தலைவிக்கு கிஸ் குடுத்தீங்களே?# தெறி


==================


19  டீச்சர்.என் பையனுக்கு அஸ்கா னு எழுத வர மாட்டேங்குது.சொல்லிக்குடுங்க.


தம்பி.அனுஷ்கா னு எழுதி னு கட் பண்ணிடு

=============

20 தலைவரே! 105 நாள்  உண்ணாவிரதம் இருந்த பொண்ணுக்கு நீங்க விருது தரப்போறீங்க

 அடேங்கப்பா. நான் எப்பவும் உண்ணாவிரதம் 4 மணி நேரம் தான் இருப்பேன்


=====================

0 comments: