Saturday, April 23, 2016

வீணா போய்டுவானா? வீணா கூடவே போய்டுவானோ?

1  தலைவரே! நீங்க ஆட்சிக்கு வந்தால் உடுமலை போன்ற ஆணவக் கொலைகள் இருக்காதா?,எப்டி?பண்றதே நாம தானே?


=============


2 எங்கள்.கட்சி வெற்றி பெறா விடில் ஜாதிக்கொலைகள் அதிகரிக்கும் என எச்சரிக்கிறோம்


============

3 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விஜய் மல்லைய்யா வைப்பிடித்து அவரிடம் இருந்து 7000 கோடி ரூபாயை கைப்பற்றி விடுவோம் என உறுதி அளிக்கிறோம்,அதில் யார் யாருக்கு எத்தனை % என்பது பின்னர் அறிவிக்கப்படும்

===============

4 இந்த ஆட்சியில் கொலை ,கொள்ளை அதிகரித்து விட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளி ஆட்கள் யாரும் இந்த நாட்டைக்கொள்ளை அடிக்க விட மாட்டோம்


==============

5 பாரம்பரியப்பெருமை கொண்டது நம் கட்சி. நான் , எனக்குப்பின் என் மகன் , அவருக்குப்பின் என் பேரன்  என இப்போதே பட்டியல் தயார்.. வேறு எந்தக்கட்சியாவது இப்படி அறிவிக்க முடியுமா?


==============


6   மிஸ், இந்த ரயில்ல இப்போ லோயர் பர்த் தான் இருக்கு ஓக்கேவா?

சாரி சார். நான் உயர் ஜாதிப்பெண், அப்பர் பர்த் தான் வேணும்


==============


7 சார், உங்க பையன் இண்டர்நெட்டே கதின்னு  இருந்து வீணா போய்டுவான்னு கவலைப்படறீங்களா?

 இல்ல, வீணா கூடவே போய்டுவானோனு கவலை


=================

மிஸ்! நான் தான் ஐஸ் க்ரீம்.நீ தான் செர்ரிப்பழம்.வந்து என் மடி மேல உட்காருயோவ் பின்னால பாரு ஐஸ் வண்டிக்காரர்.அவர் தான் எங்கப்பா.ம்க்கும்


=============

9 ஜட்ஜ் = குதிரையோட காலை உடைத்தாயா?கைதி =,ஆமாங்க.ஹார்ஸ்னு எழுதாம ஒரு கால் கட் பண்ணி ஹர்ஸ் னு எழுதிட்டேன்=============

10 டொக் டொக்யா.கம் இன்
பேங்க்ல வாங்குன 7000 கோடி லோன் எப்போ கட்டுவீங்க?
ப்ளீஸ்.! லீவ் மீ அ"லோன்"


===============


11 மேடம்.உங்க ஹேன்டில் க்கு முன்னால லேடி ன்னு சேர்த்துக்கிட்டீங்களே? எதுக்கு?வேணும்னா நீயும் உன் பேருக்கு முன் ஆம்பள ன்னு சேர்த்துக்கோ.


==============


12 வள்ளுவர் வாக்குப்படிதான் கட் அடிச்ட்டு சினிமாக்குப்போனியா?எப்டி?தோன்றின் புகழோடு தோன்றுக ன்னாரு ,புகழ் த பொலிடிக்கல் ஆக்சன் த்ரில்லர்===============

13 1லட்சம் ரூபா லோன் வேணும்.2,லட்சம் ரூபாய்க்கு பத்திரம் செக்யூரிட்டி தரனும்.
விஜய் மல்லைய்யாட்ட 14,000 கோடிக்கு செக்யூரிட்டி வாங்குனீங்களா?


===============

14 சார்.நம்ம படத்துல 7 பாட்டு 7 பைட்டுவாவ்! ஈரேழு 14 லோகத்திலும் இந்த மாதிரி ஒரு படம் வந்ததில்லை============

15 ஜட்ஜ் =,IDBI ல வாங்கின 900 கோடி ரூபாயை எப்போ திருப்பி தருவீங்க?விஜய் மல்லைய்யா =009 கோடி கூட தர முடியாதுங்க.அடுத்த ஜென்மத்தில் பார்ப்போம்=================

16 கொடிநாள் அன்னைக்கு நீ என்ன செஞ்சே?


லதா,அன்னக்கொடி,பூங்கொடி,மலர்க்கொடி,கூட எல்லாம் கடலை போட்டேன் டீச்சர்==================17 இனிமே நான் ட்விட்டர் பக்கம் வர மாட்டேன்


ஏன் தலைவரே? சந்திப்பிழையைத்தான் மேடைல சரி செய்ய முடியல, சந்துப்பிழையை யாவது சரி செய்யலாம்னா?===========

18 நான் முதல் முதலில் பேச தயங்கிய பெண் நீ தான்.


நிஜமாவா? இதுவரை பொண்ணுங்க கிட்டே பேசுனதே இல்லையா?

நோ நோ பேசி இருக்கேன், மொக்கை ஃபிகரா இருக்கியே அதான் யோசிச்சேன்


================

19 உலக அதிசயங்களில் ஒன்றாக,

நீ இல்லை என்பது தான் வியப்பூட்டுகிறது,
யோவ், எதுக்கு? ஊர்ல இருக்கறவன் எல்லாம் வந்து வேடிக்கை பார்ப்பான், ஓகேவா?

===================


20 மிஸ்! இனிமே நீங்க எழுதவே மாட்டேன்னு சொன்னீங்க? உங்க படைப்பு ஃபேஸ்புக்ல வந்திருக்கு?

அது டைப் பண்ணது


=======================

0 comments: