Wednesday, April 06, 2016

தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்னு கலைஞரே கேட்கலை, டாக்டர் ராம்தாஸ் ஏன் கேட்டாரு?

1  நஞ்சு கலந்த பாலில் பழம் விழக்கூடாது: கருணாநிதி கருத்துக்கு வைகோ பதில் # விழுந்தால் அது இரு தரப்புக்கும் வீழ்ச்சி

===============

மகளிருக்கு அதிக நன்மைகளை செய்தது திமுக- மு.க இருந்தா பொண்டாட்டியை டார்ச்சர் பண்ணிட்டே இருப்பான்.டாஸ்மாக் திறந்தா சரக்கடிச்ட்டு ஹால்ட் ஆகிடுவான் கடைலயே, பொண்ணுங்க நிம்மதியா வீட்ல இருப்பாங்க


============
3 விஜயகாந்த் தலைமையில் புதிய அணி உருவாகிறது # கலைஞர் - சட்டி சுட்டதடா கை விட்டதடா


============


4 கூட்டணி பேரம் பேசவில்லை - விஜயகாந்த் # அதானே? பே”ரம்” அவருக்கு பிடிக்காதே?


===============


5 காங்கிரஸ் ஏழைகளுக்கு

எதிராக செயல்படுகிறது - நடிகைரோஜா # கேப்டன் நடிச்ச ஏழை ஜாதி படத்தை கொள்கை விளக்கப்படமா போடறாங்களாம், இப்போ திருப்தியா?===============


6 நாட்டை விட்டு தப்பினார் விஜய் மல்லையா! - செய்தி # வடக்குப்பட்டி ராமசாமிக்குக்குடுத்த 7000 கோடி ரூபாய் கடன் ஊ ஊ ஊ


===============


7 வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், யமுனை நதியை மாசுபடுத்தியதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் # பழையபடி க்ளீன்பண்ணித்தரச்சொல்லுங்க


=============8 விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர் என நான் கூறவில்லை: ஊடகத்தில் வந்த செய்தி பொய்-பிரகாஷ் ஜவடேகர் # இப்போ வந்த செய்தி உண்மைனு எப்படி நம்பறது?
==============9 திமுகவுடன் கூட்டணி அமைத்தால் எனது கல்லறை கூட என்னை மன்னிக்காது: வைகோ ஆவேசம் # எதிர்பார்த்த சில்லரை ,சில் அறை கிடைத்தாலும் போகமாட்டீங்களா?
==============
10 அம்மா ஆட்சியின் சாதனைகளை எழுத அரசு சுவர்கள் பத்தாது - நத்தம் விஸ்வநாதன்.. # சுவரில்லாத விசித்திரங்கள் ஃபேஸ்புக் WALL ல போய் எழுதலாமில்ல?
================
11பழம்  விழுந்தாலும் பாலில், காலில் எங்களுக்கு கவலையில்லை - தமிழிசை சவுந்தராஜன்.# எட்டி எட்டி முயற்சித்த நரி கிடைக்கலைன்னதும் ச்சீ ச்சீ பழம் புளிக்கும்னுச்சாம்============


12 விஜய் மல்லையா கடந்த வாரமே வெளிநாடு சென்றுவிட்டார்! உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் # அனுப்பி வெச்சதே இவங்க தான் போல


===============

13 ஒரு மாடுக்கிட்ட முதல்வர் யாருனு கேட்டா அது அம்மா னு சொல்லும்-ராமராஜன் # எப்போ விடியும்னு மனுஷன் கிட்டே கேட்டா உதய சூரியன் வந்ததும்பான்


============

14 தனித்துப்போட்டியா ? எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து ஒருவாரத்தில் தெரியும்- விஜய்காந்த் # 7 நாளில் யாருக்கு ஏழரை?ன்னு தெரிஞ்சிடுமா?

=============

15 லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு: பிழைப்பு தேடி கேரளம் வந்த இளைஞருக்கு அதிர்ஷ்டம்! # இனி ஆளாளுக்கு கேரளாவுக்கு பஸ் ஏறுவாங்களா?


=============


16 உடல்பருமன் சிறுநீரக நோய்களுக்கு வழிவகுக்கும்' -செய்தி # மேட்னி தூக்கம் கிட்னி தாக்கம்

============

17 ரயில்களில் தனியாகச் செல்லும் பெண்கள் இருக்கையை மாற்றிக்கொள்ள வசதி # சீட் ஒதுக்கும்போதே லேடீஸ்க்கு தனி கம்பார்ட்மெண்ட்டா ஒதுக்கிடலாமே?


==============

18 சென்னை தி.மு.க., கோட்டையாக வேண்டும்- ஸ்டாலின் # சி எம் சீட்டைப்பிடிச்சாலும் ஜெ இந்த சென்னை விஷயத்தில் கோட்டை விட்ருவார் என்றே நினைக்கிறேன்

===============

19 தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்கிறார் ராமதாஸ். இதை, யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார் -ஆனந்தராஜ் # 2 பையன் இருந்தும்கலைஞரேஅப்டிகேட்கலை


==============


20 தஞ்சையில் கடனை வசூலிக்க கூலிப்படை அராஜகம்: விவசாயியை அடித்து இழுத்து சென்றனர்-செய்தி # கோடிக்கணக்கில் சுருட்னவன் ஃபாரீன் போய்டறான்

===============

0 comments: