Showing posts with label பிரகாஷ்ராஜ். Show all posts
Showing posts with label பிரகாஷ்ராஜ். Show all posts

Tuesday, August 18, 2015

கோ-2 வில் கமல் , அஜித்? -இயக்குநர் ஷரத் பேட்டி

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பெரும் வசூல் வெற்றியைப் பெற்ற படம் 'கோ' . இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷரத். பாபி சிம்ஹா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படம் பற்றி அவரிடம் பேசியதிலிருந்து...
‘கோ' படத்தின் தொடர்ச்சிதான் ‘கோ-2' படமா?
இதுவொரு அரசியல் த்ரில்லர். ஆனால் முதல் பாகத்தின் தொடர்ச்சி அல்ல. ஜான் விஜய் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார், அவர் வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கும். போலீஸ் அதிகாரி வேடமே இனி பண்ண மாட்டேன் என்று சொன்னவர் இந்தக் கதையைக் கேட்டதும் ‘இதுல மட்டும் நடிச்சிடுறேன்; ரொம்ப பிடிச்சிருக்கு’ என்றார். அதேபோல் பாலசரவணன் வரும் காட்சிகளும் களைகட்டும். இவர்கள் சிரிப்புக்கு கேரண்டி என்றால் பாபி சிம்ஹா - பிரகாஷ்ராஜ் ஆகிய இருவருக்குள் நடக்கும் யுத்தம் படத்துக்கு த்ரில்லர் தீனி போடும்.
பிறகு ஏன் 'கோ-2' என்று தலைப்பு வைத்தீர்கள்?
அது என்னுடைய ஐடியாவே கிடையாது. படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் “நீங்க சொன்ன கதை ‘கோ' மாதிரி இருக்கு. ‘கோ-2' என்று வைக்கலாம்” என்றார்.அந்தத் தலைப்பை வைத்த உடன் கிடைத்த வரவேற்பு பிரமாதமாக இருந்தது. இன்னும் ‘கோ' படத்தை மறக்கவில்லை என தோன்றியது. தயாரிப்பு நிறுவனம் ஒரு முடிவை எடுக்கும்போது அதற்குக் கட்டுப்பட்டுதானே ஆக வேண்டும். அதனால் நானும் ஒப்புக்கொண்டேன்.
உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்
‘உன்னைப் போல் ஒருவன்' படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினேன். ‘பில்லா-2' படத்துக்கு கதை, திரைக்கதை ஆகியவற்றை இயக்குநர் சக்ரியோடு இணைந்து எழுதினேன். அந்தப் படத்தின் தெலுங்கு பதிப்புக்கு நான்தான் வசனம் எழுதினேன். எனக்குத் தாய் மொழி தெலுங்கு. ‘பில்லா-2’க்கு முன்பு தெலுங்கில் இரண்டு படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறேன்.
ஒளிப்பதிவுதான் உங்கள் ஏரியாவா?
நான் ஒளிப்பதிவாளராக ஆனது ஒரு விபத்துதான். லண்டனில் பிலிம் ஸ்கூலில் படித்திருக்கிறேன். அங்கு ஒளிப்பதிவையும் கற்றுக்கொடுப்பார்கள். எனக்கு ஒளிப்பதிவு பிடிக்கும். அமெரிக்காவுக்கு அவ்வப்போது சென்று ஏதாவது படித்துவிட்டு வருவேன். ரெட் கேமிரா அறிமுகமானபோது கமல் சார் வாங்கினார். அப்போது நானும் ஒரு கேமிரா வாங்கினேன்.
அந்த கேமிராவை வைத்துக்கொண்டு நண்பர்களுக்கு ஜாலியாகச் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய நண்பர், மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிற நீயே ஒரு படம் பண்ணு என்று சொல்லி ஒளிப்பதிவு வாய்ப்பும் கொடுத்தார். நான் ஒளிப்பதிவு பண்ணிய ‘புரோக்கர்' என்ற தெலுங்குப் படத்துக்கு மாநில விருது கிடைத்தது. அதற்கு பிறகு அந்த நண்பருக்கு மீண்டும் ஒரு படத்துக்கு ஒளிப்பதிவு பண்ணினேன். நிறைய ஒளிப்பதிவு வாய்ப்புகள் வந்தன. நான் தவிர்த்துவிட்டேன்.
கமல், அஜித்தோடு பணியாற்றியபோது அவர்களுக்குக் கதைசொல்லிக் கவர்ந்திருக்கலாமே?
ஒரு குறிப்பிட்ட நடிகரோடு படம் பண்ண வேண்டும் என்று கதை எழுதக் கூடாது. உண்மையைச் சொன்னால் நான் இயக்குநராக கையெழுத்திட்ட 3-வது படம் ‘கோ-2'. நான் படப்பிடிப்புக்குப் போன முதல் படம் இதுதான். கடந்த ஆண்டு ஒரு தெலுங்குப் படம், அப்புறம் ஒரு தமிழ் படம் என இரண்டு படங்களைக் கைவிட்டுவிட்டார்கள்.
இவரோடு பண்ண வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு நான் வளரவில்லை. எனக்கு கமல் சாரோடு படம் பண்ற வாய்ப்பு எப்போது வரும் என்று தெரியாது. ஒரு நாள் கண்டிப்பாகப் பண்ணுவேன். அஜித் சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு ரொம்பவும் நெருக்கமானவர். முதலில் நான் என்னை நிரூபிக்க வேண்டும். அப்புறமாக அவர்களோடு இணைந்து படம் பண்ணுவேன்.
கமல், அஜித், பிரகாஷ்ராஜ் ஆகியோரிடம் பணியாற்றிய அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்
கமல் சார் ஒரு நாலேஜ் பேங்க். அவரிடம் படத்தைத் தவிர்த்து மணிக்கணக்கில் பேசிக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்திருப்பார். அஜித் சார் ஒரு ஜாலியான ஆள். முழு சந்தோஷத்தோட இரு என்பார். எனக்கு என் குடும்பத்தை மிகவும் பிடிக்கும்.
அவருடன் பழகிய பிறகுதான் எனக்கு என் குடும்பத்தை இன்னும் அதிகமாகப் பிடிக்க ஆரம்பித்தது. பிரகாஷ்ராஜ் சாரோடு பணியாற்றுவது மிகவும் எளிது. பிரகாஷ்ராஜ் பற்றி தப்புத் தப்பாக சொல்லுவார்கள். அவர் தனக்கென்று சில வரைமுறைகள் வைத்திருப்பார். அந்த வரைமுறைகளின்படி பணியாற்றினால் அவரால் நமக்கு எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது.

Thursday, August 13, 2015

புள்ளிராஜா விளம்பரத்துக்குப்பின் பர பரப்பான ஒரு பிரகாஷ்ராஜ் விளம்பரம்

1.  10 son = 1 daughter   இந்த ஃபார்முலா  எப்படி? பிரகாஷ் ராஜ் சொல்றதை கேளுங்க ( 11 நொடி)

   


2:அபியும், நானும், பின்னே கொஞ்சம் டென்சனும் - பிரகாஷ் ராஜ் சொல்வது என்ன?

3 மாப்ளை வீடுன்னா கில்லி, பொண்ணு வீடுன்னா ஜல்லி - பிரகாஷ்ராஜ் சொல்ல வருவது என்ன?

Saturday, June 07, 2014

உன் சமையல் அறையில் -சினிமா விமர்சனம்


எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய தெலுங்கு நாவலை சுட்டு மலையாளத்தில் சால்ட் அண்ட் பெப்பர்னு லாலை வெச்சு  சூப்பர் ஹிட் கொடுத்தாங்க .அதை நம்ம தமிழில்  ரீமேக் செய்து இயக்கி இருப்பது  ஆரோக்யமான தமிழ் சினிமா விரும்பி  பிரகாஷ்ராஜ். இது  எந்த அளவுக்கு  ஒர்க் அவுட் ஆகி இருக்குனு பார்ப்போம் . 



ஹீரோ ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட் ல அதாவது  தொல்பொருள் துறை ல அதிகாரி . 45 வயசாகியும்  மேரேஜ் ஆகலை. பொண்ணு எதுவும் செட் ஆகலை . 25 வயசுப்பையனுக்கே பொண்ணுங்க செட் ஆவது கடினம். 45 க்கு எப்படி ஆகும் ? 

ஒரு  ராங்க் கால் ல  ஹீரோயின் அறிமுகம்  கிடைக்குது . ஃபோன் ல யே கடலை போடறாங்க. தமிழன் எந்தத்துறைல வேலை செஞ்சாலும் விவசாயத்துறை கடலை டிபர்ட்மெண்ட் ல மன்னனா இருப்பான்.அந்த விதிப்படி 2 பேரும்  க்டலை சாகுபடி பண்ணி  நேர் ல மீட் பண்ண பிளான் . ஆனா தயக்கம். நேர் ல பார்க்கும்போது  பிடிக்காம போய்ட்டா? அதனால 2 பேருமே அவங்களே சந்திச்சுக்காம அவங்க சார்பா  ஒரு ஆளை அனுப்பறாங்க .மோடி பதவி ஏற்பு விழாவில்  ரஜினி போகாம அவர் ஃபேமிலியை அனுப்பிய மாதிரி . ஆள் எப்படினு பார்த்துட்டு வரச்சொல்றாங்க 

அவங்க 2 பேருக்கும் பத்திக்குது . 2 பேரும் அவங்கவங்க எஜமான் கிட்டே வந்து உங்க ஆள் சரியில்லை கட் பண்ணிடுங்கனு சொல்லிட்டு இவங்க காதலை  டெவலப் பண்ணிட்டு   இருக்காங்க . 

 ஒரிஜினல்  லவ் ஜோடி எப்படி சேர்றாங்க என்பது தான்  கதை 



இந்தப்படத்தின்  ஹீரோ  இசை ஞாநி  இளையராஜா தான் நு கண்ணை  மூடிக்கிட்டு காதைத்திறந்து  வெச்சுக்கிட்டு  சொல்லிடலாம் . என்ன ஒரு  இசை . நல்ல இசை  சாதாரண படத்தை அசாதாரண படமாகவும் , நல்ல ப்டத்தை  பிரமாதமான படமாகவும் மாற்ற வல்லவை . அந்த  வகையில்  திரைக்கதையில் பல  லாஜிக்  மிஸ்டேக்ஸ்  இருந்தாலும்   தன் இசையால் அதை எல்லாம்  மறைத்து மறக்கடிக்கிறார்  ராஜா . 


ஹீரோவா  பிரகாஷ் ராஜ் . தமிழ்  சினிமாவில் 2 வில்லன்கள் மறக்க முடியாதவர்கள்   1  ரகுவரன்  2 பிரகாஷ் ராஜ் . இவர் புத்திசாலித்தனமாக   கேரக்டர்  ரோலும் பண்ணி  ஹீரோவாகவும்  தன்னை தக்க வைக்கிறார் . விடுகதை படத்தில்  இவர் ஆல்ரெடி செஞ்ச ரோல்  தான்  இதுவும் என்றாலும்  மனிதர்  குறை சொல்ல முடியாத நடிப்பை தந்திருக்கிறார் . 



ஹீரோயினாக  சினேகா . மேரேஜ் க்குப்பின் இவர் அழகு நேரில் 25 %  கூடியும்  , திரையில்  50 %  குறைந்திருப்பதும் ஏனோ?  அவர்  உடலில்   மாபெரும் சோர்வு . பிரசன்னா கவனம் . முகத்தில்  கூட   புன்னகை  ஒரு மாற்று  உற்சாகம்  குறைவாகவே  தெரிகிறது . க்ளைமாக்ஸ் காட்சியில் சபாஷ்  போட வைக்கிறார் . 


இன்னொரு  ஹீரோவாக  புதுமுகம் தேஜஸ்.  முகத்தில் நல்ல தேஜஸ் . எதிர் காலம் உண்டு . நடிப்பில் பாஸ் மார்க் 


 இன்னொரு ஹீரோயின் சம்யுக்தா ஹர்னாட் .  மிக மெல்லிய  புருவங்கள் . மிக ஒல்லிய உதடுகள்  என  தமிழனின் மனசை அள்ளியவர் பட்டத்தை எட்டிப்பிடிக்க  முயலாதவராக வே  இருக்கிறார்.  காதல் காட்சிகளில்  முக பாவம் கன கச்சிதம் . 

தம்பி ராமைய்யா சமையல் கலைஞனாக கலக்குகிறார் ,  செண்ட்டிமெண்ட் காட்சி இவருக்கு நல்லா வருது . ஆனா பல படங்களில்  மொக்கை காமெடி தனக்கு நல்லா வருது என நினைத்து  இவர் பர்ஃபார்மென்ஸ் செய்வது ஏனோ ? 





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1 டைட்டில் சாங்க் அபாரம்  .  கேபிள் சங்கரின் சாப்பட்டுக்கடை தொகுப்பு போல எந்த எந்த  ஊரில் என்ன உணவு வகை பிரபலம் என்பதை விளக்கும் பாடல் அட்டகாசம் ., அதை க்காட்சிப்படுத்திய விதமும் அருமை . 87  லொக்கேஷன்கள்  4 நிமிட பாடலில் . இந்தப்பொறப்புதான் பாட்டு இசைஞானியின்  மகுடத்தில் மற்றும்  ஒரு வைரக்கல் 


2 பெண் பார்க்க வந்த இடத்தில்  அந்த  வீட்டு சமையல் காரனை தன் கூடவே அழைத்துச்செல்லும் காட்சி ஆரவாரம் .  தியேட்டரில் அப்ளாஸ் மழை 


3 போஸ்டர்  டிசைன்  , டைட்டில் அட்ராக்சன்  , படத்துக்கான  ப்ரமோ எல்,லாம் கனகச்சிதம் 



4   நான் தான்  உனக்கு  வில்லன்  எனும்போது  பிரகாஷ்  ராஜ்  “ எனக்கேவா?”:  என கேட்கும்போது  டைமிங்க் நல்லா இருக்கு . ( ஆனா அவர் இதே போல்  3 தெலுங்குப்படத்தில்  பேசிட்டார் ) 

5 ஒளிப்பதிவு  , எடிட்டிங்க்   ஓக்கே  ரகம் 




இயக்குநரிடம் சில கேள்விகள் 




1   படத்தின்  மாபெரும்  மைனஸ் என்ன  தெரியுமா? மூலக்கதை எழுதப்பட்ட காலகட்டம்  கேமரா ஃபோன்  புழக்கத்தில்  இல்லாத  காலம். அதை பீரியட் ஃபிலிமாக எடுத்திருக்கனும் . அல்லது  திரைக்கதையில் மாற்றம் செஞ்சிருக்கனும் 


2 ஹீரோ  ஹீரோயினை பார்க்க போக கூச்சப்பட்டு  தன் சார்பாக சொந்தக்காரப்பையனை  அனுப்பறார் . ஹீரோயின் தன் தங்கையை அனுப்பறார் . இருவரும்   கேமரா செல் ஃபோனில் அவங்களை படம்  பிடிச்சுட்டு வா அப்டினு சொல்ல மாட்டாங்களா?> சிம்ப்பிள் லாஜிக். இது  மொத்தப்படத்தையுமே பாதிக்குதே ? 


3   ஆள் மாறாட்ட சந்திப்புக்குப்பின்  செல் ஃபோனில்  மெசேஜ்  கூட அனுப்பிக்க மாட்டாங்களா?  அட்லீஸ்ட்  ஒரு கால்  கூட பண்ணிக்க மாட்டாங்களா ? 


4   ஃபோனில்   பல  முறை பேசியவர்கள்  க்ளைமாக்ஸ் ல் காரில்   ஒருவருடன்  ஒருவர்  பேசும்போது  குரல் அடையாளம்  தெரியாதா? 


5    ஆதிவாசிக்கு அடைக்கலம்  கொடுத்தல்  , லோக்கல் எக்ஸ் எம் எல் ஏ அராஜகம்  அந்த  போர்சன்  எதுக்கு ? கதைக்கு சம்பந்தமே  இல்லாமல் ? 


6 அதே  போல்  சினேகா வீட்டில்  ஒரு திருநங்கை கேரக்டர்  தேவை இல்லாமல்  உலா வருது . 


7  ஊர்வசி  கேரக்டரும் , ஐஸ்வர்யா  கேரக்டரும்  வீணடிக்கப்பட்ட நல்ல கலைஞர்கள் .  ஐஸ்வர்யாவின்  ஆண் கட்டைக்க்குரல் சகிக்கலை 





மனம் கவர்ந்த வசனங்கள்




  1. காதலி சொன்னா பொய் கூட அழகாத்தெரியும் #,உ ச அ2
  2. நீ அவளுக்குத்தேவையா?இல்லையா?ங்கறதை அவதான் முடிவு பண்ணனும்.நீ எப்படி முடிவு பண்ண முடியும்? # உ ச அ3
  3. வாழ்க்கைல எல்லாருக்கும் துணை தேவைப்படும் ஏதோ ஒரு கட்டத்துல # உ ச அ 4
  4. அட்லீஸ்ட் அவ வயசாவது தெரியுமா? வாய்ஸ் தெரியும் # உ ச அ5
  5. நம்மூர் ஹீரோயின் கள் எல்லாம் வேஸ்ட்டுடா.வடக்கத்திப்பொண்ணுங்க தான் கும்முனு இருப்பாங்க # உ ச அ

   6 .சமைக்கும்போதெல்லாம் எனக்கு எங்க அம்மா நினைவு வரும். எல்லோர்   வாழ்க்கையிலும் அம்மா நினைவு தவிர்க்கமுடியாதது #,உ ச அ



7 .பொண்ணுங்க கிட்டே பேசும்போது சுருக்கமாப்பேசக்கூடாது.எக்ஸ்டென்ட் பண்ணிப்பேசனும் # உ ச அ

8  டென்ஷனா இருக்கா? டென்சனா தெரியுதா? # உ ச அ ( டயலாக் = விஜி)


9 .பஸ்ல போனா கண்டவனுங்க இடிப்பானுங்க.தெரிஞ்ச பாய் பிரன்ட் கூட சேப்டியா பைக் ல போனா என்ன தப்பு? # உ ச அ


10  காதலி சொன்னா பொய் கூட அழகாத்தெரியும் #,உ ச அ






படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S



  1. தெரிந்தோ தெரியாமலோ ஏதோ நடக்குது .இளையராஜாவின் கொண்டாட்டப்பாடல் .துள் இசை #,உ ச அ2
  2. ஈரமாய் ஈரமாய் பூ மழை தூவுதே மெலோடியில் இளையராஜா தான் ஒரு மென் இசை சிறப்பாளர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கார் # உ ச.அ




3.திரைக்கதையின் தேவை கருதி மவுன மொழியை உலவ விடும் இளையராஜா மவுனத்தை உடைக்கும் முதல் நொடியில் வட்டியும் முதலுமாய் சிக்சர் அடிப்பார் # உ ச அ



4     .3 குடும்பப்பெண்கள் 1 சேர்ந்து வீட்டில் சாதாரணமா சரக்கு அடிக்கறாங்க. # அய்யோ ராமா @,உ ச அ





5 .இளையராஜா இசை அமைக்கும் படத்தில் மட்டும் அவரும் ஒரு கதை சொல்லி # வாட் எ பிஜிஎம்?



6 .இந்தப்பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிடக்கிடைச்சது # இளையராஜா ராக்கிங்க் இசை


  


7 .இளையராஜா இன்னிசை என்றாலே டைட்டில் சாங் ஸ்பெஷலிஸ்ட் தானே? # உன் சமையல் அறையில்








சி பி கமெண்ட் -உன் சமையல் அறையில் - ஆள் மாறாட்டக்காதல் கதை -கண்ணியம் -இளையராஜாவின் இசை + .லாஜிக் மிஸ்டேக்ஸ் ஏராளம் - விகடன் மார்க் =41 .ரேட்டிங் 2.5 / 5



எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =41





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் =2.5 / 5





டிஸ்கி -மஞ்சப்பை -சினிமா விமர்சனம்

-http://www.adrasaka.com/2014/06/blog-post_2063.html


Un Samayal Arayil
Directed by Prakash Raj
Produced by Prakash Raj
Written by Viji (dialogues)
Screenplay by Prakash Raj
Story by Shyam Pushkaran
Dileesh Nair
Based on Salt N' Pepper
by Aashiq Abu
Starring Prakash Raj
Sneha
Urvashi
Music by Ilaiyaraaja
Cinematography Preetha
Editing by Kishore Te.
Studio Duet Movies
Distributed by Toogudeepa Distributors (Kannada)[1]
Duet Movies (Tamil)
Sri Venkateswara Creations (Telugu)
Release dates 6 June 2014
Country India
Language

Thursday, March 01, 2012

பள்ளிக்கல்வி முறையை சாடும் சாட்டையடி வசனங்கள் இன் தோனி

http://reviews.in.88db.com/images/Dhoni-movie-latest-gallery/Dhoni-movie-shooting-pics.jpg

1.  டேய்.. நீ நினைக்கற மாதிரி எல்லாம் வாழனும்னா நீ அம்பானி வீட்ல பிறந்திருக்கனும்..

அப்போ நீங்க அம்பானி ஆன பிறகு என்னை பெத்திருக்கனும்

------------------------------------------

2 சார்.. சி உங்க ஃபோனை யூஸ் பண்ணிக்கவா? என் மனைவி ஒரு சந்தேகப்பேர்வழி,என் ஃபோனை செக் பண்ணுவா..சில சமயம் என் ஃபோனை பிரிச்சே மேஞ்சிடுவா

ஓக்கே, இங்கேயே பேசு

கொஞ்சம் செக்சியா பேசுவேன் .பரவாயில்லையா?

------------------------------------------

3. சார்.. நல்லதா ஒரு பைக் வாங்கனும்.. சீப் அண்ட் பெஸ்ட்டா ஏதாவது மாடல் சொல்லுங்க

சீப்பா இருக்கறது பெஸ்டா இருக்காது,பெஸ்ட்டா இருக்கறது சீப்பா கிடைக்காது..

----------------------------------------

4. போன மாசம் தானே  யாரோ ரகு என்னை எட்டி பார்க்கறதா சொன்னீங்க?

அது ரகு இல்லை,ராகு

----------------------------------------------

5. ஏங்க, 3 மாசத்துல வீடு வாங்குவோம்னு அந்த லேடி கிட்டே சொன்னீங்களா?

ஆமா.. ஹி ஹி , ஏன்?

டைவர்ஸ் தான் வாங்குவோம்..


---------------------------------------

6. அடங்கொய்யால.. இந்தாள் எல்லாம் யூத்னா அப்போ நான் யாரு..

யோவ், பேசாம வேலையைப்பாரு..

-------------------------------

7. சார்.. உலக விபரங்கள் எல்லாமே ஃபிங்கர் டிப்ஸ்ல வெச்சிருக்கீங்களே, அது எப்படி?

ரெண்டு ரூபா குடுத்து நியூஸ் பேப்பர் வாங்கிப் படிய்யா, உனக்கும் தெரியும்..

-----------------------------

8. டாடி.. வேற டி வி வாங்கலாம்.. கிரிக்கெட் பால் சின்னதா தெரியுது.

ஃபுட்பால் மேட்ச் பாரு. பால்( ball) பெருசா தெரியும்..

--------------------------------

9.  நான் சாதா ஆள் தான், ஆனா போடறது என்னவோ வி பி ஜட்டி..


-----------------------------------------

10. டாடி.ஸ்கூல்ல ஸ்விம்மிங்க் பூல்  கட்ட டொனேஷன் கேட்கறாங்க..

ஸ்கூலே ஸ்விம்மிங்க் பூல் சைஸ்ல தாண்டா இருக்கு?

-----------------------------------------

http://g.ahan.in/tamil/Dhoni%20Movie%20Stills/Dhoni%20Movie%20(35).jpg

11. மூளையே இல்லாதவனுக்கு எல்லாம் மேரேஜ் செட் ஆகுது.. ஆனா சொட்டை தலை, முடி இல்லைன்னு என்னை பல பொண்ணுங்க ரிஜக்ட் பண்றாங்க..

ரொம்ப யோசிக்காதீங்க  சார்

----------------------------------------------------

12. பரம சிவனை நம்பலாம், ஆனா அதுக்காக அவன் கழுத்துல இருக்கற பாம்பை நம்ப முடியாது


-----------------------------------------------
13. நான் உங்களுக்கு ஃபோன் பண்ணேன், நீங்க எடுக்கலை..

 மிஸ்டு கால் குடுத்தேன்ன்னு சொல்லு.. நான் கால் பண்ணாததுக்கு காரணம், எப்படியும் கடன் தானே கேட்கப்போறீங்கன்னுதான்..

-----------------------------

14. டேய், பார்த்த மேட்சை ஏண்டா திருப்பி திருப்பி பார்க்கறே?

நீங்க மட்டும் கேட்ட பாட்டை திருப்பி திருப்பி கேட்கலையா?

-----------------------------------


15.  அத்தைக்கு இந்த கலர் பிடிக்குமா? எடுக்கலாமா?
அத்தைக்கு மாமாவையே பிடிச்சிருக்கு... அப்புறம் என்ன?எந்த கலரும் பிடிக்கும்..

-------------------------------
  
16.  தனியா கஷ்டப்படறதுக்கு இன்னொரு மேரேஜ் பண்ணிக்கலாமே?
எதுக்கு? 2 பேரும் சேர்ந்து கஷ்டப்படவா?

------------------------------

17.  ள்ளே வாங்க

அதுக்கு வேற ஆள் பாருங்க...நான் அந்த மாதிரி அலையற ஆம்பளை இல்லை

--------------------------

18.பேண்ட் சர்ட் போட்ட எல்லாருமே ஆம்பளைங்கன்னு சொல்லிட முடியாது, ஏன்னா இப்போ நிறைய லேடீசும் பேண்ட் போடறாங்க..

-------------------------------
 
19. ஒழுங்கா படிச்சு 4 காசு சம்பாதிச்சு, வாழாம இப்படி கண்ட ஆம்பளைங்க பின்னால ஏன் சுத்துறேன்னு பார்க்கறீங்களா?

-------------------------------------

20.பொண்டாட்டி இல்லாத நீ பொண்ணுங்களை பிராக்கெட் போடாம  ஏன் ஊறுகாய் பாக்கெட் போட்டுட்டு இருக்கே?

-------------------------------

http://www.andhrabulletin.com/admin/images/Dhoni%20Movie%20Stills%20(24).jpg

21.  தம்பி.. எங்கே இருக்கே நீ?

அவுட் ஆஃப் ஸ்டேஷன் சார்.. ஊட்டி.. ஹில் ஸ்டேசன்..

அட நானும் ஊட்டிலஃ தான் இருக்கேன், அட்ரஸ் சொல்லு..

அவ்வ்வ்வ்வ்

-----------------------------------------

22.  மொட்டை மாடில ஏன் காய வைக்கறீங்க.. காணாம போயிடும்..

ஆமா, பெரிய சூப்பர் மேன் ஜட்டி..?

-----------------------------------------

23 நீ இங்கே கிரிக்கெட் ஆடிட்டு இருக்கே.. அங்கே ;பிரின்சிபால் என்னை ஃபுட் பால் ஆடிட்டாரு

டாடி.. அவ்ளவ் சின்ன ரூம்ல எப்படி ஆட முடிஞ்சுது?

அடங்கோ

-----------------------------------------

24.  என்னைக்கேட்டா நாட்ல டோனி, சச்சின் டெண்டுல்கர் இவங்களை எல்லாம் பேக் பண்ணீ வீட்டுக்கு அனுப்பனும்..

--------------------------------------

25. நீ ஏன் இப்படி கிரிக்கெட் பைத்தியமா இருக்கே? இந்தியாவுல 110 கோடி பேர்  இருக்காங்க, ஆனா மேட்ச்  ஆட 11 பேர் தான் டீம்க்கு தேவை

 நோ டாடி.. 15 பேரு

--------------------------------------

26 சாரி.. ஹர்ட் யூ

 பரவால்லை விடுங்க, எனக்குள்ள என்ன கஷ்டம் இருக்குன்னு நீங்க ஸ்கேன் பண்ணியா பார்த்திங்க?

--------------------------------

27. சாக்கடைல தெரியாம விழுந்துட்டேன்னு சொல்றதா? விரும்பி வந்தேன்னு சொல்றதா?

---------------------------------

28. ஒரு மனுஷனை முழுக்கா புரிஞ்சுக்காமயே அவங்களை ஹர்ட் பண்ணிடறோம் இல்ல?

--------------------------------------

29.  ஸ்டூடண்ட்ஸ் எக்கேடு கெட்டா உங்களுக்கு என்ன? உங்களுக்கு தேவை ஸ்கூலோட பர்சண்டேஜ், நல்ல பேரு இது மட்டும் தான் முக்கியம்

---------------------------

30. உன் தலைல பெட்ரோல் ஊற்றி கொழுத்தினாலும் உனக்கு படிப்பு வரப்போறதில்லை

------------------------------ 



31.. நீங்க வேணா பாருங்க.. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் உள்ளே போடற ஜட்டி கூட ஸ்கூல் யூனிஃபார்ம் மாதிரி அவங்க சொல்றதைத்தான் போடனும்னு சொல்லப்போறாங்க.

-------------------------------

32. பொதுப்பிரச்சனையை 4 பேர் கேட்கற மாதிரி, ஏத்துக்கற மாதிரி சொல்ல தனி திறமை வேணும்..



----------------------------------------

33.  குழந்தைக்கு ஹோம் ஒர்க் சொல்லித்தர்ற அளவு ஒரு பொண்ணு படிச்சிருந்தா போதும்..

------------------------

34. நல்லா கார் ஓட்டத்தெரிஞ்சவங்க மட்டும் வாங்க, நான் டிரைவிங்க் சொல்லித்தர்றேன்னு சொல்ற மாதிரி இருக்கு  எல்லா பசங்களும் நல்லா படிச்சுட்டா அப்புறம் உங்களுக்கு என்ன சார் வேலை?

---------------------------------------------

35.  என் புள்ளயை மக்கு மக்குன்னு சொல்லி சொல்லி என்னை அடிக்க வெச்சுட்டாங்க..

-----------------------------

36.  அந்த பி ஆர் மேடம் வள வளனு பேசுனாலும் தள தளன்னு இருக்கா இல்ல?

------------------------------

37. உனக்கெல்லாம் 10,000 ரூபா தரவே யோசிப்பாங்க, ஒரு லட்சம் ரூபா தந்து அடிக்க சொல்லி இருக்காங்களே/..

----------------------------------

38. நம்ம  பையன் மறுபடி எழுந்திடாத படி நாம அடிச்சிடக்கூடாது

------------------------------------------

39.  படிக்காதவங்களை விட படிச்சவங்க தான் அதிக தப்பு பண்றோம்..

---------------------------

40. எல்லாருக்கும் எல்லா வேலையும் கண்டிப்பா தெரிஞ்சிருக்காது

---------------------------------
http://www.chitramala.in/photogallery/d/598470-1/Dhoni+Movie+Working+Pics+_15_.jpg

Friday, March 11, 2011

பிரகாஷ்ராஜ்-ன் அன்வர் - கோவை குண்டு வெடிப்பு பின் புலக்கதை - சினிமா விமர்சனம்


http://www.filmics.com/tamil/images/stories/news/March/3-3-11/Prithviraj-anvar.png
 நல்ல சினிமாவில் நடிக்க வேண்டும், நல்ல சினிமா தர வேண்டும் என்ற பிரகாஷ்ராஜின் கொள்கையால் அவரது இமேஜ் திரை உலகில் உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதற்கு சாட்சியாக பிரித்விராஜ் ஹீரோவாக நடித்த இந்த மலையாள டப்பிங்க் படத்துக்கு பிரகாஷ்ராஜின் பிம்பத்தை  போஸ்டரில் போட்ட சாமார்த்தியத்துகு ஒரு சபாஷ்..

கோவையில் நடந்த குண்டு வெடிப்பில் என்ன நடந்தது?யார் அதன் பின் புலமாக இருந்தார்கள்?முஸ்லீம்கள் அந்த நிகழ்ச்சியால் எந்த அளவு பாதிப்பு அடைந்தார்கள் என்பதை விளக்கும் கதை.

தீவிரவாதிகள் ட்ரூப்பில் பிரித்விராஜ் சேரும்போதே இது கேப்டனின் நரசிம்மா படத்தில் வருவது போல போலீஸின் டெக்னிக் என  தெள்ளத்தெளிவாய் தெரிகிறது ..ஆனால் பிரித்விராஜின் ஃபிளாஷ்பேக் காட்சிகள் வரும்போது இயக்குநரின் சாமார்த்தியம் வெளிப்படுகிறது.

படத்தோட ஓப்பனிங்க்லயே ஜெயில் கைதிகள் வேட்டி சட்டையோட உலாவுவதைப்பார்த்தால் லாஜிக் கன்னா பின்னா என அடி வாங்கப்போகுதுன்னு பார்த்தா கேரளாவில் அப்படித்தானாம்.

ஒளிப்பதிவு அம்சமாக இயற்கை அழகுகளை அள்ளிக்கொள்கிறது...அதுவும் அபூர்வமாய் வரும் பாடல் காட்சிகள் 3-ல் ஒளிப்பதிவு ரெகை கட்டிப்பறக்குது.. போற போக்கைப்பார்த்தா இந்த டைரக்டர் ஆக்‌ஷன் படத்தை விட காதல் சப்ஜெக்ட்ல படம் எடுத்தா கலக்குவாருன்னு தோணுது...



http://www.tutyonline.net/gallery/a6b80ab31fe861c8163b9956d44b1e8e/b/prithivra10.jpg
கிழக்கில் பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திடுவாயோ பாடல் வரிகளை கேட்கும்போது இந்த மாதிரி ஆக்‌ஷன் சப்ஜெக்ட்ல கூட மனுஷன் மெனக்கெட்டு பாடல் வரிகளை செலக்ட் பண்ணி இருக்காரே..ன்னு தோணுச்சு..வெல்டன் டைரக்டர் கம் பாடல் ஆசிரியர் .அந்த பாடலுக்கான ஹீரோயினுக்கான ஆடை வடிவமைப்பு மகா கண்ணியம்.செம...

அதே போல் கண்ணின் இமை போலே பாடலுக்கு நடன தாரகைகள் ( நன்றி - சாண்டில்யன்) அணிந்திருக்கும் கவுரவமான உடைகள் புதிதாய் படம் எடுக்க வரும் இயக்குநர்களுக்கு நல்ல ஒரு முன் உதாரணம்..சமீப கால படங்களில் இவ்வளவு  டீசண்ட்டாக க்ரூப் டான்சர்ஸை ஃபுல்லா கவர் பண்ணி அழகு படுத்தியவர்  யாரும் இல்லை...( நற நற... )


பிரகாஷ்ராஜ் பல இடங்களில் சர்வ சாதாரணமாய்ப்பேசும் ஆங்கில வசனங்களில் வசனகர்த்தா மிளிர்கிறார்.. துல்லியமான ஆங்கில அறிவும், நாட்டு நடப்பை தாக்கும் வசனங்களும் வெல்டன் சொல்ல வைக்கிறது.

http://www.ulakacinema.com/wp-content/uploads/2011/03/anwar01.jpg
வசனகர்த்தா வெங்கடேஷ் கலக்கிய இடங்கள்

1.  உங்களை ஏன் அரெஸ்ட் பண்ணி இருக்காங்க தெரியுமா?

ம்.. தெரியும்.. ஏன்னா நான் ஒரு முஸ்லீம்..

மத்த முஸ்லீம்களை ஏன் அரெஸ்ட் பண்ணலைன்னு தெரியுமா?

ஓ... அதுக்காக வருத்தப்படுகிறீர்களா?


2.  அப்போ.. உங்களுக்கும் பாம் பிளாஸ்ட்க்கும் தொடர்பு இலைன்னு சொல்றீங்களா..?

நீங்க என்ன சொல்லப்போறீங்களோ அது தானே நாளைக்கு பேப்பர்ல வரப்போவுது...? நான் சொல்றதையா போடப்போறாங்க..?

3. ஜெயிலர் - அங்கே என்னடா பேச்சு..?

புது கைதி வந்திருக்கான் இல்ல// விசாரிக்கறோம்..

ஆமா, அடையாளம் தெரிஞ்சு எம் எல் ஏ சீ ட் குடுக்கப்போறியா..?

4.  அன்வர், அப்துல்லா இப்படி பேர் வெச்சது தப்பு.. அதான் போலீஸ்ல அரெஸ்ட் பண்றாங்க..

அதுக்காக இந்த வயசுல போய் பேரை மாத்த முடியுமா?

5,  சரி சரி.. சிகரெட்டை அணை... ஜெயிலர் வர்றான்...

ஏன்.. அவர் ரொம்ப கண்டிப்போ...?

ம்ஹூம்.. சிகரெட்டை பிச்சை கேட்பான்...

6.  போலீஸ்காரங்க எல்லோரும் கெட்டவங்கன்னு சொல்றியா..?

முஸ்லீம்கள் எல்லாரும் தீவிரவாதிகள்னு சொல்றியா..?

7.  அங்கே என்னடா மீட்டிங்?

ஜெயில்ல பாம் வைக்கறதைப்பத்தி  டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கோம்..

அப்படியாவது  இந்த ஜெயில் வாழ்க்கைக்கு முடிவு காலம் வரட்டும்...

8.  இது கோர்ட் வாசல்.. விசில் அடிக்கறே..?

உள்ளே ஜட்ஜ் சுத்தியல்ல அடிக்கிறாரு...அதை கேட்க மாட்டீங்க..?
http://3.bp.blogspot.com/_zTKOyc3q9PU/TLthtP3xb9I/AAAAAAAACpI/lMF0sMiuces/s1600/Anvar+Movie+photos+_27_.jpg
9.  உங்களை நான் ஜெயில்ல பார்க்கவே இல்லையே...

வரனும்.. ரொம்ப நாளா நண்பன் கூப்பிட்டுட்டே இருக்கான்.....

10. மேலே போனவன் கீழே வந்தே ஆகனும்.. இது இயற்கையின் விதி ( LAW OF NATURE)

11..ஆஷா.. விசாரணைக்கு ஒத்துழைக்கனும்.. உனக்கு கடவுள் நம்பிக்கை உண்டா..?

அதை உங்க கிட்டே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை...

12. மரண பயத்தை வெல்லும்போதுதான் ஒரு சாதாரண மனிதன் முஸ்லீம் ஆகறான்.

13.  இவ்வளவு கஷ்டப்பட்டும் 3 பேர் தான் செத்தாங்களா?

எத்தனை பேர் செத்தாங்கங்கறது முக்கியம் இல்ல..உயிரோட இருக்கறவங்க மனசுல பயத்தை விளைவிக்கனும்..

14.  என் பையனுக்கு  திமிர் ஜாஸ்தி.. ஆனா வயசானா அது சரியாகிடும்...

15. பசியோட இருக்கறவங்களுக்கும், அநாதைகளுக்கும் உதவி செய்யனும் நாம எல்லாரும்...

16.  ஒரு நிமிஷம்... ஒரே நிமிஷம்.. நான் அநாதை ஆகிட்டேன்...

http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_095934000000.jpg
இயக்குநருக்கு சில வார்த்தைகள்

1. பிரகாஷ்ராஜ் சுடப்படும் சீன் குருதிப்புனல் க்ளைமாக்ஸை நினைவு படுத்துவதை தவிர்த்திருக்கலாம்...

2. மதி நுட்பம் வாய்ந்த ஆங்கில வசனங்களை கரெக்ட்டான இடங்களில் போட்டது சந்தோஷம் .. ஆனால் திரையில் அதைத்தமிழ்ப்படுத்தி இருக்கலாம்.

3. மிக நீளமான அந்த ஆக்‌ஷன் காட்சியில் ஹீரோ ஜீன்ஸ் பேண்ட் போட்டபடி காலை தூக்கவே சிரமப்பட்டு உதைக்கிறார்.. அது எப்படு பவர் ஃபுல் ஷாட்டாகும்? ஜாக்கி சான் படங்களில் ஃபைட் சீன்களில் அவர் அணியும் பேக்கீஸ் ரக பேண்ட்களை கவனிக்கவும்..

4. வெறும் 3 சீன்களே வந்தாலும் ஹீரோவின் தங்கையாக வரும் ஃபிகர் செம செலக்‌ஷன்.. கீப் இட் அப்...
5.. இடைவேளைக்குப்பிறகு வரும் 28 நிமிட ஃபிளாஷ்பேக் காட்சியில் வெறும் 6 நிமிட இடை வெளியில் 2 பாடல்கள் வருவதை தவிர்த்திருக்கலாம்..

http://thatstamil.oneindia.in/img/2010/04/21-mamthamoh200.jpg

அது போக காயத்ரி ரகுராம் அவர்களின் நடன இயக்கம்  ரொம்பவே அழகு...ஹீரோயின்  18  நிமிடங்களே வந்தாலும் (மம்தா) மனதில் நிற்கிறார்.. ( நல்ல வேளை உட்காரலை)

இந்தப்படம் மலையாள டப்பிங்க் படம் என்பதால் ஆனந்த விகடன் -ல் விமர்சனம் போட மாட்டாங்க..குமுதம் புக் எலக்‌ஷன் ஸ்பெஷல்ல மும்முரமா இருக்கறதால அதுலயும் போட மாட்டாங்க.... ( அப்போ நான் தான் இளிச்சவாயனா..?)

படம் எத்தனை நாள் ஓடும்.. ஆவரேஜ்ஜா 20 நாட்கள்