Showing posts with label சமந்தா. Show all posts
Showing posts with label சமந்தா. Show all posts

Saturday, May 12, 2018

இரும்புத்திரை - சினிமா விமர்சனம்

Image result for irumbu thirai wall posters
ஹீரோ ஒரு மிலிட்ரி ஆஃபீசர், அவர் அடிக்கடி எதுனா என்கவுண்ட்டர் போட்டு சஸ்பென்சன் ஆர்டர் வாங்கறவரு. ஹீரோவோட தங்கைக்கு திருமணம், செலவுக்கு 10 லட்சம் தேவை. 4 லட்சம் அப்பாகிட்டே இருக்கு, 6 லட்சம் ஹீரோ ரெடி பண்ணனும், சஸ்பென்சன்ல இருப்பதால் லோன் கிடைக்கலை.அப்பா பேரில் பர்சனல் லோன் வாங்க முடியாது, ஏன்னா அவருக்கு 60 வயசு , 50 வயசுக்கு மேல இருந்தா பேங்க்ல பர்சனல் லோன் கிடைக்காது, அதனால ஒரு ஃபோர்ஜரி கும்பல் அட்வைஸ்படி டம்மி அட்ரஸ்ல ஒரு கடை நடத்துவதா கணக்கு காட்டி ஃபோர்ஜரியா லோன் வாங்கறாங்க

 அந்த லோன் அமவுண்ட்டை ஒரு கும்பல் ஆட்டையைப்போட்டுடுது. இதை ஹீரோ எப்படி மீட்கறார்  அந்த ஃபோர்ஜெரி கும்பலை எப்படி பிடிக்கறார்? என்பதே கதை


 ஹீரோவா புரட்சித்தளபதி விஷால். இவரோட கேரியர்ல ஆம்பள மாதிரி படங்களை தவிர்த்தா முன்னேறலாம், பாண்டிய நாடு , துப்பறிவாளன் போன்ற படங்களே இவருக்கு நல்ல பெர் கொடுக்கும்.


மிலிட்ரிமேனாக இவர் வருவது ஓக்கெ. பாடி லேங்குவேஜ் எப்டியோ ஜிம் பாடி ஃபிட்.43 வயசானாலும்  அது வெளியே தெரியாத மாதிரி கட்டுமஸ்தான  உடம்பு, வில்லனுடனான வாக்குவாதம் , க்ளைமாக்ஸ் ஃபைட் அனல் பறக்குது, நயகியுடனான ரொமான்ஸ் ஓக்கே


 நாயகியா சமந்தா. தமிழ் சினிமான்னாலே லைலா, ஜெனிலியாக்கள் மாதிரி லூஸ் தனமான நாயகிதான் என்ற நியதியை மாற்றி கேசுவலா வர்றார், இவருக்கு ஒரு டூயட் கூட இல்லை என்பது ஏமாற்றம், 40 லட்சம் ரூபா சம்பளம் கொடுத்துட்டு நல்லா யூஸ் பண்ணீக்கலை டைரக்டர்


வில்லனா \ஆக்சன் கிங்  அர்ஜூன் அதகளம் பண்ணி இருக்கார் , இடைவேளை பிளாக் , க்ளைமெக்ஸ் ஃபைட் எல்லாம் அனாயசம்

 ரோபோ ஷங்கர் காமெடிக்கு. வல்கரா 2 டபுள் மீனிங் டயலாக் பேசி கடுபேத்தறார் ( உதா , விஷாலை பார்த்து = இவனுக்கு காலே இவ்ளோ பெருசா இருகே.....) ரோபோ ஷங்கருக்கு செட் ஆவது “ விடிகாலை 6 மணீ இருக்கும் கோழி கொக்கரக்கோனு கூவுச்சு ரக காமெடி தான்


டெல்லி கணெஷ் அப்பாவா அமைதியா நடிச்சிருக்கார். 


ஒளிப்பதிவு , பின்னணி இசை பக்கா. வசனங்கள், ஆக்சன் காட்சிகள் படத்துக்கு பெரிய பலம்


 புதுமுக இயக்குநர் முதல் படத்துலயே சமகால சமூக பிரச்சனையை சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தமாய் படம் ஆக்கியதற்கு சபாஷ்



Image result for samantha hot

நச் டயலாக்ஸ்


இன்னைக்கு இருக்கற டிஜிட்டல் உலகத்துல பிரைவசி க்கு இடமே இல்ல

உங்க போன் நெம்பர் எத்தனை பேருக்கு தெரியும்?னு நினைக்கறீங்க?

என்ன?ஒரு 25 பேர்..
30 லட்சம் பேர்க்கு தெரியும்


டாக்டர் பேரு ரதிதேவியா? ரொம்ப பழைய பீசா இருக்கும் போலயே?
பேரைப்பாத்தா பழைய கிராமபோன் மாதிரி இருக்கும்னு பாத்தா இன்ஸ்டாகிராம் மாதிரி இருக்கே?


காசில்லாதவன் 10 ரூபா க்கு டாப் அப் பண்ணா 3 ரூபா பிடிச்சுக்கறாங்க,காசு இருக்கறவன் 500 ரூ க்கு டாப் அப் பண்ணா புல் டாக் டைம் ,இது தான் உலகம் (ஜியோ சிம் ?)


5 மிலிட்ரி சரக்கு ஆர்மி ஆளுங்களுக்கு மட்டும்தான் கிடைக்கும்
நானும் ஆர்மி தான் ,எனக்கு கிடைக்கலையே? ஏன்?
நான் ஓவியா ஆர்மீ


விவசாயிகளுக்கு நாங்க பர்சனல் லோன் தர்றதில்ல
விவசாயிகளை நீங்க மனுசனாவே மதிக்கறதில்லையே?


ஊர் பூரா கடன் வாங்கறவனை ஊர்ல யாரும் மதிக்க மாட்டாங்க,ஏன்?சொந்தப்பிள்ளையே மதிக்க மாட்டான்


8  லோன் வசூல் பண்ற முறைல மட்டும் உங்க தப்பு இல்ல.சும்மா இருக்கறவனுக்கு போன் போட்டு லோன் வேணுமா?னு கேட்டு கேட்டு அவனை கடன்காரன் ஆக்கறதே பேங்க் காரன் தான்


நம்ம நாட்டுப்பொண்ணுங்களை லவ் பண்றது கஷ்டம் ,கல்யாணம் பண்றது ஈசி,பாரீன் பைண்ணுங்களை லவ் பண்றது ஈசி ,கல்யாணம் பண்றது கஷ்டம்


10 நீ போடற ஓட்டு யாருக்குப்போய் விழனும்னு தீர்மானிக்கறதே நான்தான்


11 இந்தக்கால திருடனுக்கு உன் வீட்டு சாவி தேவை இல்லை,உன்னைப்பத்தி ஒரு தகவல் போதும்,உதா ஆதார்



Image result for samantha hot


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


விஷால் க்கு ் ஸ்டூடியோக்ரீன் ஞானவேல்ராஜன் மீது ஏதோ கடுப்பு போல.ஒரு உள் குத்து டயலாக்


ஹீரோ மிலிட்ரி ஆபீசர் ,அவரு டென்ஷன் பார்ட்டி .கோபப்படாம 21 நாள் இருக்கனும் .இந்த கான்செப்ட் போனவாரம் தான் ல பாத்தோம்.இப்ப அதை "அட்லி" வேலை பாத்து ல சுட்டாச்

3 ஆன் லைன் பரிவர்த்தனை ,ஆண்ட்ராய்டு போன் இரண்டையும் தவிர்க்கனும் என்பதுதான் படத்தின் மெசேஜ்.அதான் பாஜக எதிர்க்குது போல

Image result for samantha hot






சபாஷ் டைரக்டர்


1    சினிமாத்தனம் இல்லாம திரைக்கதை, ஹீரோ வில்லன் காம்போ காட்சிகள்


2  நாயகி நல்ல ஃபிகரா அமைஞ்சும்  டூயட் காட்சிகள் வைக்காதது 


3   படம் முழுக்க ரசிகனை நிமிர்ந்து உட்கார வைக்கும்படி விறு விறு திரைக்கதை




Image result for samantha hot
லாஜிக் மிஸ்டேக்ஸ்   திரைக்கதையில் சில ஆலோசனைகள்

லாஜிக் மிஸ்டேக் 1 − மிலிட்ரி ஆபீசராக பணிபுரியும் ஹீரோ வீட்டுக்கு பணமே தராதவர்,கெட்ட பழக்கம் ஏதும் இல்லை.ஆனா சேமிப்பு 10 பைசா இல்லை.6 லட்சம் ரூபா க்கு லோன் போடறார்.3 வருசம் × 12 மாசம் × சம்பளம் =? எங்க போச்சு?


 லாஜிக் மிஸ்டேக் 2 = ஹீரோ தன் அப்பா பேரில் லோன் வாங்க பேங்க் போறப்ப 60 வயசானவருக்கு பர்சனல் லோன் தர மாட்டோமகறாங்க.ஏன்?ஹீரோவோட தங்கை (21) ,அம்மா (54) வாங்கலாமே?


லாஜிக் மிஸ்டேக் 3− மாப்ளை வீட்ல 40 பவுன் சீர் கேட்கறாங்க.ஒரு பவுன் 25000 னா அதே 10 லட்சம் ஆகுது.கல்யாணச்செலவு எவ்ளோ ஆகும்னு கேட்டப்ப 10 லட்சம் போதும்கறாரே,அது எப்டி?

லாஜிக் மிஸ்டேக் 4− ஏடிஎம் பின் நெம்பர் ஹீரோவின் அப்பாவுக்கு தரப்படுது்.ஹீரோவோ ,அவர் அப்பாவோ அந்த பின் நெம்பரை மாற்றவே இல்லையே ஏன்?விதிப்படி அனைவரும் பின் நெம்பரை மாத்தனுமில்ல?

லாஜிக் மிஸ்டேக் 5 - ஃபோர்ஜரி ஆள் டம்மி அட்ரஸ் தர சொல்லும்போது ஹீரோ தான் குடி இருக்கும் ஏரியாவில் ஒரு அட்ரஸ் தரலாமே? அப்போ தானே வெரிஃபிகேசனுக்கு பேங்க்காரங்க வரும்போது சமாளீக்க வசதியா இருக்கும் ?ஃபோர்ஜரி பார்ட்டி தர்ற எங்கேயோ இருக்கும் ஏரியா அட்ரஸ்க்கு எப்படி ஒத்துக்கறார்<



லாஜிக் மிஸ்டேக் 6 − கரிசல் காட்டுப்பெண் போல் மாநிறமாக ஒப்பனை இல்லாத முகத்துடன் இருக்கும் ஹீரோவின் தங்கை தன் அப்பாவை ஹாஸ்பிடல்ல பாக்க வரும்போது பியூட்டி பார்லர் ல இருந்து வந்தவர் போல் செக்கச்சிவப்பாக இருப்பது எப்படி?


லாஜிக் மிஸ்டேக் 7− மிலிட்ரி ஆபீசர் 15 நாள் லீவ்ல இருக்கும்போது / சஸ்பென்சன்ல இருக்கும்போது லோன் பிராசஸ் பண்ணமுடியாதுனு ஒரு வசனம் வருது.அவர் மேல க்ரிமினல் கேஸ் இருந்தாதான் அது கரெக்ட்




Image result for samantha hot




சி.பி கமெண்ட் -இரும்புத்திரை− சுவராஸ்யமான திரைக்கதை.லட்டு மாதிரி சமந்தா இருந்தும் கதைக்கு சம்பந்தம் இல்லாம ஒரு டூயட் கூட இல்லை.ஏ ,பி செண்ட்டரில் ஹிட் ஆகிடும்.விகடன் 43 ,ரேட்டிங் 3/ 5


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) = 43


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்)  3.5 / 5


இரும்புத்திரை @ கேரளா −சங்கணாச்சேரி தன்யா


=======









Wednesday, November 25, 2015

சூர்யாவின் '24' பட சுவாரசியங்கள்-வில்லன் உட்பட 3 கதாபாத்திரங்கள்

மூன்று கதாபாத்திரங்களில் சூர்யா, அதில் ஆத்ரேயா என்ற வில்லன் கதாபாத்திரம் என '24' படத்தில் பல்வேறு சுவாரசியங்கள் அடங்கி இருக்கின்றன.
விக்ரம் கே.குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் '24'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். 2டி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
மும்பை மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இணையத்தில் வெளியிடப்பட்டன. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அண்ணன் - தம்பி - அண்ணனுக்கு பிறக்கும் மகன் என மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் சூர்யா. அதில் கொலையாளி மற்றும் விஞ்ஞானி என இரண்டு பாத்திரங்கள் அடங்கும். வில்லனாக நடித்திருக்கும் சூர்யா கதாபாத்திரத்தின் பெயர் ஆத்ரேயா. சவாலான வில்லன் கதாபாத்திரத்தில் சூர்யா இதுவரை நடித்ததில்லை என்கிறது படக்குழு.
விஞ்ஞானி ஒருவர் தனக்கு நெருக்கமான ஒருவர் கொலை செய்யப்படவே, அவரை பழிவாங்க டைம் மிஷின் உதவியுடன் சென்று பழிவாங்குவதே கதை என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


-தஹிந்து

Wednesday, September 17, 2014

கத்தி தீபாவளிக்கு வெளியாவதை எந்த சக்தியாலும் த்டுக்க முடியாது -லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா

'கத்தி' படத்தை யாருக்கும் தரமாட்டோம் என்று லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா சென்னையில் கூறினார். 


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'கத்தி' படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். செப்.18-ஆம் தேதி 'கத்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது. 


லைக்கா நிறுவனத்திற்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர், இலங்கையில் தொழில் செய்து வருகிறார் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. 


இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே அறிக்கை ஒன்றை விளக்கமாக அளித்தது. ஆனால், தொடர்ச்சியாக 'கத்தி' படத்துக்கான எதிர்ப்புகள் வலுத்த நிலையில், லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அல்லிராஜா செவ்வாய்க்கிழமை சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். 


பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு இடையே நடந்த அந்தச் சந்திப்பில் சுபாஸ்கரன் பேசியது: 


'கத்தி' படத்தில் விஜய், சமந்தா மற்றும் சதீஷ்
"எங்களுக்கு எந்த ஓர் அரசியல் பின்னணியும் கிடையாது. மக்களுக்கு உதவும் நோக்கில் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளிக்கிறது. எங்களை மட்டுமே அனுமதிக்கவில்லை.
எங்களுக்கு எதிராக இருப்பது தொழில்முறை போட்டி. இப்படத்திற்கு எதிராக இருப்பவர்களிடம் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன்.
'கத்தி' தொடர்பான சினிமா பிரச்சினைக்கு ஏன் தமிழக முதல்வரை சந்திக்க வேண்டும்? என்னுடைய இரண்டு நாள் வருமானம்தான் 'கத்தி' படத்தின் தயாரிப்பு செலவு.
'கத்தி' படத்தைத் தொடர்ந்து பல்வேறு தமிழ்ப் படங்களை தயாரிக்க இருக்கிறோம். விரைவில் இந்தி மற்றும் ஏன் ஹாலிவுட்டில்கூட படங்களை தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறோம். இப்படம் குறித்து விஜய் என்னிடம் எதுவும் கருத்து கூறவில்லை. படத்தில் வேண்டுமானால் கருத்து கூறியிருப்பார். 


'கத்தி' படப்பிடிப்பில் விஜய், சமந்தா, சதீஷ் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். எங்களுக்கு 3 பில்லியன் யூரோ அளவிற்கு வியாபாரம் இருக்கிறது. எங்களுக்கு ஏன் ராஜபக்ச பண உதவி செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. 'கத்தி' படத்தை யாருக்கும் கொடுத்துவிடும் எண்ணமில்லை" என்று கூறினார்.
மேலும், 'கத்தி' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்
 
 
 
  • Raj  
    Such a arrogant, even challenging the C M! You will not win here.
    Points
    6730
    about 3 hours ago ·   (2) ·   (7) ·  reply (0) · 
    Thangam-Thanga · Balaji  Down Voted
  • பிரேம்  
    கத்தி பட எதிர்ப்புக்கு பின்னால் உள்ள சூழ்ச்சி
    about 5 hours ago ·   (8) ·   (1) ·  reply (0) · 
    Balaji · vivek · vivek  Up Voted
    Siva  Down Voted
  • Thangam  
    இப்படம் குறித்து விஜய் என்னிடம் எதுவும் கருத்து கூறவில்லை. படத்தில் வேண்டுமானால் கருத்து கூறியிருப்பார். - இதுதான் விஜய் இன் நடிப்பு.... ஹி ஹி ஹி
    about 7 hours ago ·   (9) ·   (5) ·  reply (0) · 
    Raj · Thangam-Thanga · Siva  Up Voted
    vivek  Down Voted
  • Rajasekar  
    Neththi adi boss...well & good
    about 14 hours ago ·   (8) ·   (5) ·  reply (0) · 
    Balaji · vivek  Up Voted
    Raj · Siva  Down Voted
  • silambarasan  
    Good confidant
    about 15 hours ago ·   (9) ·   (3) ·  reply (0) · 
    Balaji · vivek · vivek  Up Voted
    Siva  Down Voted
  • Nallarasu  
    Won't you give even for distributors....?
    Points
    4645
    about 16 hours ago ·   (2) ·   (3) ·  reply (0) · 
    Siva  Up Voted
  • lokesh  
    அப்போ விட்டுட்டு போங்க ஜி.... ரெண்டு நாள் வருமானம் தானே போகட்டும் போங்க .... எப்படியும் " ஐ" உடன் மோதி தோல்வி தான்... எதுக்கு போட்டி விடுங்க
    about 16 hours ago ·   (16) ·   (21) ·  reply (0) · 
    Nallarasu · Raj · Siva  Up Voted
    vivek · vivek  Down Voted
  • ஆனந்த்  
    இப்பொழுது எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள் அனைத்தும் போரின் போது எங்கு சென்றன என்று தெரியவில்லை?????? பின்னர் தமிழ் அரசியல் கட்சிகள் இலங்கை சென்று விருந்து உண்டு வந்தது, அதை யாரும் எதிர்க்கவில்லை..தமிழகத்தில் எங்கு சென்றது கருத்து சுதந்திரம்??
    about 18 hours ago ·   (25) ·   (2) ·  reply (0) · 
    prasad · Thangam-Thanga · vivek · vivek · Balaji  Up Voted
  • prasanna  
    திமிர் பேச்சாக இருக்கிறது
    about 18 hours ago ·   (10) ·   (13) ·  reply (0) · 
    Raj · prasad · Siva  Up Voted
    vivek · vivek  Down Voted
  • vendetta  
    "என்னுடைய இரண்டு நாள் வருமானம்தான் 'கத்தி' படத்தின் தயாரிப்பு செலவு." - அப்போ நீங்க கத்தி மட்டும் இல்ல, அருவா, கடப்பாரை, ஈட்டி, எ கே 47, 57 ,67, பீரங்கி, எது வேணாலும் தயாரிக்கலாம் ....
    Points
    175
    about 19 hours ago ·   (14) ·   (4) ·  reply (0) · 
    Nallarasu · prasad · Siva  Up Voted
  • Narmadha  
    மிகவும் மகிழ்ச்சி திரு. சுபாஸ்கரன் அவர்களே! 'கத்தி' படத்தின் வெளியீடுக்கு நீங்கள் தமிழக முதல்வரை எதற்கு சந்திக்க வேண்டும் என்று கேட்டதே மிகவும் சந்தோஷத்தை தருகிறது. நீங்களாவது தைரியமாக படத்தை தீபாவளிக்கு வெளியிடுங்கள். தமிழக மக்கள் உங்கள் மற்றும் திரு. விஜய்யின் பக்கம் இருக்கிறார்கள்!!!
    Points
    260
    about 20 hours ago ·   (22) ·   (12) ·  reply (0) · 
    Balaji  Up Voted
    RBALAKRISHNAN · Raj · Siva  Down Voted
  • SRIPATHI  
    ராஜபக்ச பண உதவி செய்ததால் தான் உலகஅளவில் எங்களுக்கு 3 பில்லியன் யூரோ அளவிற்கு வியாபாரம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள தயக்கம் ஏன் ?
    Points
    6785
    about 20 hours ago ·   (5) ·   (8) ·  reply (0) · 
    Raj · Siva  Up Voted
  • SRIPATHI  
    ''கத்தி' தொடர்பான சினிமா பிரச்சினைக்கு ஏன் தமிழக முதல்வரை சந்திக்க வேண்டும்? என்னுடைய இரண்டு நாள் வருமானம்தான் 'கத்தி' படத்தின் தயாரிப்பு செலவு. " இந்த ஒரு டயலாக் போதும் சுபாஸ்கரன் அவர்களே !ஒரு படத்தை தயாரித்து இருக்கீறார்கள் அதற்குள் இவ்வளவு திமிரா ?
    Points
    6785
    about 20 hours ago ·   (6) ·   (11) ·  reply (0) · 
    Raj · Siva  Up Voted
  • Regunathan Regunathan at Zydus Cadila 
    குட்
    about 21 hours ago ·   (20) ·   (2) ·  reply (0) · 
    vendetta  Up Voted
    Raj  Down Voted
  • Shan Shan  
    கத்தி பிரச்னை தீபாவளியின் போது யானை வெடியாய் வெடிக்குமா ?அல்லது ஊசி பட்டாசு ஆகுமா ?
    Points
    27160
    about 22 hours ago ·   (1) ·   (1) ·  reply (0) · 
     
     
     
    thanx - the  hindu