Showing posts with label பிரபுதேவா. Show all posts
Showing posts with label பிரபுதேவா. Show all posts

Sunday, January 14, 2018

குலேபகாவலி - சினிமா விமர்சனம்

Image result for gulebakavali tamil film

ஹீரோ ஒரு திருடன் , அவர் கிட்டே ஒரு ஊர்ல பல வருசங்களுக்கு முன் புதைக்கப்பட்ட புதையல் எடுக்கும் பணி ஒப்படைக்கப்படுது , எப்படி திமுக காங்கிரஸ் ,  கூட கூட்டணி அமைச்சு தேர்தல்ல போட்டியிடுதோ அந்த மாதிரி ஹீரோவும் இன்னும் 3 திருடங்களை கூட்டணி சேர்த்து ( அப்பதானே பலமான கூட்டணி ஆகும்?) அந்த ப்ராஜெக்ட்டை சக்சஸ்ஃபுல்லா எப்படி முடிக்கறார்? என்பதே கதை ஹீரோவா நயன் தாராவின்  முன்னாள் காதலர் பிரபுதேவா. ஓப்பனிங் சீன்ல ஒரு செம டான்ஸ் ஆடி இருக்கார் ., அதகளமான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் , அப்பறம் ஒரு டூயட்ல  ஜிமிக்ஸ் வேலை எல்லாம் காட்டி ஒரு டான்ஸ் , அவ்ளோ தான் ஹீரோ ஒர்க் முடிஞ்சுது , தேவி படத்துல ரீ எண்ட்ரி ஆன மாதிரி  இதுலயும் ஒரு காட்டு காட்டுவார்னு ட்விட்டர்ல பில்டெப் எல்லாம் நான் குடுத்தேன், எல்லாம் வேஸ்ட்


 அதுக்குப்பதிலா ஹன்சிகா இதுல செம காட்டு காட்டி இருக்கார். ஹன்சிகா அவளோ திறமை காட்டி நடிச்ச படமா?னு வியக்க வேணாம் , கிளாமர் காட்டி நடிச்சிருக்கார் . பாடல் காட்சிகளில்   இவர் ஒரு திறந்த புத்தகம் . 3  சீன்களில்  ஹீரோ இவரை ரொம்ப  ஜொள் விடுவது சகிக்கல. குறிப்பா பிரபு தேவா வுக்கு என்னா டேஸ்ட்டோ சிம்பு கரெக்ட் பண்ணி கழட்டி விட்ட/ விடப்பட்ட ஃபிகர்களா பார்த்து  ரூட் போடறார்.


ரேவதி நல்ல பர்ஃபார்மென்ஸ் இதுல . மகளிர் மட்டும் , மஞ்சப்பை படங்களுக்குப்பின் சொல்லிக்கொள்ளும் ஒரு ரோல் , சத்யனை ஓப்பனிங் சீன்ல ஏமாற்றுவது , செண்ட்டிமெண்ட் கதை சொல்லி தப்பிப்பது , க்ளைமாக்ஸில் குதூகலம் காட்டுவது என பின்றார்
 அவருக்கு அடுத்தது நம்ம மொட்டை ராஜேந்திரன் . அம்மா,. சித்தி  என அவர் உருகுவது செம காமெடி . எம்(டன்) மகன் படத்தில் வடிவேலு அப்பாவை வெச்சு ஒரு சுடுகாட்டு காமெடி + குணச்சித்திர ரோல் பண்ணி கைதட்டலை அள்ளி \  இருப்பார் , அதுதான் இதுக்கு இன்ஸ்பிரேசன் போல 

முனீஸ்காந்த் க்கு முக்கிய ரோல் , ஆனாலும் பெரிய அளவில் காமெடி இல்லை 

 வில்லன்களாக ஆனந்த்ராஜ் & கோ வுக்கு   பெரிய வேலை ஏதும், இல்லை


 பாடல்கள்  , இசை எல்லாம் சுமார் ரகம் . ஒளிப்பதிவு , எடிட்டிங் சராசரி  தரம்

கதை சொல்லப்போறேன் பட இயக்குநருக்கு இது கையைக்கடிக்காத முதலீட்டுக்கு மோசம் போகாத சராசரி வெற்றிப்படம்  தான் 


Image result for hansika hot

நச் டயலாக்ஸ்


நான் ஒரு டாக்டரா இருக்்கறதால பிறப்பு ,இறப்பு இத எல்லாம் சகஜமா எடுத்துக்க முடியுது


பலமான எதிரி அமைஞ்சாதான் பிஸ்னெஸ்ல ஈசியா டார்கெட் அச்சீவ் பண்ண முடியும்

சாமியைக்கும்பிடறவங்களை விட அந்த சாமி சிலையைத் திருடறவங்களுக்குதான் அதன் உண்மையான மதிப்பு /விலை தெரியும்

காக்கா வலிப்பு வந்தா இரும்புச்சாவி குடுக்கனும்


;சாவி குடுக்க அவ என்ன பொம்மையா?


நான் தனிமையைத்தேடி காசி,ராமேஸ்வரம் னு போலாம்னு இருக்கேன்
ஆனா,அங்கே ஏகப்பட்ட கூட்டம் இருக்குமே?Image result for hansika hot

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

`1  ஹன்சிகா ஒரு சீன்ல NEVER FINDING FUN னுனு ஒரு வாசக பனியன் சுசீலா கணக்கா போட்டுட்டு வருது , என்ன உள் குத்து அர்த்தமோ தெரில 


2  ஓப்பனிங் சாங் ல  பிரபுதேவா சிலம்பாட்டம்ல சிம்பு படுத்த மேனிக்கு ஒரு ஸ்டெப் போடுவாரே அதே போல் பேட்டர்ன்ல வெரைட்டியா ஆடி இருக்கார் , பிரமாதம் 

3  கிராமத்து வழக்கப்படி ஒரு பரிகாரத்துக்காக ஹன்சிகாவை   முழு நிர்வாணமா ஊர்வலம் வரனும்னு சொல்றாங்க , அப்படி ஒரு கிராமம் எந்த மாவட்டத்துல இருக்கு/னு  தெரில , தெரிஞ்சா ஒரு மினி டூர் போலாம்

Image result for hansika hot

சபாஷ் டைரக்டர்


1  லோ பட்ஜெட்ல  ஓரளவு ரசிக்கும்படி ஒரு காமெடிப்படம் கொடுத்ததுக்கு ஒரு ஷொட்டு

2 ஹன்சிகா வுக்கு சம்பளத்தை மட்டும் கொடுத்துட்டு கடைசி வரை கதை , கேரக்டர் பற்றி அவரை வாயை திறக்காம பார்த்துக்கிட்டது 

3 ரேவதியின் பங்களிப்பு , மொட்டை ராஜேந்திரன் நடிப்பு 

Image result for hansika hot

லாஜிக் மிஸ்டேக்ஸ்  ,திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1  ஓப்பனிங் சீன் ஃபிளாஸ்பேக்ல 2 பெட்டி நிறைய வைரக்கற்களை ஒரு ஆள் பதுக்கறான். அந்த வைரக்கற்களை ஒரு எலும்புக்கூட்டில் மறைச்சு அந்த 2 பெட்டில ஒரு பெட்டில அந்த எலும்புக்கூட்டை வைக்கறான் , இது எப்படி சாத்தியம், கொள்ளளவு , கன அளவு இது எல்லாம் டேலி ஆகலையே?

2  ஹன்சிகா நிர்வாணமா வருதா? ஊர்வலம் ல சீன் பார்க்கலாம்னு அந்த கிராமத்துல ஒரே ஒரு ஆள் மட்டும் ஒளிஞ்சிருந்து செக் பண்றான் , ஊர்ல பாதி ஆம்பளைங்க அப்படித்தானே இருப்பாங்க ?

3  பல வருசங்களா பெட்டியில் இருக்கும்போது எலும்புக்கூடு எந்த பாதிப்பும் இல்லாம , தூசி படாம க்ளீனா இருப்பது எப்படி?


Image result for hansika hotசி.பி கமெண்ட் - குலேபகாவலி - புதையலை தேடிப்போகும் திருடர்கள்-மொக்கை காமெடி , ஹன்சிகா கிளாமர் , ரேவதி,மொட்டை ராஜேந்திரன் நடிப்பு மட்டுமே + , விகடன் - 40 ,41  ரேட்டிங் - 2.5 / 5 


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) = 40 / 41


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்) =  3/5


ஈரோடு ஸ்ரீனிவாசாவில் படம் பார்த்தேன். 12 பேர் இருந்தாங்க 

Wednesday, April 02, 2014

நயன்தாரா,சோனாக்ஷி சின்ஹா களவாடிய பொழுதுகள் - பிரபு தேவா.பேட்டி

‘ஆக் ஷன் ஜாக்ஸன்’ படப்பிடிப்பில் அஜய்தேவ்கன், பிரபுதேவா
‘ஆக் ஷன் ஜாக்ஸன்’ படப்பிடிப்பில் அஜய்தேவ்கன், பிரபுதேவா
பாலிவுட் சினிமாவில் தொடரும் வெற்றிகளால் தமிழில் படம் இயக்க ஆசை இருந்தும் மீண்டு வர முடியாமல் இருக்கிறார், பிரபு தேவா. பாலிவுட்டின் மோஸ்ட் வான்டேட் இயக்குநராக பரபரப்பின் உச்சத்தில் இருந்தாலும் மகன்களின் நினைவு கண்களில் திரையோடினால் உடனே சென்னைக்குப் பறந்து வந்துவிடுகிற தகப்பனாகவும் இருக்கிறார். அப்படிச் சென்னைக்கு வந்தபோது ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து….

ஸ்பைடர்மேன் மாதிரி ஒரு படம் எடுக்கணும்: பிரபுதேவாமுழுக்க நடனத்தை மையமாகக் கொண்டு எடுக்கத் திட்டமிட்ட உங்கள் படம் என்னாச்சு?


எனக்கும் ஆசைதான். தொடர்ந்து என்னிடம் ஆக் ஷன் படத்தையே எதிர்பார்க்கிறார்கள். நான் இயக்கும் ஆக் ஷன் படங்கள் நல்ல ரிசல்ட் தருவதால் அதையே எதிர்பார்க்கிறார்கள். டான்ஸ் படம் ரொம்பவே சுவாரஸ்யமா செய்யணும். உடன் பணியாற்ற அற்புதமான டான்ஸர் வேணும். அதை முழுமையாகக் கொண்டாடும் ஹீரோ, ஹீரோயின் வேண்டும். தயாரிப்பாளர் நடனத்தைக் காதலிப்பவராக இருக்க வேண்டும். எல்லாம் அமைந்தால் நானும் தயார்.‘ஆர். ராஜ்குமார்' படத்துக்கு ஆஸ்கர் லைப்ரரியில் இடம், மீண்டும் அக்ஷய் குமாரோடு புதிய படம், ஏ.பி.சி.டி. பார்ட் 2 என்று உங்கள் பாலிவுட் கேரியர் பிரகாசமாக நகர்கிறதே?


தமிழ் உள்பட தென்னிந்தியப் படங்களில் சின்ன வயதிலேயே கேரியரைத் தொடங்கியாச்சு. நிறைய சினிமா நண்பர்கள் சந்திப்பு, நட்பு என்று கொஞ்சம் கொஞ்சமாக மனப் பக்குவம் கிடைத்தது. புதிதாக யாரையும் பார்க்கவில்லை. அனுபவமும், பக்குவமும்தான் பாலிவுட்டில் பயணிக்க உற்சாகத்தையும், உந்து சக்தியையும் கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஏ.பி.சி.டி. பார்ட் 2 ஜூலையில் ஷூட்டிங் ஆரம்பம்.


 மும்பை, அமெரிக்காவின் லாஸ்வெகாஸ் நகரங்களில் 2 மாதம் படப்பிடிப்பு இருக்கும். உலக அளவிலான டான்ஸர். முழுக்க 3 டி படம். உண்மைக் கதை. ஒரு நடிகனாக என்னை ஒப்படைக்கப்போகிறேன். திரில்லான அனுபவமாக அமையும்.


‘ஆர்… ராஜ்குமார்' திரைப்படம் ‘ஆஸ்கர் லைப்ரரி' வரைக்கும் போயிருக்கு. ரொம்பவே சந்தோஷமா இருக்கு.


‘ரவுடி ரதோர்' வெற்றி விழாவில் அக்ஷய் குமாருக்கு விருது கொடுக்கும்போது, படத்தில் சிரிப்பு, கோபம், நடிப்பு எல்லாவற்றிகும் பிரபு தேவாதான் காரணம் என்று பாராட்டை என் பக்கம் திருப்பிவிட்டுவிட்டுப் போகிறார். ‘ஆக் ஷன் ஜாக்ஸன்' படத்தோட இறுதி கட்ட வேலைகள் மட்டும் இருக்கிறது. அக் ஷய் குமாரின் அடுத்த படப் பணிகளைத் தொடங்கிட்டேன். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சைஃப் அலி கான் படம். கதையை முழுமையாகக் கேட்காமலே அவர் ஆர்வத்தோடு இருக்கார். இப்படி எல்லோரும் என்மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். பொறுப்பும், பயமும்தான் அதிகரிக்கிறது. எல்லா நல்லதுக்கும் கடவுள் ஆசீர்வாதம்தான் காரணம்.தமிழ்ப் படங்கள் பற்றி…


இங்கே கடந்த மூன்று ஆண்டுகளில் பெரிய மாற்றமே நடந்திருக்கு. புதியவர்கள் படு திறமைசாலிகளா கலக்கிட்டிருக்காங்க. இவங்களோட போட்டிபோட முடியுமா என்று நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கு.


குழந்தைகள் என்ன படிக்கிறாங்க?


எல்லா அப்பா, அம்மாவுக்கும் அவங்களோட குழந்தைங்கதானே அல்டிமேட். எனக்கும் அப்படித்தான். பெரியவன் வர்ற வருஷம் சிக்ஸ்த் போகிறான். சின்னவன் செகண்ட் ஸ்டாண்டர்ட். டிராயிங், கேம், ஸ்போட்ர்ஸுன்னு வளர்ந்து வர்றாங்க. அவங்களோட எதிர்கால ஆசை என்னன்னுகூட கேட்க வேண்டாம்னு இருக்கேன். அவங்களுக்கு என்னல்லாம் பிடிக்குதோ, அதையெல்லாம் செய்யட்டும்.உங்களோட கனவுப் படம்?


'தி லார்டு ஆஃப் தி ரிங்க்ஸ்', 'ஸ்பைடர்மேன்' மாதிரியான ஒரு படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி இதில் எதுவாக அமைந்தாலும் ஓ.கே. கடவுள்தான் அந்த வாய்ப்பைக் கொடுக்கணும்.நயன்தாராவுடன் சிம்பு சேர்ந்துட்டாரே. நீங்களும் ஏன் ஒரு படத்தில் ஜோடி சேரக் கூடாது?


(சிரிப்புடன்) நம்ம பயணமே இப்போ வேற. முழுக்க மும்பைவாசியாகவே ஆனதால் இங்கே என்ன நடக்கிறது என்றே தெரியாமல் போச்சு. நீங்க சொல்லித்தான் இருவரும் இணைந்து நடிக்கும் விஷயமே எனக்குத் தெரிகிறது. சென்னையில் இருக்கும்போதே இப்படியான விஷயங்களை எல்லாம் ஃபாலோ செய்ய மாட்டேன். காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 1 மணி வரை வேலைகள். போக்குவரத்து டிராபிக் நேரத்தைக்கூட சினிமா குறித்து பேசும் நேரமாக மாற்றிக்கொண்டு திரிகிறேன். இப்படியான பிஸியில் இதெல்லாம். அவசியமே இல்லைனு நினைக்கிறேன்.தொடர்ந்து உங்க படத்தில் சோனாக்ஷி சின்ஹா இடம் பிடித்துவிடுகிறாரே?


அதற்கு தனி காரணம் எதுவும் இல்லை. என்னோட படங்களில் மிடில் டவுன், வில்லேஜ் லுக் அதிகம் இருக்கும். அதற்கு ஆப்டான நடிகையாக அவங்க பொருந்துவாங்க. இந்தியன் லுக், நல்ல ஆக்டிங் இதெல்லாம்தான் காரணம்.


‘களவாடிய பொழுதுகள்' திரைப்படம் என்னாச்சு?


அழகான காதல் படம். கண்டிப்பா ரிலீஸாகணும் ஆசையா இருக்கேன். தங்கர் எந்த மாதிரியான டென்ஷன்ல இருக்கார்னு தெரியலை. அதனால்தான் அவரிடம் பேசவும் இல்லை. என்னோட டிராவல்ல புதிதாக அமைந்த படம். கண்டிப்பா வரும்.


THANX - THE HINDU

Tuesday, March 05, 2013

ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் - சினிமா விமர்சனம் ( குமுதம் )

 

குமுதம் சினி விமர்சனம்

டான்ஸ், டான்ஸ், டான்ஸ். படம் பூராவும் டான்ஸ்தான். வேறு எதுவும் இல்லை.

பிரபுதேவா இருப்பதால் ஹிந்திப் படத்தை தமிழில் டப் பண்ணியிருக்கிறார்கள்.

ஸ்டிரீட் டான்ஸர், ஸ்டெப் அப் படங்களில் டீ! (காப்பி உடம்புக்குக் கெடுதலாம் பாஸ்!)

ஹெ லெவல் டான்ஸ் ஸ்கூலில் இருந்து, டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவைத் துரத்தி விடுகிறார்கள். அவர் பிள்ளையார் ஊர்வலத்தில் நடனமாடும் சில பசங்களை ஒன்று சேர்த்து, அவர்களுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்து, போட்டியில் ஜெயிக்க வைப்பதே கதை.

பிரபுதேவா அமைதியாகச் செய்திருக்கிறார். ஒரு டான்ஸ் மட்டும் ஆடி, எல்லோரையும் ஆட்டுவிக்கிறார். வெளியேற்றப்பட்ட வலியை அற்புதமாகக் காட்டியிருக்கிறார்.

படத்தில் பிரபுதேவாவைத் தவிர தெரிந்த முகம் யாருமே இல்லை என்பது பெரிய மைனஸ் பாயிண்ட் கதாநாயகி கூட கிடையாது. எங்கும் ஹிந்தி வாசனை வேறு ஜூனூன் ஸ்டைலில் டப் செய்திருப்பதும் வெறுப்படிக்க வைக்கிறது.

ஜஹாங்கீராக வருபவர் நல்ல தேர்வு. தோற்றபிறகு பொருமாமல் கைதட்டி கண் கலங்குவது நன்று.


ஏபிசிடி: டான்ஸ் பிடித்தவர்களுக்கு கொண்டாட்டம். மற்றவர்களுக்குத் திண்டாட்டம்

ஆஹா: டான்ஸ், டான்ஸ், டான்ஸ்.

ஹிஹி: டப்பிங் படம், பிரபுதேவாவைத் தவிர தெரிந்த முகம் ஏதுமில்லை.

குமுதம் ரேட்டிங்: ஓகே.


தினமலர் விமர்சனம்


இந்தியில் பெரிய இயக்குனராக பெயரெடுத்து விட்ட நம்மூர் நடன இயக்குனர், நாயகர் பிரபுதேவா, ரெமோ டிசோசா எனும் வட இந்திய இயக்குனரின் இயக்கத்தில், நாயகராக நடித்து தமிழிலும், இந்தியிலும் வெளிவந்திருக்கும் படம்தான் "ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்!"

கதைப்படி பிரபுதேவாவும், அவரது நண்பர் கே.கே.மேனனும் மும்பையில் பிரபலமான நடனப்பள்ளி ஒன்றை தொடங்கி நடத்துகிறார்கள். ஒருகட்டத்தில் பிரபுதேவாவுக்கும், நண்பர் கே.கே.வுக்குமிடையே ஈ‌கோ யுத்தம் கிளம்ப, அதனால் அங்கிருந்து கிளம்பும் பிரபுதேவா, தனது மற்றொரு நடன நண்பர் கணேஷ் ஆச்சார்யாவின் குடியிருப்புக்கு குடிபெயர்கிறார். கணேஷ் ஆச்சார்யாவும், கே.கே.வால் பாதிக்கப்பட்டவர் என்பதால் சென்னை கிளம்ப நினைக்கும் பிரபுதேவாவை மும்பையிலேயே பிடித்து வைத்து வேறு நடனபள்ளி ஆரம்பிக்க தூண்டுகிறார் கணேஷ்.

பிரபுதேவாவும், கணேஷ் எதிர்பார்க்காத வகையில் காசுக்காக நடனம் கற்று தருவதை தவிர்த்து திறமைகள் இருந்தும் பல்வேறு குரூப்களாக பிரிந்து கிடக்கும் அந்த குப்பத்து இளைஞர்களுக்கு டான்ஸ் சொல்லித்தர களம் இறங்குகிறார். அப்புறம், அந்த இளைஞர்களின் பெற்றோர் போடும் தடைகள், தன் நண்பர் கே.கேவின் நக்கல் நையாண்டி, சூழ்ச்சி ‌எல்லாவற்றையும் தாண்டி அந்த இளைஞர்களை மும்பையில் நடைபெறும் இண்டர்நேஷனல் டான்ஸ் போட்டிகளில் ஜெயிக்க வைக்கிறார், ரசிகர்களை வியக்க வைக்கிறார்.
 
 
 


பிரபுதேவாவின் அடிப்படையே நடனம் என்பதால் ஒரு பக்குவப்பட்ட நடன இயக்குனராக படத்தில் பாத்திரத்தோடு ஒன்றிப்போய், ரசிகர்களை இருக்கைகளில் கட்டிப்போடுகிறார். நட்பு, துரோகம், நம்பிக்கை என்று நடிப்பில் சாந்த சொருபியாக நம்மை வியக்க வைக்கும் பிரபுதேவா, நடனம் என்று விந்துவிட்டால், நடராஜரூபமாக வெளுத்து கட்டுவது படத்தின் பெரும்பலம்.

பிரபுதேவாவின் நல்ல நண்பர் கம் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யாவும் கூட அம்மாம் பெரிய உடம்பை தூக்கி கொண்டு அந்த அசத்து அசத்துவதும், கெட்ட நண்பர் கே.கே.மேனன் க்ளைமாக்ஸ் போட்டியில் பிரபுதேவா நடனக்குழுவினரை விலை பேசுவதும், அதில் ஒருவனை தூக்கி வந்து அவர்களது கான்செப்ட்டை இவரது குழு மூலம் அரங்கேற்றுவதும் எதிர்பாராத திருப்பங்கள். தனது நடன குழுவின் கான்செப்ட் களவாடப்பட்டது கடைசிநேரத்தில் தெரிந்தும் அதுபற்றி கவலைப்படாமல் மும்பை வீதிதோறும் குறிப்பாக விநாயகர் ஊர்வலங்களில் ஆடப்படும் பிள்ளையார் டான்ஸையே வித்தியாசமும், விறுவிறுப்பாக செய்து காட்டி நடன போட்டியில் பிரபுதேவா குழு வெல்வதும் சூப்பர்ப்!

பிரபுதேவா, கணேஷ் ஆச்சார்யா தவிர கே.கே.மேனன், சல்மான், லூரன் கோட்டிலிப் என்று நட்சத்திர பட்டாளம் மொத்தமும் வட இந்தியமுகங்களாகவே தெரிவது படத்தின் பலவீனம்!

ஆனாலும் சச்சின் ஜிகாரின் பிரமாண்ட இசையும், விஜய்குமார் அரோராவின் பிரமாதமான ஒளிப்பதிவும், ரெமோ டிசோசாவின் இயக்கத்தில், "ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்" படத்தை, இன, மொழி, முகபேதம் கடந்து தூக்கி நிறுத்துகின்றன பேஷ், பேஷ்!


ஆக மொத்தத்தில், "ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்" (ஏ.பி.சி.டி) - "ரசிக்கலாம் ஆடியன்ஸ்!"
 
 
நன்றி - தினமலர் , குமுதம் 
 
 
டிஸ்கி - மார்ச் மாசம் இயர் எண்டிங்க் ஒர்க் இருப்பதால் ஆஃபீசில் டைட் ஒர்க். அதனால் சுமாரான படங்களுக்கு படம் பார்த்து (ம்) விமர்சனம் டைப் பண்ண டைம் இல்லை 
 
 
 
 

Saturday, February 16, 2013

ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் - பிரபுதேவா பேட்டி

 

முதல் டான்ஸ் 3டி படத் தில் நானும் இருக்கேன்னு நாளைக்கு என் பசங்ககிட்ட பெருமையா சொல்லிக்கலாம். ஷூட்டிங் ஆரம்பிக் கும்போது 77 கிலோ இருந்தேன். இப்போ 71 கிலோ!'' - சட்டைக் காலரை உயர்த்தி விட்டுச் சிரிக்கிறார் பிரபுதேவா. 'ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்’ படத்தில் இளைஞர்களுடன் இணைந்து பணிபுரிந்த உற்சாகம் பிரபு தேவாவின் வார்த்தைகளில் தெறிக்கிறது.  ''பட டிரெய்லர் நல்லா இருக்கு. ஆனா, ஷூட்டிங் அப்போ, 'எனக்கு வயசாகிடுச்சு. கஷ்டமான ஸ்டெப்ஸ் தராதீங்க’னு சொன்னீங்களாமே?''''வயசாகிடுச்சுனு சொல்லலை. 39 வயசு ஆகிடுச்சுன்னுதான் சொன்னேன். ஹலோ, ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்குங்க.''

 ''இந்தியில் பரபரப்பான இயக்குநர் ஆகிட்டீங்க. ஆனா, தமிழ்ல நீங்க நடிச்ச 'களவாடிய பொழுதுகள்’ படம் வெளிவருவதில் ஏன் இவ்ளோ தாமதம்?''''தங்கர் எனக்கு நல்ல நண்பர். ரிலீஸ் பண்ணலைன்னா, நான் அவரை விட மாட்டேன்ல. 'களவாடிய பொழுதுகள்’ படம் எப்ப வெளிவந்தாலும் அதில் லைஃப் இருக்கும். 'பெண்ணின் மனதைத் தொட்டு’ படத்துக்குப் பிறகு, நான் நடிச்ச படங்களில் 'களவாடிய பொழுதுகள்’ என் மனசுக்கு நெருக்கமான படம். நானும் தங்கர் சாரைக் கேட்டுட்டே இருக்கேன். சீக்கிரமே நல்லபடியா ரிலீஸ் ஆகும்.''  ''தனிமை கஷ்டமா இல்லையா?''


''அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. கொஞ்சம் நேரம் கிடைச்சாலும் நான் பசங்களைப் பார்க்க, சென்னை வந்திருவேன். அவங்க என்னைப் பார்க்கணும்னு நினைச்சா, ஓடி வந்துடுவாங்க. இப்பதான் சமீபத்துல ஹாங்காங் போய்ட்டு வந்தோம். ரிஷிக்கு இப்போ ஒன்பது வயசு. ஃபோர்த் படிக்கிறான். ஆதித்யாவுக்கு நாலு வயசு. எல்.கே.ஜி. போறான். குழந்தைங்க உலகத்துக்குள்ள நாம போனா நேரம் போறதே தெரியலை. வாழ்க்கையில இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.'' ''காதல்பத்தி இப்போ உங்க பார்வை என்ன?''


''அழகான விஷயம். சூப்பர் மேட்டர்ல அது!''


 ''இன்னும் கொஞ்சம் டீட்டெய்லா சொல்லலாமே?''


''என் டைரக்ஷன்ல காதல் எப்பவும் இப்படித்தாங்க இருக்கும்''-


அட்டகாசமாகச் சிரிக்கிறார் பிரபுதேவா.

thanx - vikatan Wednesday, May 16, 2012

9 தாராவின் 2 வது முன்னாள் கணவர் பிரபுதேவா பேட்டி - கிடாவெட்டு

http://2.bp.blogspot.com/_wSFtzLJJeo0/TThEOPHPpqI/AAAAAAAAAtg/wvMQTG7SlqU/s1600/sonakshi-sinha-stills028.jpg 
அண்ணனோட லேட்டஸ்ட் ஹி ஹி - சோனாக்‌ஷி சின்ஹாம்லத்துடனான விவாகரத்தோ, நயன்தாராவுடனான பிரிவோ... எப்போதும் சென்சேஷனல் செய்திகளில் தவறாமல் இடம் பிடிக்கிறது பிரபுதேவாவின் பெயர். மும்பை விமான நிலையத்தில் ஃப்ளைட் பிடிக்கக்  காத்திருந்த இடைவேளையில் பேசியதில் இருந்து...1. '' 'ரவுடி ரத்தோர்’ இந்திப் படத்தில் அக்ஷய் குமாருடன் நம்ம விஜய் டான்ஸ் ஆடி இருப்பது பெரிய ஆச்சர்யம். அப்படியே அவரை இந்தியில் நடிக்கவும் வெச்சிருவீங்களா?''


சி.பி - தமிழ்ல்ல எப்படி நடிச்சாரோ அதே மாதிரி ஹிந்திலயும் நடிப்பாரா? ஐ மீன் பஞ்ச் டயலாக்?''தமிழ் 'சிறுத்தை’ ரீ-மேக்தான் 'ரவுடி ரத்தோர்’. படத்தில் ஓப்பனிங் ஸாங்கா வர்ற 'ஜிந்தாத்தா ஜிந்தா ஜிந்தா ஜிந்தாத்தா’ பாட்டுக்கு விஜய் சார் ஆடினா நல்லா இருக்கும்னு தோணுச்சு.  'ஓ.கேங்ண்ணா.... பண்ணிடலாம்ண்ணா’னு ரெடியாகி வந் தார் விஜய். விஜய்க்கு தேங்க்ஸ். அதே போல விஜய்க்கு ஓ.கே-ன்னா, அவருக்காக இந்தியில படம் பண்ண நான் ரெடி!''


சி.பி - அண்ணே, ஹிந்தில நடிக்கனும்னா முகத்துல எக்ஸ்பிரஸ்சன்ஸ் காட்டனும்னா. கெட்டப்ல சேஞ்ச் பண்னனும்.. 2''அப்படியே மும்பையிலேயே செட்டிலாகிடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?''


சி.பி - அண்ணன் மும்பைல செட்டில் ஆகறாரா? இல்லையா? என்பதை ஹன்சிகா தான் முடிவு பண்ணுவார் 


''உண்மையைச் சொல்லணும்னா... நான் அடுத்தும் இந்திப் படம்தான் இயக்குறேன். தமிழுக்கு வர எனக்கும் ஆசைதான். ஆனா, கையில இருக்கும் கமிட்மென்ட்ஸ்லாம் முடிச்சுட்டு தமிழ்நாடு பக்கம் வர எப்படியும் பத்துப் பதினைஞ்சு வருஷம் ஆகிடும்போல. நெஜமாத்தாங்க சொல்றேன்... அவ்வளவு வேலை மும்பையில் இருக்கு. நம்புங்க!''


சி.பி - ரத்தோர் டிரெய்லர் பார்த்தேன், படு கேவலமா இருந்தது, அந்த படம் ஊத்திக்கிச்சுன்னா  இதே வாய் , எனக்கு தமிழ் தான் மூச்சு, அதுல தான் பேச்சுன்னு பேக் அடிக்கும் பாருங்க. 


http://4.bp.blogspot.com/-bqOfIeMUCDY/TXraDnOd21I/AAAAAAAABfg/xdwNukC0BhA/s1600/Sonakshi%2BSinha%2BHot%2BWallpaper.jpg
3.''ஒரு பேட்டியில், 'நான் உண்மையா இருந்தேன். ஆனால், அவர் அப்படி இல்லை’னு உங்களைப் பற்றி நயன்தாரா சொல்லியிருக்காங்களே..!''


சி.பி - அவங்க சொன்னது தப்பு. அதாவது அம்மணி அவங்களோட 2 வது காதலருக்கு உண்மையா இருந்தாங்க, அய்யா  முதல் மனைவிக்கு உண்மையா இருந்தாங்க. இதுல என்ன தப்பு? கீப்னா அடக்கி வாசிக்கனும், இப்படி ஆக்ரமிக்க நினைக்கக்கூடாது , அப்புரம் உள்ளதும் போச்சுடா கில்மாக்கண்ணான்னு போக வேண்டியதுதான். 


''போன கேள்வியோடவே பேட்டியை முடிச்சிக்குங்க. போதும்'' என்றவரிடம், ''இல்லீங்க... இன்னும் நாலைஞ்சு கேள்விகள் இருக்கு'' என்றதும், ''ஓ.கே. நெக்ஸ்ட்... நெக்ஸ்ட்...'' என்றார்.

http://cinema.lankasri.com/photos/full/others/prabhudeva_party_003.jpg


4. ''உங்க பிறந்த நாள் விழாவில் த்ரிஷாவுடன் நீங்கள் நெருக்கமாக போஸ் கொடுத்தது யாரையோ காயப்படுத்தத்தான்னு சொல்றாங்களே?''


சி.பி - இது பெரிய பூமாராங்கா? அதுக்குத்தான் பதிலடியா “சிம்பு கூட நடிக்கத்தயார்”னு அம்மணி அறிக்கை விட்டாங்களே?''ஐயையோ... நெக்ஸ்ட் நெக்ஸ்ட்...''


5. ''நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி, சோனாக்ஷி சின்ஹானு உங்க ஹீரோயின் எல்லார்கூடவும் உங்களைச் சேர்த்துவெச்சுப் பேசப்படுறதைப் பத்தி?''''ஏங்க போதும்ங்க... ஃப்ளைட் வந்துடுச்சு. கிளம்புறேன்!''


 சி.பி - கடைசி 2 கேள்வியை நிஜமா கேட்டீங்களா? சும்மா நீங்களா போட்டுக்கறீங்களா? 

http://www.thedipaar.com/pictures/resize_20101126115258.jpg