Sunday, September 04, 2016

நெட் கனெக்சனை க்ளோஸ் பண்ணிட்டா?

மக்கள் நல கூட்டணியில் இணைபவர்கள் இணையலாம் -வை.கோ # ஜெ,கலைஞர் தவிர யார் வந்தாலும் சேர்த்துக்குவாராம்


=============2 1980-ல் வரும் பெண் வேடத்திற்காக 5 மணி நேரம் மேக்கப் போட்ட திரிஷா .. # மேக்கப்பை கலைச்சா 2030 ல் வரும் பெண்?=============3 நபிகள் நாயகத்தின் கொள்கைகளை,


லட்சியங்களை கருணாநிதி கடைபிடிக்கிறார் -மு.க. ஸ்டாலின்
அவரோட சொத்து எல்லாம் மக்களுக்கு எழுதி வைப்பாரா?


============

4 ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணி.. 11 இடத்தில் சரமாரியாக கத்தியால் குத்திய கொழுந்தனார்! # வாலி ,உயிர் படங்களை டெய்லி பாத்திருப்பான் போல

==========

5 அடிடா அவளை.. வெட்ரா அவளை".. இதெல்லாம் என்ன பாட்டு??.. சூடு போட்ட ஹைகோர்ட்! # பாடல் வரிக்கும் இனி சென்சார் அதீத கவனம் வைக்கனும்.

===========

6 ஜூலை 17ம் தேதி பாருங்க.. சுத்தமாக துடைத்தெடுக்கப் போகிறோம் தேமுதிகவை.. சந்திரகுமார் சவால் # கழுவிக்கழுவி ஊத்தப்போறார் போல

=============

7 மதுரை ஆதினம்.இப்தார் விருந்தில் பங்கேற்றதால் இந்து மதத்தில் இருந்து நீக்கபடுகிறார் - இந்து முண்ணனி # இப்டி ஒரு விதி இந்து மதத்தில் இருக்கா?

============

8 சுவாதி கொலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை - ஜாமின் மனுவில் ராம் குமார் # இதை செந்தில் குமார் சொன்னா ஒத்துக்காத ஜனம் ராம்குமார் சொன்னா

==========

9 ராம் குமார் தற்கொலைக்கு முயலவில்லை.போலீசுடன் வந்த ஆட்கள் தாக்கினர் - வக்கீல் # பிளேடில் கைரேகை கிடைக்கலைனு பிளேட்டை திருப்புங்க

===========

10 மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய வழக்கில் ஐஸ்வரியா ஜாமின் மனு தள்ளுபடி
# ஜட்ஜ் குன் கா டைப்னா கிடைக்காது.குமாரசாமி டைப் னா கிடைக்கும்

===========

11 எழுத்தாளர் பெருமாள் முருகன் மீதான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி!# இனிமேலாவது பெண்ணுக்கு பெருமை சேர்க்கும்படி எழுத முயற்சிக்கவும்

============

12 சி.பி.ஐ அதிகாரிகள் எனக்கூறி பெண்களிடம் பணம் பறித்த நான்கு இளைஞர்கள் கைது!# நல்ல வேளை.பணம் மட்டும் தான் போச்சு


================

13 நபிகளின் கொள்கையை கருணாநிதி கடைபிடிக்கிறார் - ஸ்டாலின் # நல்லவேளை.நபிகள் உயிரோட இல்லை.்
இருந்தா நொந்திருப்பாரு

===========

14 வாட்ஸ் அப்பில் நடத்தை குறித்து தவறான தகவல்களை பரப்பியதால் பெண் தற்கொலை முயற்சி# அதுக்கு நெட் கனெக்சனை க்ளோஸ் பண்ணிட்டா நிம்மதியா இருக்கலாம்

=============

15 SVS சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூவர் கொலை -தாளாளர் வாசுகி புகார்
# பிரின்சிபால்,லெக்சரர்,செக்யூரிட்டி 3 தரப்பையும் விசாரிங்க


===============


16 ஜஸ்வர்யாவுக்கு கல்யாணம் ஆகவில்லை அதனால் ஜாமீன் வேண்டும் -வழக்கறிஞர் # மேரேஜ் ஆகி இருந்தாலாவது புருசன் தேடுவார்,வாடுவார், இதெல்லாம் ஒரு ரீசனாய்யா?

================

17 தரவரிசைப் பட்டியலில்  40 மின்சார வாரியங்களில் தமிழக மின்சார வாரியம், 34வது இடம் - தமிழிசை # அப்போ 40க்கு 34 = 85% மார்க்அப்டினு பிளேட்டை திருப்பி போடுவாங்களோ?


=================

18  அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்தால் தான், நாட்டில் குற்றங்கள் குறையும்.-தமிழிசை # அப்டி நேர்மையா செயல் பட்டா போலீசின் வருமானம் குறையுமே?


=================


19  

பொது சிவில் சட்டம் என்ற  சிக்கலான பிரச்னையை கையிலெடுப்பது, குளவி கூட்டுக்குள் கையை விடுவதற்கு சமம்.-கலைஞர் # குளவிகளை ஒழிப்பதே நம் வேலை எனும்போது பாதுகாப்பாக கை விட்டா என்ன தப்பு?


=================

20 

: வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட கறுப்பு பணத்தை மீட்பதில், மோடி, தோல்வி-ராம் ஜெத்மலானி # பொறுங்க ,இப்போதான் வெளிநாடு டூர் ஒரு ரவுண்ட் முடிச்சிருக்காரு


==================

0 comments: