Friday, September 16, 2016

ஹிலாரி கிளிண்ட்டன் ஃபோட்டோஸ் மியாவ்

1  முதல்வர் ஜெயலலிதா குறித்து யார் விமர்சித்தாலும் எனக்கு கோபம் வரும்.-அ.தி.மு.க., -- எம்.பி., சசிகலா புஷ்பா: # கலைஞர் கூடத்தான் விமர்சிக்கறாரு,என்ன செய்வீங்க?


===================


2  சட்டசபையில், தி.மு.க., வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. ஜனநாயக நாட்டில், மாற்று  கருத்துக்களை ஏற்று, அவர்களை ஆளுங்கட்சியினர் பேச அனுமதிக்க வேண்டும்.-தா.பாண்டியன் # அம்மா வாழ்கன்னு பேசுனா அனுமதி உண்டாம் 


=====================

3  பா.ஜ.,வில் வாரிசு அரசியல் இல்லை: அமித் ஷா  #  ஆனா சிபாரிசு அரசியல் இருக்காமே?


====================

4  பீஹாரில் கள்ளுக்கு தடை இல்லை:ஒரே நாளில் நிதிஷ் 'பல்டி' # ஆடுவோமே கள்ளு போடுவோமே-ன்னு குடிமக்கள் மகிழ்ச்சி


================

5  திருச்சி சிவாவை தாக்கியது ஏன்?:சசிகலா புஷ்பாவிடம் ஜெ., விசாரணை # பர்சனல் பிரச்சனைன்னு சொல்ல முடியாது.ஜெ வை விமர்சிச்சார்னு அடிச்சு விடுவாரு 


==================6

6  திருச்சி சிவாவை தாக்கியது ஏன்?:சசிகலா புஷ்பாவிடம் ஜெ., விசாரணை # புஷ்பா விடம் அடி வாங்கியது ஏன்?னு கலைஞர் விசாரிப்பாரா?


=================

7  பா.ஜ.,வில் எனக்குப் பின் யார் தலைவராக வருவார் என்பது யாருக்குமே தெரியாது. -அமித் ஷா # ஏன்? உங்களுக்கு 2 வாரிசு இருந்தாத்தானே பதவிச்சண்டை வரும்?


===================8   பதவி விலக முடியாது என சசிகலா புஷ்பா எம்.பி., முரண்டு # ஒரு உறைக்குள் ஒரு வாள் தான் இருக்கனும், ஒரு தோட்டத்தில் ஒரு சசி தான் இருக்கனும் போல

===================9 அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது மகிழ்ச்சி - சசிகலா புஷ்பா. # கபாலி ரசிகை போல

===============

10  நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்- சசிகலா புஷ்பா # ரிசைன் செஞ்சா நமக்கு மரியாதை, டெர்மினேட் செஞ்சா அவமரியாதை

============

11 அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் மனைவியின் நிர்வாண புகைப்படங்கள் வெளியானதால் பரபரப்பு # இதுக்குப்போட்டியா அடுத்ததா ஹிலாரி கிளிண்ட்டன் ஃபோட்டோஸ் வருமோ?

===============


12 6 வயது சிறுமியை திருமணம் செய்த 60 வயது முதியவர் கைது # ஆறிலிருந்து அறுபது வரை ரஜினி ரசிகர் மன்றத்தலைவராம்


==============

13 சொகுசு விமானம், கார்கள் உள்பட விஜய் மல்லையாவின் ரூ.700 கோடி சொத்துகள் விரைவில் ஏலம் # அவரே மாறுவேஷத்தில் வந்து ஏலத்தில் தன் சொத்தை மீட்டுடப்போறாரு

==============


14 கருணாநிதியுடன் கலந்து பேசி அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுக்கப்படும்-திருச்சி சிவா # திமுக வில் சேர்த்து விட்டுடுங்க. சவுரியம்

=================
15 ஜெ தொடர்ந்த அவதூறு வழக்குகளின் லிஸ்ட்டை சமர்பிக்கவும்-கோர்ட்! # இப்படிக்கேட்டதுக்காக ஜட்ஜ் மேல ஒரு அவதூறு வழக்கு போட்டுடுவாரோ?ஜெ


=================

16 திருச்சி சிவா,வை நான் உணர்ச்சிவசப்பட்டு தாக்கிய சம்பவத்தை, கருணாநிதிக்கு, கனிமொழி மூலம் தெரியப்படுத்தினேன். -சசிகலா புஷ்பா: #ஓ, அப்பவே அப்ளிகேஷன் ஃபார்ம் போட்டு வெச்ட்டீங்க?


===================


17   ஒரு லிட்டர் பாலை, 25 ரூபாய்க்கு வழங்கினால், நல்லது- கலைஞர்  # நம்ம ஆட்சில நாம வழங்கினோமா?


=======================

18   இந்த ஆட்சியை தட்டிக் கேட்கும் உரிமையை, நமக்கு மக்கள் கொடுத்துள்ளனர். - ஸ்டாலின் # ஆனா எங்கே போனாலும் நம்ம கட்சி ஆளுங்களுக்கு தானே அடி விழுது?


==========================


19  சட்டசபை, சண்டை சபையாக உள்ளது. இதற்கு, 100 பேர் எதற்கு? 10 பேர் போதுமே- ண்ருட்டி ராமச்சந்திரன்  # சட்ட சபை ஜால்ரா சபையா ஆகக்கூடாதுனு தான் மக்கள் 89 சீட் திமுக வுக்கு தந்திருக்காங்க?- 


======================


20 தனியார் நிறுவனம் தற்போது உயர்த்திய பால் விலையை குறைப்பதற்கு, ஜெ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜி.கே.வாசன் அறிக்கை # சரக்கு ரேட்டை எவ்ளோ வேணாலும் ஏத்திக்குங்க


=============

0 comments: