Saturday, September 24, 2016

டாக்டர்.டீப் ஸ்லீப்பிங் வரனும்னா என்ன செய்யனும்?இல்லை.இன்னைக்கு செலவுதான்
அய்யோ ஊர்மிளா,உன் வீட்டுக்கு வரவா?ன்னு கேட்டேன்


============

2 டியர்.10 நிமிசம் முன் போன் பண்ணேனே.ஏன் எடுக்கலை?

பார்க்கலை/ரிங் டோன் கேட்கலை/சரி.விடு.எதுக்கு போன் பண்ணே?
ஏன் எடுக்கலைனு சண்டை போடத்தான்
==============

3 ஜெயந்தி கிட்டத்தட்ட நயன் தாரா மாதிரி

சாயலிலா?
இல்ல.ஜோடி சேர்ப்பதில்.காந்தி ஜெயந்தி கிருஷ்ண ஜெயந்தி னு எல்லார் கூடவும் ஜோடி ஆகிடுதே?

=============

4 மலேசியா பன் பேபி க்கு தமிழ் நாட்டில் மேரேஜ் நடந்தா எந்த ஊர் மேட்சுக்கு மேட்ச்?

பண்ணாரி அம்மன் கோவில்

=============

5 கிருஷ்ணன் ஏன் நீல நிறமா காட்ட படுறார்னு தெரியுமா?"

தெரில
அவர் தங்கி இருப்பது ப்ளூ மவுன்ட்டன் ஹோட்டல்ல


=============


6 டாக்டர்.சன்னிலியோன் புடவை கட்டிட்டு வர மாதிரி எல்லாம் கனவு வருது.. இது என்ன நோயா இருக்கும்?

வேலையே இல்லாம சேலை பத்தியே யோசிக்கும் வியாதி

=============

7 டியர்.உங்களுக்கு கால் பண்ணேன்.லைன் பிசி ன்னு வந்துதே

சும்மா கதை விடாதே.நானும் ப்ரீ.என் லைனும் ப்ரீ.எந்தக்காலத்துல பிசியா இருந்தேன்?


===============

8 சார்.கல்வித்தந்தை எனும் பெயர் எப்டி கிடைச்சது?

சிம்ப்பிள்.என் பொண்ணுக்கு கல்வி னு பேர் வெச்சேன்.இதுக்குப்போய் அலட்டிக்கலாமா?

=============

9 டாக்டர். நான் சாப்பிட்டுவிட்டு அரைமணிநேரம் கழிச்சுதான் குடிப்பேன். இதனால் எதுவும் பாதிப்பு இருக்குமா ?

என்ன சாப்பிட்டுட்டு?
சைடு டிஷ்


==============

10 குடிகாரர்களின் ஆகப்பெரிய முட்டாள் தனம் எது டாக்டர்?

கொஞ்சமா குடிச்சா எதும் ஆகாதுனு நினைச்சுக்கறது


=============

11 டாக்டர்
ரம்மியமான- உறக்கம் வர என்ன செய்யனும்?
ரம் குடிக்காம ரம்மி ஆடாம ரம்யாட்ட கடலை போடாம நேரத்துலயே தூங்கப்போகனும்்

============

12 டாக்டர்.எல்லா மெடிசன்லயும் ஆல்ஹஹால் கலந்திருக்கு.அப்போ சரக்கு அடிப்பது தப்பில்லைதானே?

நோய் வராம இருந்தா தப்பில்லை.உனக்கு வந்திடுச்சே?


=============

13 டாக்டர்.நான் டெய்லி பீர் மட்டும் சாப்பிடறேன்.என்ன.வரும்?

முதல்ல தொந்தி வரும் ,வாந்தி வரும் கல்லீரல் நோய் வரும்
சாவு சீக்கிரம்.வரும்


=============

14 டியர்.பெட்ரூம் கதவு தாழ்ப்பாள் ரிப்பேர்.என்ன பண்ண?

சரி.விடு.அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்(ப்பாள்)?னு சமாளிப்போம்


==============

15 சார்.கும்பகோணம்.டிகிரி காபி 1 பார்சல்.

இந்தாங்க.
ஆறி இருக்கே?
கும்பகோணம் டூ ஈரோடு 185 கிமீ வரனும்ல?

=============


16 பிராமணர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தமிழகத்தில் கிருஷ்ணர் இஷ்ட தெய்வமாக இல்லாததன் பின்னணி என்ன..?

பல பொண்ணுங்களோட இதயத்தைத்திருடுனதாலோ?


===============

17 டாக்டர். சாப்டாதான் கவிதை வரும்னு சிலர் சொல்றாங்களே நிஜமா?

ஏம்மா.சாப்ட்டா நல்லா தூக்கம் தான் வரும் இல்ல ஏப்பம்.வரும்.கவிதை எப்டிம்மா.வரும்?


===============

18 டியர்.மூட்டை தூக்கியாச்சு உன்ன காப்பாத்துவேனு நீங்க சொன்னதை நம்பித்தான் வந்தேன்.

சரி வா.உன்னை உப்பு மூட்டை தூக்கறேன்்


===============


19 தலைவரே!குற்ற பரம்பரை படம் வெளிவந்தா ஆபத்துனு அஞ்சறீங்களே ஏன்?

என் பரம்பரை பற்றி சொல்லி இருந்தா ஆபத்து


=============

20 டாக்டர்.டீப் ஸ்லீப்பிங் வரனும்னா என்ன செய்யனும்?

நீர் மூழ்கிக்கப்பல்ல ட்ராவல் பண்ணனும்


===============0 comments: