Saturday, September 24, 2016

அதிக பணக்காரர்கள் வாழும் டாப்10 பட்டியலில்....

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட குமாரசாமி எதிர்ப்பு: # எல்லா குமாரசாமிங்களும் வில்லன் ரோலுக்கு தாவிட்டாகளா?

===========

2 சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்- ஸ்டாலின்#,வம்பு .ஜெகத்ரட்சகன், கருப்பன் வீடியோ மேட்டர் ் ஊருக்கு தெரிஞ்சிடும்்

=============

3 பச்சமுத்துவிடம் போலீஸ் விசாரணை! # பச்சை பச்சையா பொய் பேசுவாரு விட்றாதீங்க


============

4 சத்தியமங்கலம் ,பவானிசாகர் அணையில் முதலைகள்: பீதியில் மக்கள்!# பண முதலைகள் தொந்தரவு பத்தாதுன்னு நிஜ முதலைகள் தொந்தரவுமா?


===========

5 ஸ்டாலினை சட்டசபையில் வைத்து பேச ஜெக்கு தைரியம்இல்லை-கனிமொழி # கலைஞருக்கு சட்டசபைக்கு வரவே தைரியம் இல்லை?

============

6 விஜயகாந்த் பிறந்தநாள்-"பீனிக்ஸ்" கேக் ஊட்டி ம.ந.கூ. தலைவர்கள் வாழ்த்து# ஆப்பு கேக்கு ரூபத்திலும் வரும் போல.கேப்டன் கேக்குதா சார்?


=============


7 பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்!# அப்டியே ஆண்களின் திருமணம்.30 க்குள் முடிச்சிடனும்னு சட்டம் வரனும்.


===========

8 SRM கல்விக்குழுமம், மருத்துவக் கல்லூரிகள், சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படும்!=ஜெ # வடக்குப்பட்டி ராமசாமி சேத்து வெச்ச சொத்தெல்லாம் ஊ ஊ ஊ


===========

9 பச்சமுத்துவிடம் விடிய விடிய காவல்துறையினர் விசாரணை: # விடிஞ்சதும் பச்சமுத்து = சார்.நைட் பூரா ஏதோ கேட்டீகளே?இன்னா?தூங்கிட்டேன்

================

10 213 அவதூறு வழக்குகள் தொடர்ந்ததற்காக ஜெ வுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்: # கூட்டுத்தொகை 6,வருது.ராசிப்படி 9,வரனும்.இன்னும் 3 வழக்கு போடுங்க


==============

11 தமிழகத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டு தமிழனே ஆளும் நிலை ஏற்படும்: கலைஞர் # மறுமலர்ச்சி தி மு க வை கோ சி எம் ஆகிடுவாரோ?


===============

12 தமிழ்நாட்டில் மருத்துவசீட் விலை ரூ.1.85 கோடியாக உயர்வு: செய்தி # டாக்ட"ரேட்" ஓவர் ரேட்


===============


13 உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ, தந்தை பாண்டி வீட்டில் 3 கிலோ கஞ்சா பறிமுதல் - செய்தி # அவதூறுக்"கஞ்சா"தவர்.


===============

14 தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்! # புரட்சித்தலைவி மாநிலம்னு அறிவிச்சிடப்போறாங்க


===============


15 பெட்ரோலுடன் மண்ணெண்ணை கலந்து விற்பனை : நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!# தண்ணி கலக்க முடியாது.அதான் இப்டி


================

16 1099 ரூபாய்க்கு Unlimited 3G-ஐ வழங்குகிறது பி.எஸ்.என்.எல்”# ரிலையன்சுக்கு ஆப்பு

==============

17 இலங்கை தமிழர்கள் குறித்து இயக்குநர் சேரன் சர்ச்சை கருத்து! # தவமாய் தவமிருந்து சம்பாதிச்ச பேரை இப்டி கெடுத்துக்கிட்டாரே?

==============

18 111 பேரிடம் ரூ74.39 கோடி வசூல் மோசடியில் பச்சமுத்துவுக்கும் தொடர்பிருப்பதால் கைது #111 பேருக்கும் 111 (பட்டை நாமம்)போட்டுட்டார் போல


================

19 கோர்ட்டுக்கு போகும் வழியில் பச்சமுத்துவுக்கு ‘நெஞ்சுவலி’... # அப்டியே போக விட்ருக்கனும்


==============

20 அதிக பணக்காரர்கள் வாழும் டாப்10 பட்டியலில் இந்தியா!
-செய்தி! # அதிக ஏழைகள் வாழும் நாடும் நம்முதுதான்.ஆல் சென்ட்டர் நெ 1

=============

0 comments: