Saturday, September 10, 2016

நித்யானந்தா பிரின்சிபால் ஆகாம காப்பாத்திட்டீங்க

1 திமுக ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை- ரூ.200 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு # விழுது கிட்டேயே இவ்ளோன்னா ஆலமரத்துக்கிட்டே எவ்ளோ இருக்கும்?

================

2 புதிய சாலைகள், துறைமுகம், ரயில் பாதை, விமான நிலையங்கள் அமைக்க, ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது-நிதின் கட்கரி:  #  கருணா”நிதி”, ஜெயலலி”தா”-ன்னு கேட்டுப்பார்க்கலாமே?

============

3 குஷ்பு விமர்சனம் செய்யும் அளவுக்கு, தமிழக, பா.ஜ., இல்லை;-தமிழிசை # அப்போ சுந்தர் சி யாவது விமர்சிக்கலாமா?


=============

4   நான் காங்கிரசுக்காகத் தான் உழைப்பேனே தவிர, இளங்கோவனுக்காக உழைக்கவில்லை.-குஷ்பூ # இப்படி அறிக்கை விடுன்னு மேலிடம் நிர்ப்பந்தம் செய்திருக்குமோ?


================

5  'கல்வி காவி மயமாகாது!':ஜாவடேகர் உறுதி # நல்ல வேளை, நித்யானந்தா பிரின்சிபால் ஆகாம காப்பாத்திட்டீங்க

=================

6 பஸ் படிகட்டுகளில் ‛சென்சார்': மேனகா # முத படில சென்சார், 2வது படில சினிமா , 3 வது படில கேண்ட்டீனா?


================

பார்த்திபன் இயக்கும் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' # தமிழ் வினாத்தாள்ல இருந்து டைட்டில்.அப்போ கதை கதைத்திரட்டு ல இருந்தா?


===============

8 தொகுதிக்கு 20000 போலி வாக்காளர்கள்
- தேர்தல் ஆணையம் # மேரேஜ் முடிஞ்சு 3 மாசம் கழிச்சு மொய் எழுதுனவன் போலினு கண்டுபிடிச்சா மாதிரி்

=============

9 மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு# கோபப்பட்டு கரண்ட்டை கட் பண்ணிடப்போறாங்க

=============

10 தபால் அலுவலகங்களில் கங்கை நீர் விற்பனை... மதச்சார்பற்ற குடியரசை கேவலப்படுத்துவதா? கருணாநிதி # தாமரைக்கு தண்ணி காட்டறாரு தலைவரு.

=============

11 தமிழகத்திற்கு 650 கோடி கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது# லோன் மேளா எதுனா நடக்குதா?


=================


12 ஜெகத்ரட்சகன் வீட்டில் 40 கிலோ தங்கம், ரூ18 கோடி பறிமுதல்- ரூ600 கோடி சொத்து # அப்டியே டிவிடி எத்தனை சிக்குச்சுன்னும் சொல்லிடுங்க


=================

13 துருக்கியில் பொதுஇடங்களில் இந்தியர்கள் கூட வேண்டாம்: சுஷ்மா ஸ்வராஜ் # AIR LIFT படம் இப்போதான் ரிலீஸ் ஆச்சு்


================

14 “கொலை”க்”கஞ்சா” மாநிலமாகத் மாறி வருகிறது தமிழகம் - கருணாநிதி # இதுக்கு விதை நாம போட்டது


================

15 ஜெகத்ரட்சகனை வீட்டில் சிறைக் கைதி போல அடைத்து வைத்தது முறைதானா? கருணாநிதி # முட்டிக்கு முட்டி தட்டி லாக்கப்ல விசாரணை செய்யனும்கறாரா?


==============

19 6 மாதம் கெட்டுப்போகாத 8 வகையான உணவுகள்... ரயில் பயணிகளுக்காக ஐஆர்சிடிசி அறிமுகம் # இயற்கைக்கு மாறாக எதிராக எது வந்தாலும் கெடுதலே

===============

20 திருப்பூரில் ரூ.6 கோடி கேட்டு தொழிலதிபர் கடத்தல்- சேலம் அருகே விட்டு சென்ற மர்மகும்பல்# சேலம் போற வரை தான் கைல காசு இருந்துச்சு போல!


===================

0 comments: