Thursday, September 22, 2016

டேய் யார்ராவன் என்னோட மென்சன் டேப்ல கடலைய போட்டுக்கிட்டு.

1  சார்.கோவை பெண்கள் அதிக அழகா?திருச்சி பெண்களா?


அவ்ளோ துல்லியமா கணிக்கத்தெரில.பொதுவா எந்த ஊரா இருந்தாலும் பொண்ணுங்க அழகுதான்


=====================\\2

2 சார்.இங்கன பூக்கடை எதுனா இருக்கா?


அதோ அந்த கார்னர்ல ஒரு மலர் நிலையம் இருக்கு
ட்விட்டர் அடிக்ட் டேவிட் =பனி மலர் நிலையமா?கருணை மலர் நிலையமா?==============

3 சார்.உங்க ஜோக்ஸ் சிரிக்கற மாதிரி இல்லையே?


மிஸ்.அட்ரஸ் சொன்னா நேர்ல வந்து கிச்சு கிச்சு பண்ணி விட்டுட்டே ஜோக் சொல்றேன்.==============


4 விஜய் ரசிகர்களுக்குப்பிடிக்காத பட டைட்டில் எவை?


வணங்கா முடி
புது நெல்லு புதுநாத்து


==============

5 சார்.சுமார் தான் னு நீங்க விமர்சிச்ச படம் 100 கோடி வசூல் ஆச்சே.இப்போ என்ன சொல்றீங்க?


ஒரு திருத்தம்.100 கோடின்னு நீங்களா சொல்லிக்கிட்டீங்க


=============

6 சன்டே ஒர்க் பண்ணினா டபுள்.சேலரி.


சார்.ஓக்கே.அப்போ மன்டே லீவ் எடுத்துக்கிட்டா லாபம்.


=============


7 சிவாஜி கணேசன் ,கமல் ஹாசன் வரிசைல செவாலியே விருது வாங்க தகுதி உள்ளவர் யார்?


விருது பேர் ல யே க்ளூ இருக்கே? செ"வாலி"யே--===============

8 டியர்.எனக்கு எப்போ தங்கம் வாங்கித்தருவீங்க?


எல்லாத்துக்கும் என்னை எதிர்பார்க்காதே.ஒலிம்பிக்ல ட்ரை பண்ணு============

9 விதண்டாவாதம் பண்றவங்களைக்கண்டா.எனக்கு சுத்தமா பிடிக்காது.


நான் அப்டி இல்லை.பொண்ணுங்கன்னா பிடிக்கும்
===============

10 சார்.உங்களுக்கு செவாலியர் விருது கிடைக்கும்னு எதிர்பார்க்கறீங்களா?


யோவ்.இது என்ன குமுதம் பட்டமா?விஜய் டிவி விருதா?சட்டுபுட்டுனு "வாங்க"?===========

11 விக்ரம் ,ரஜினி ,கமல் என்ன வித்யாசம்?


இருமுகன்
மூன்று முகன்
பன்முகன்=============

12 சார்.உங்க படத்துல ஹீரோ அடிக்கடி சரக்கு அடிக்கறாரே ஏன்?


ஹீரோ பேரு ,பட டைட்டில் தர்"மது"ரை ஆச்சே?=============

13 சமையல் குறிப்புல சுரைக்காய் சாம்பார் மட்டும் ஸ்பெஷல்னு எப்டி சொல்றே?


ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது பழமொழியை பொய்ப்பிக்குதே?================

14 தமிழ் மிஸ் தன்யா = லட்டு க்கு சின்ன ல வருமா? பெரிய ள வருமா? சிறப்பு ழ வருமா?


டீச்சர்.சின்ன லட்டு க்கு சின்ன ல மீடியம் ள ,திருப்பதி லட்டு ழ==========

15 டாக்டர்.நைட்ல தூக்கம் வர மாட்டிங்குது,

காலைல முழிப்பு வர மாட்டிங்குது
மிட் நைட் மசாலா பார்க்கறதை நிறுத்துங்க============

16 சார்.கிருஷ்ண ஜெயந்தி யை கொண்டாடுனீங்களா?

ம்ஹூம்
போன வருசம் ஜெயந்தியைக்கொண்டாடுனப்பவே அவங்கப்பா என்னை துவைச்சு எடுத்துட்டாரு

===================

17 டெய்லி பூரி செஞ்சா வீட்ல திட்றாங்க டாக்டர்

செஞ்சா திட்ட மாட்டாங்களே? சாப்ட்டாதான் திட்டுவாங்க.யோசிச்சுப்பாருங்க மிஸ்

================


18 டேய் யார்ராவன் என்னோட மென்சன் டேப்ல கடலைய போட்டுக்கிட்டு.

சன்யாசி சார்.மத்தவங்க உங்க முன் சுகவாசியா இருந்தா பிடிக்காதா?ஏன்?


================


19 என்னை ஒரு பொண்ணு கன்னியமானவன் சொல்லிடுச்சு..

கண்ணியமானவன்னு சொல்லி இருக்கும்.கன்னி யமானவன்னு எப்டி தெரிஞ்சிருக்கும்?


==============

20 இன்னைக்குதான் கூகுள் உதயமான தினமா?
யோவ்.அது கூகுளாஷ்டமி இல்ல.கோகுலாஷ்டமி


============

0 comments: