Wednesday, September 14, 2016

டியர், டெய்லி மருதாணி வெச்சுட்டு ரூம்க்கு வர்றியே ஏன்?

மேத்ஸ் மிஸ் மேகலா =160 கோடி ல எத்தனை சைபர் இருக்கு?மாண்புமிகு மாணவன் = ஒரு சைபர் டீச்சர்===========

2 சார்.உங்க படத்தோட.100,வது நாள் போஸ்டர் ல தியேட்டர்கள் பேரே இல்லையே?யோவ்.ரிலீஸ் ஆகி 100 நாள் ஆச்சுன்னு அர்த்தம்.


=============

3 யுவர் ஆனர்.படம் ரிலீஸ் ஆன அடுத்த நாளே நெட்ல ரிலீஸ் பண்ண தடை விதிச்சீங்க.ஆமா
நம்மாளு இன்னைக்கே ரிலீஸ் பண்ணிட்டாப்டி


============

4 சார்.இன் கம் டாக்ஸ் ரெய்டு.அந்தப்பட.வசூல் 160 கோடி.இந்தப்பட.வசூல் 1000ரூபா *10 லட்சம் கணக்கு காட்டுங்கசார்.நீங்க அதை எல்லாமா நம்பறீங்க?


==============

5 .சிலர் " பட்டையைக் கிளப்பிய பர்ஸ்ட் ஹாஃப் "னு ஸ்டேட்டஸ் போடறாங்களே?


டாஸ்மாக்ல இருந்தா?தியேட்டர்ல இருந்தா? பட்டை ,ஆப்.குவாட்டர் குறியீடு்


==========

6 சார்.கதைப்படி நீங்க உங்க சம்சாரத்தையும் குழந்தையையும் படம் பூரா தேடிட்டு இருக்கீங்கஓஹோ.ஆடியன்ஸ் கதை எங்கே?ன்னு தேடுவாங்களே?


============

7 படம் பார்க்காமயே பிளாப் ஆகிய ரிசல்ட்டை ஏன் பரப்பறீங்க?படம் ரிலீஸ் ஆகி தரம் நிரூபிக்கும் முன் நீங்க மட்டும்1000RS ரேட் ஏத்தி சம்பாதிக்கலாமா


==============

8 படத்துல ஹீரோ ஹீரோயின் மச்சினி நங்கையா எல்லாரும் அழற சீன் இருக்காமே?ஓஹோ.படத்தோட புரொடியூசர் அழ ஆரம்பிக்கலையா இன்னும்?


============

9 Full volume வைத்தால் கூட வசனங்கள் காதில் விழவில்லை.


ஹலோ மேடம் .நீங்க பாத்துட்டு இருப்பது கமலின் பேசும் படம்னு நினைக்கேன்.அதில் டயலாக்சே இல்ல


===============


10 சார்.படம் மீடியமா நல்லாதானே இருக்கு.ஏன் நெகடிவ் ரிவ்யூ வருது?பாயின்ட் அது இல்ல.இவ்ளோ பில்டப்க்கும்,1000 ரூபாக்கும் ஒர்த் இல்ல


============


11 போன படத்துல விட்ட பணத்தை இந்தப்படத்து ல எடுத்திடலாம்னு இருந்தேன்.
ஓஹோ.சரி இந்தப்படத்துல விட்ட பணத்தை எதுல எடுக்கப்போறீங்க?


=============

12 விஜய் மல்லய்யா     மேல என்ன நடவடிக்கை எடுத்தீங்க?

 வக்கீல் நோட்டீஸ் விட்டிருக்கோம்


அவர் அட்ரஸ்க்கா? அவருதான் இந்தியாவுலயே இல்லயே? 


================


13  சார், 25 வருசமா நீங்க ஜெயில்ல தானே இருந்தீங்க?

 ஆமா

 அப்போ வடிவேல் காமெடி லேட்டஸ்ட் எல்லாம் அப்டேட்டா தெரிஞ்சது எப்படி?


=================


14   கைதி உங்க கண் முன்னாலயே தப்பி இருக்கான் எப்படி?


 கபாலி பாணில ஏதோ புல் அப்ஸ்  எடுக்கறான்னு அசால்ட்டா இருந்துட்டோம்


==================


15 மேடம், திடீர்னு உங்க சம் பளம் 4 கோடி ஆகிடுச்சே எப்படி?

 எனக்கு எல்லாமே 4 தான் , ஐ மீன் லக்கி நெம்பர் , லக்கி சேலரி===================


16   தலைவரே! ஏன் கோபமா வெளிநடப்பு பண்ணீட்டீங்க? கெட்ட வார்த்தைல திட்டீட்டாங்களா?

 இல்லை, பேர் சொல்லி கூப்ட்டாங்க==================


17  மேடம், மேரேஜ் ஆகி ஒரு வருசத்துல ஏன் டைவர்ஸ் அப்ளை பண்ணிட்டீங்க?

 எல்லாருக்கும் ஒரு ரவுண்ட் வாய்ப்பு தரலாம்னு இருக்கேன்


==================

18  

 தலைவரே! உங்க பையன் உங்க எதிரி கட்சில இணையப்போறாராம், தடுக்கலை?

 நான் தான் யா அனுப்ச்சேன். எல்லாம் சாணக்கியத்தனம் தான்


==================


19  டாக்டர், மருதாணி ல கால்சியம் சத்து நிறைய இருக்காமே?

 ஆமா, அதுக்காக மருதாணி இலைப்பொடில பல் துலக்கினா காவிக்கறை படிஞ்சிடும்


================


20 டியர், டெய்லி மருதாணி வெச்சுட்டு ரூம்க்கு வர்றியே ஏன்?

 ஆடி மாசம் முடியும் வரை இது கலையாம பார்த்துக்கனுமாம்


====================

0 comments: