Thursday, September 15, 2016

டூ வீலர் , ஃபோர் வீலர் ஓட்டக்கத்துக்கறதை விட ரொம்ப முக்கியம் எது?

1

பொண்ணுங்க கருத்துக்கு ஒரு எதிர் கருத்தும் சொல்லிட்டு க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டா நீங்க சொன்னதும் சரிதான்னு பல்டியும் அடிப்பான் நெட் தமிழன்


================


2  டாக்டர் , விக்கல் நிக்கவே மாட்டேங்குது.


டெய்லி போதுமான அளவு தண்ணீர் குடிச்சா விக்கல் உங்க பக்கமே வராது

=================


3 தனுஷ்-ன் ஸ்பெஷாலிட்டிகள் என்ன?

சூப்பர் ஸ்டார் பொண்ணு 1 , சூப்பர் ஆக்டர் பொண்ணுங்க 2 என 3 பேரையும் கரெக்ட் பண்ணின ஒரே தமிழ் நடிகர்


==================


4 தனக்கு  தலைவலி வந்தாக்கூட நெட் தமிழன் ஆன் லைன்ல எதுனா லேடி டாக்டரோ ,நர்சோ இருக்கா?ன்னு தான் தேடிட்டு இருக்கான், படுத்து தூங்கினா சரி ஆகிடும்ல?
==================
ஒரு பெண் உன் முன் அழுகிறாள் என்றால்,அவள் ஏகப்பட்ட செலவுகள் அவளுக்காக செய்யச்சொல்லி கோரிக்கைகள் வைத்திருப்பாள்.


====================

6 மீன ராசி அன்பர்களே! குருபெயர்ச்சி பலன்கள் அபாரமா இருக்கு, இந்த வருசம் பதவி உயர்வு , புதிய சொத்துக்கள் வாங்குதல் எல்லாம் அமோகமா இருக்கும், எஞ்சாய்======================
7  


ஒரு பாடல் பிடிக்கும் என்றால்,எனக்கு ஏன் அந்த பாடல் பிடித்திருங்கிறது என்பதை ஆராய ஒரு கும்பல் இருக்கிறது

உங்க கிட்டே ஒரு அலம்பல் இருக்கு மேடம்


==================

8 நான் பொண்ணுங்களுக்கு அதிக இடம் தர மாட்டேன்

 ஓஹோ, எப்டி?

 யாரா இருந்தாலும் தலா 2 செண்ட் இடம் தான் தருவேன்


=================


தமிழ் சீரியல் கதை எழுதனும்னா கிரிமினலா இருக்கனுமோ?

தேவை இல்லை, அழுமூஞ்சியாவோ, அரை லூசாவோ இருந்தாக்கூட போதும்


==============

10 மொக்கை ஜோக் சொல்வதில் யார் லீடிங், ஆணா? பெண்ணா?

அது தெரில, ஆனா பொண்ணுங்களுக்கு தான் சொல்வது மொக்கைதான்னு அவங்களுக்கே தெரியாது


=================


11 மொக்கை களையும் ரசிக்க மனம் வேண்டுமெனில் ஆணாக பிறந்திருக்கனுமா? பெண்ணா பிறந்திருக்கனுமா?


பிறந்து கொஞ்சம் வளர்ந்திருக்கனும், ஆணோ, பெண்ணோ


===============

12 ஃபேஸ்புக்;ல பொண்ணுங்க போடும் மொக்கைகளுக்கு லைக்ஸ் கிடைக்க என்ன காரணம்?

வலையில் விரிக்கப்படும் வலை


=================

13 தன்னோட படைப்புகளுக்காகத்தான் லைக்ஸ் கிடைக்குது, வேற எந்த உள்நோக்கமும் இல்லைன்னு பொண்ணுங்க ஃபேஸ்புக்ல நம்பறாங்க,அந்த நம்பிக்கைதான் வாழ்க்கை


=================


14 பெரும்பாலும் ஸ்கூல்/காலேஜ் வாழ்வில் முதல் மார்க் வாங்கியவர்கள் சம்பளம் பெறுபவர்களாகவும், கடைசி பெஞ்ச் மாணவர்கள் சம்பளம் தருபவர்களாகவும் வாழ்வில் உயர்கிறார்கள் ===================
15 ஆதார் அடையாள அட்டை மத்திய அரசு கட்டுப்பாட்டில். ஆனா மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகள் ஆதார் அட்டையை கட்டாயம் ஆக்கும் மர்மம் என்ன?
===================16    நீங்கள் பெறும் மாத சம்பளத்தில் 35% இன்செண்ட்டிவ் கிடைத்தால்  விரைவில் பதவி உயர்வு  நிச்சயம் , 50% தாண்டினால் வேலைக்கு ஆப்பு நிச்சயம்
=================

17  உங்கள் இன்செண்ட்டிவ்  அதிகம் ஆக ஆக உங்கள் மாதாந்திர டார்கெட் அதிகரிக்கப்படும் என்பதால் எதிர்கால கணக்குடன் பணி செய்க 
=================
18 உங்கள் பெற்றோரை விட அதிகம் சம்பாதியுங்கள்,அவர்கள் செலவு செய்வதை விட குறைவாக செலவு செய்யுங்கள், அவர்களைப்போல் சேமியுங்கள். நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்

==================
19  டூ வீலர் , ஃபோர் வீலர் ஓட்டக்கத்துக்கறதை விட ரொம்ப முக்கியம் நீச்சல் கத்துக்குவது,உயிரைக்காப்பாத்த உதவும்===============

20 செல்ஃபி எடுப்பது வீட்டுக்கு, நாட்டுக்கு , உயிருக்கு கேடு தரும். உடல் ஆரோக்யத்துக்கும் அது தீமையே!

==============

0 comments: