Wednesday, September 21, 2016

பதுக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல தகுதி உள்ள தானைத்தலைவர் யார்?

 1 தி.மு.க., ஆட்சியில், 3 ஆண்டுகளாக, காவல் துறையினருக்கு பதக்கம் வழங்கும் விழா நடைபெறவில்லை.-ஜெ # பதக்கம் கொடுக்கும் பழக்கம் அவருக்கு இல்லையோ என்னவோ?


==================


2  என்னை பொறுத்தவரை, ஸ்டாலின், இன்னொரு ஜெ- திருமா # ஓஹோ, அதனாலதான் அவருக்கு சி எம் போஸ்ட் தர கலைஞர் யோசிக்கறாரோ? 

===============

: வரும் உள்ளாட்சி தேர்தலில் செலவு செய்ய, நம்மிடம் பணம் இல்லை. இதற்காக வீடு, நகை, நிலங்களை விற்று, யாரும் செலவு செய்ய வேண்டாம்.- தே.மு.தி.க., தலைமை நிலையச் செயலர் பார்த்தசாரதி # கேப்டன் 500 கோடி கொடுப்பாரோ?


==============


4   சபாநாயகர், அ.தி.மு.க.,வினர் பக்கம் திரும்பினால், ஆயிரம் வாட்சாக, 'ப்ரைட்' ஆகிறார்; தி.மு.க.,வினர் பக்கம் திரும்பினால், ஜீரோ வாட்சாக, 'டைட்' ஆகிறார்-மா.சுப்பிரமணியன் # அப்போதான் பிரைட் ஃபியூச்சர்னு நினைச்சிருப்பாரு


==============

5  மகளிர் காங்கிரஸ் பொது செயலர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு- நடிகை நக்மா # உஷாரா இருங்க, க்யூ ல குஷ்பூ வெயிட்டிங்


===================
 பீஹாரில் மதுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க முடியாத போலீஸ் அதிகாரிகள், பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டிற்கு செல்லட்டும்.-நிதிஷ் குமார்: # இந்த செய்தியை எந்த அதிகாரியாவது தோட்டம் பக்கம் பரப்பனும்


===============

7   உடல் உறுப்பு தானத்தில், தமிழகம் முதலிடம் வகிப்பது மகிழ்ச்சிக்குரியது - ஸ்டாலின் # நல்லவேளை, தமிழகத்தில் நல்லது எதுவுமே நடக்கலைன்னு கலைஞர் போல் பேசலை


=============


ஆண்களில், 8 பேரில் ஒருவருக்கும், பெண்களில், 9 பேரில் ஒருவருக்கும் புற்றுநோய் வர வாய்ப்புகள் உள்ளன-டாக்டர் அனிதா ரமேஷ்  # எல்லா வகைலயும் பொண்ணுங்க ஆண்களை விட ஆரோக்யமாதான் இருக்காங்க

==================

வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை:- ப.சிதம்பரம் # நீங்களா விலகிட்டீங்களா? அவங்க துரத்தி விட்டுட்டாங்களா?

=================10  கட்சியினருக்கு மட்டன் பிரியாணி விருந்து: தன்  பிறந்த நாளில் அசத்த விஜயகாந்த் முடிவு #  பிரியாணி சாப்ட்டுட்டு பிரியா விடைபெறுகிறேன்னு சொல்லிடப்போறாங்க


====================
11  நாசர்: நம் கலாசாரத்தை பிரதிபலிக்காத, மொழிமாற்று தொடர்கள் வருவது எந்த விதத்திலும் நல்லதல்ல.-நாசர் # ஒரே அழுகாச்சி, கள்ளக்காதல், துரோகம் தான் நம்ம கலாச்சாரமா?


================


12   
 உள்ளாட்சித் தேர்தலில், தே.மு.தி.க., நேரடியாக அனைத்து இடங்களிலும் போட்டியிட வேண்டும் என்பதே கட்சியினரின் கருத்தாகும்.தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் முடிவு செய்வார்.-
தே.மு.தி.க., பொருளாளர் இளங்கோவன்: # விஜயகாந்த் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை பிரேமலதா முடிவு செய்வாரா?


====================


13 -- 

 கடும் பொருளாதார நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம், அமெரிக்க டாலருடனான இந்திய ரூபாய் விகிதம், 67 ரூபாயிலிருந்து, 30 ரூபாயாகக் குறையும்- 
சுப்பிரமணியன் சாமி  # இப்படிச்சொன்னதால் பிஜேபியில் உங்கள் மதிப்பு 50% உயரும்னு நினைக்கறீங்களா?===========================


14     பாகிஸ்தான் விவகாரத்தில் மோடி அதிக நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்து விட்டதால், காங்கிரசின் கொள்கையே சரி என்று உணர்ந்திருக்கிறார்; இதை வரவேற்கிறோம்.-சந்தீப் தீட்சித் பேச்சு:# காங்கிரசின் கொள்ளையே சரின்னு சொல்லலையே?


====================


15   தமிழக அரசு, பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீரையே வழங்க வேண்டும். -ஜி.கே.வாசன் # டாஸ்மாக் தண்ணி நல்லா காய்ச்சியதுதானே?ன்னு சப்பைக்கட்டு கட்டுவாங்களோ?


=====================


16 குளச்சல் துறைமுக திட்டம், அனைவருக்கும் வாழ்வு அளிக்கும் திட்டம் தானே தவிர, எவருடைய வாழ்வையும் அழிக்கும் திட்டம் இல்லை என்பதை, அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்- பொன்.ராதா#  குளச்சல் திட்டம் பெரிய குடைச்சல் திட்டம்னு பலர் நினைக்கறாங்க போல =================


17 :  திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் ரூ. 186 கோடி மதிப்பிலான தங்கத்தை காணவில்லை; அறிக்கையில் பகீர் தகவல் # 4 அடுக்கு மிலிட்ரி பாதுகாப்பை மீறியா?  உள்ளே இருக்கும் ஆட்கள் தான் செஞ்சிருப்பாங்க


====================


18   ஏழைகளே இல்லாத தமிழகம் சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெ., சூளுரை # எல்லா ஏழைங்களும் ஜாக்கிரதை. கேரளா அனுப்பிடப்போறாரு

=======================
==================


20  அமைச்சர் பிள்ளைகள் எங்கே படிக்கின்றனர்? : 'சர்வே' எடுக்க ராஜா வேண்டுகோள் # அவங்க எங்கே படிக்கறாங்க? சும்மாதான் இருக்காங்கன்னு ரிசல்ட் வருமோ?


==================


0 comments: