Sunday, September 18, 2016

சிவபெருமானுக்கு ராதா பொண்ணு கார்த்திகா வை பிடிக்கும்னு யூகிக்கிறாயா? எப்டி?

Image result for nayanthara

1  மன்னா! ராமர் காட்டிலிருந்து வரும் வரை பரதனிடம் ஆட்சிப்பொறுப்பை தந்திருக்கீங்களே? பரதனை நம்பலாமா?


விஜயே பரதனை நம்பறாரு


============

2 எங்க படம் இன்னைக்கு ரீ ரிலீஸ் ஆகுது.


ரிலீஸ் ஆன எல்லா தியேட்டர்லயும் இன்னும் ஓடுதுன்னீங்க.எடுத்தாதானே ரீ ரிலீஸ்? ஓடிட்டு இருந்தா எப்டி?

===========

3 புதுசா ஒரு சைட் ஓப்பன் பண்ணி இருக்கேன்.


ஓஹோ.என்ன வயசு இருக்கும்?
யோவ்.நான் சொன்னது வெப்சைட்


===========

4 சார்.நான் பக்கத்து வீடு.அயர்ன் பாக்ஸ் குடுக்க முடியுமா?


ஒரு டம்ளர் தண்ணீர் கேட்டப்ப தர்ல.எப்டி கூச்சப்படாம படி ஏறி வர்றீங்க? ,கரண்ட்===========

5 யுவர் ஆனர்.இவர் 100 கோடி ரூபா திருடி இருக்கார்.இவருக்கு ஜாமீன் தரக்கூடாது.


அப்டி இல்ல.75 கோடி ஜாமீன் தொகை கட்னா நோ பிராப்ளம் #75%


==========

6 சார்.ஓப்பனிங் சீன் லயே ஹீரோயினைக்காட்றாங்க


ஹீரோயின் காட்றாங்களா?

==============

7 விஜய் = போன டைம் சத்ரியன் ரீமேக்.இப்போ எது?


அட்லீ = கேப்டன் பிரபாகரன் மாநகரக்காவல் ஏதோ 1


=============

8 சார்.படம் பார்க்கும்போது லைவ் அப்டேட்ஸ் போடவேண்டாம்னு சித்தார்த் சொன்னாரே?கேட்கல?


கவுதம சித்தார்த்தர் சொன்னதையே யாரும் கேட்கலை


==============

9 சார்.இந்த சீன்ல வில்லனை நீங்க அடிக்கனும்


ஹீரோ = சாரி சார்.யாரையும் நான் அடிக்க மாட்டேன்.அடி வாங்கவும் மாட்டேன்.என் படம் வேணா அடி வாங்கும்=============

10 டியர்.என் ஆன் லைன் சமையல் எப்டி இருக்கு?

ஆளை ஆப் பண்ற மாதிரி

===============

11 சிறியா நங்கை அப்டிங்கற செடி வீட்ல நட்டா பாம்பு அண்டாதுன்னு சொல்றாங்களே நிஜமா?

அது தெரில.ஆனா ஹவுஸ் ஓனர் பின் அண்ட விடமாட்டாரே?


================


12 சார்.உங்க படைப்பு ஏன் FACEBOOK ல எடுபடலை?

ஹூம்.அதுக்கு FACE நல்லாருக்கனுமில்லை?

===============

13 சிவபெருமானுக்கு ராதா பொண்ணு கார்த்திகா வை பிடிக்கும்னு யூகிக்கிறாயா? எப்டி?

பெருமாளுக்கு துளசின்னா இஷ்டமாம்.மிச்சம் இருப்பது கார்த்திகாதானே

============
14 டாக்டர்.வீட்டுக்குப்பக்கமே ஜிம் இருப்பது வரம்.சரியா?
வரம் தான்.ஆனா தினம் ஜிம் வரனும்.எக்சசைஸ் செய்யனும்னு எண்ணம் வரனும்.நீங்க FB தான் வர்றீக


===============

15 சைபர் க்ரைம் போலீஸ் = மீனம்மா கயலுக்கு ஏன் டிஎம் அனுப்பினே?
மீன ராசி.அப்டியே ராசி ஆகிடலாம்னு ஒரு நப்பாசை.

===============

16 மிஸ்டர்.ஏன் நடிகை டிபி வெச்சிருக்கீங்க?
அப்போதான் எல்லாரும் நினைப்பாங்க நான் பொண்ணுன்னு. # ஒரு விளம்பர ரீமிக்ஸ்

=============


17 Bangalore Days மோசம் னு சொல்றியே? பலர் சூப்பர்னாங்க
அவங்க சொன்னது சினிமா.நான் சொன்னது அரசியல் ,காவேரி

=============

18 ஜோசியரே
எனக்கு தண்ணில கண்டம்னு சொல்றீங்களே?நிஜமா?
உனக்கு மட்டும் இல்ல.எல்லா தமிழர்களுக்கும் தண்ணீர் கண்டம்


============

19 நான் போன வாரம் சத்தியமங்கலம் வந்திருந்தேன்
நிஜமாவா?
சத்தி யமா

================

20 பிரபு தேவா கன்னடக்காரராமே?தெரியுமா?
ம்ஹூம்.அப்போ கன்"நடன"க்காரர் னு சொல்லலாம்


===============

0 comments: