Sunday, September 11, 2016

ஹீரோ ,வில்லன் 2 கேரக்டர்களும் ஒரே ஆள்.செஞ்சா எடுபடுமா?

என்னவனை தவிர வேறு எவரையும்."டி"போட்டு என்னை பேசுவதற்கு நான் அனுமதிப்பது இல்லை.

ஓஹோ.உங்க பேரு என்ன?
டியாரா
சுத்தம்.

=================

2 சார்.உங்களுக்கு சட்டப்படி எத்தனை சம்சாரம்?

சீட்டு கம்பெனியில் ஏலம் விடுபவர் =. ஒரு தாரம், இரு தாரம் மூன்று தாரம்

=================

3 தலைவரே! உங்களுக்குப்பிடிச்ச பத்திரிக்கை எது? உங்களுக்கு எத்தனை சம்சாரம்?

2க்கும் ஒரே பதில் தான்.முத்தாரம்


====================


4 டாக்டர்.அடிக்கடி பீர் குடிச்சா உடம்புஏறும்னு சொல்றாங்களே .நிஜமா?

ஆமா.சீக்கிரம் பாடி பாடைல ஏறும்

===============

5 சார்.அனுபவம் பேசுதுன்னு சொல்றாங்களே? அது உண்மையா?

அனு வேணா லொடலொடன்னு பேசும்.அனுபவம் எப்டிய்யா பேசும்?

=================

6 பொண்ணு மூக்கும் முழியுமா அழகா இருக்குமா?ன்னு எப்டி கண்டு பிடிக்க?

சிம்ப்பிள்.அவங்க போடும் ஸ்மைலி ல மூக்கு இருக்கும் :-),


=================

7 அடிபட்டவனுக்கு ஆறுதல் சொல்லனுமா? அட்வைஸ் சொல்லனுமா?

2ம் வேணாம்.முதல்ல முதல் உதவி செய்யனும்.


=============

8 ரிசர்வ்டு கோச்சில்

ஜன்னல் சீட் வேணுமா?
யா
எதுக்கு?காத்து வாங்கவா?இயற்கையை ரசிக்கவா?
பிளக்பாயின்ட்.ல செல்போன் சார்ஜ் போட


===============

9 செந்தாமரைச்செல்வி = டியர்.உங்க மேல பைத்தியமா இருக்கேன்.

ஓஹோ.ஊரு சனம் உன்னை செந்தா"மறை கழண்ட"செல்வி னு சொல்லுமே ?


=================

10 மாப்ளை.ஆடி மாசம் வருது.தம்பதிகள் பிரிஞ்சு தான் இருக்கனும்.

ஓஹோ.அப்போ அத்தையை அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பியாச்சா?மாமா


=============

11 யுவர் ஆனர்.உணர்ச்சிக்கொலை எனப்படும் crime of passion கீழ் குற்றவாளிக்கு தண்டனையைக்குறைக்கனும்

சாரி.அப்றம் CRIME FASHION ஆகிடும்


===================


12 மாப்ளை.இந்தாங்க பொண்ணோட போட்டோ.பொண்ணு கொஞ்சம் வாயாடி.

இல்லையே.வாயாடி டிபி க்கும் இதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லையே

===============

13 காமெடி ஸ்பெஷலிஸ்ட் சந்தானம் சைக்கோ ஸ்பெஷலிஸ்ட் செல்வராகவன் இணையறாங்களாம்.

டைட்டில்?
இரண்"டாம் ஜெர்ரி" உலகம்


===============

14 சில வாட்சாப் மெச்செஜ்கள் பிரமாதமா இருக்கு. ஆனால் நம்பி பார்வேர்ட் பண்ண முடிவதில்லை."

சரி.நம்பாம பார்வாடு பண்ணுங்க.என்ன இப்போ?காசா?பணமா?


===============

15 இனி பாலியஸ்டர் சேலைகளுக்கு செம கிராக்கி வந்திடும்

ஓஹோ.என்ன ஆகும்?
க"பாலியஸ்டர்" சேலை ன்னு விற்பாங்க

===============

16 இன்னைக்கு குழாப்புட்டு ஸ்பெஷல்.கொண்டு வரவா சார்.

ரேட் எம்"புட்டு"?


===============


17 டாக்டர்.மயில் இறகை நோட்புக்கில் வெச்சிருந்தா குட்டி போடுமா?

ஒரு ஜோடி மயில்களை ஒரே கூண்டுக்குள் வெச்சிருந்தா க்கூட முட்டை தான் போடும்


================


18 சார்.நீங்க ஆள் பாக்க பொரி உருண்டை மாதிரி இருந்தாலும் எப்படியே கரிக்ட் பண்ணிடறீங்களாம்.எப்டி?

கடலை போட்டுத்தான்


================


19 சார்.ஹீரோ ,வில்லன் 2 கேரக்டர்களும் ஒரே ஆள்.செஞ்சா எடுபடுமா?

ஒரு ஹீரோ படத்துக்கே வில்லன் ஆனாதான் தப்பு.படத்துல் வில்லன் ஆகலாம்


==============

20 டியர்.உங்களுக்கு கோபம் வர்ற மாதிரி எப்பவாவது நடந்திருக்கேனா?

இப்போக்கூட பெட்ரூம் ல குப்புறப்படுத்து ஆங்க்ரிபர்ட் விளையாடிட்டு இருக்கியே?


=================

0 comments: