Thursday, September 15, 2016

மேய்க்கறது எருமை இதுல என்ன பெருமை?

1 தே.மு.தி.க., எழுச்சியாக உள்ளது:- பிரேமலதா # எழுச்சிக்கலைஞர்னு பட்டம் கொடுத்தவரே உங்க கட்சியை கபளீகரம் பண்ணிட்டு இருக்காரே?

================
=============================== 3   உச்ச நீதிமன்றம் தடை போட முடியாத வகையில் சட்டம் இயற்றப்பட்டு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக 
நடத்தப்படும்.-தமிழிசை #எலக்சன் டைம்லயே முடியலை,இனி எப்டி முடியும்?


================


4  இந்தியாவில் தேங்காய் எண்ணெய் பயன்பாடு குறைந்துள்ளது. இதனால், , விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்-வானதி சீனிவாசன் # கோக்க”நெட்” ஆயில்னு சேல்ஸ் பண்ணி பாருங்க


====================

5  ஜி.கே வாசன் தன்னிச்சையாக முடிவு எடுப்பதால் அதிமுகவில் இணைந்தேன் - ஞானசேகரன் # அப்பா என்னை மதிக்கலை, மாமனார் வீட்ல வீட்டோட மாப்ளையா போறேன்


===============

6  ம ந கூ வில், தே.மு.தி.க.,வுக்கு மட்டும், கிளைகள் வரை தொண்டர்கள் உள்ளனர்-தே.மு.தி.க., பொருளாளர் இளங்கோவன்:# ஆனா 12% ல இருந்து 2.4% ஆக குறைஞ்சிட்டாங்க,அதையும் சொல்லுங்க


=================உ

  7 தி.மு.க.,வில் மரியாதை இல்லை. எனவே, அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளேன்.-கருப்பசாமி பாண்டியன் # அண்ணே, அங்கேயாவது உக்கார வைப்பாங்க, இங்கே நின்னுட்டே இருக்கனும்

====================

கொலை பண்ண போறாங்க!':அரவிந்த் கெஜ்ரிவால் அலறல் # அய்யய்யோ ,கொல்றாங்க அலறல் டெல்லி வரை பரவிடுச்சா?============================


''9  தமிழுக்கு சங்கம் வளர்த்த மதுரையில் பிறந்த தி.மு.க., உறுப்பினர், சட்டசபையில் ஆங்கிலத்தில் பேசுவதா,- கருணாஸ் # தமிழ் இனத்தலைவரே பேரன்களை கான்வெண்ட் ஸ்கூல்ல சேர்க்கலையா?

=================


'10  கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம்' : தி.மு.க., குற்றச்சாட்டு # விரைவில் அனைவருக்கும் அம்மா லோன் வழங்கப்படும், கவலைப்படாதீங்க


=================

11 ''அ.தி.மு.க., ஆட்சியில், சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்,''  அமைச்சர் தங்கமணி  # கபாலி  படத்தில் வரும் ஃபேமிலியைப்பத்தி சொல்றாரோ?


===================


12  அப்துல்கலாம் ஜனாதிபதி ஆனது அம்மாவின் உழைப்பால் - நிலோபர் கபிர் # ஆமா, கலாம் அவர்களின் அம்மா வின் உழைப்பால்


==================
13  கூடிய சீக்கிரமே, தி.மு.க., மூன்றாக உடையும்.-தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கருப்பசாமி பாண்டியன் # அதுக்கெல்லாம் தலைவர் அசர மாட்டாரு, அவங்க 2 கோஷ்டி கூடவும் கூட்டணி வெச்சுடுவாரு, யார் கிட்டே?


================


14   :பிற கட்சிகளை வம்புக்கு இழுப்பதும், மற்ற கட்சிகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதும் கருணாநிதிக்கு வாடிக்கை-இ.கம்யூ., மாநிலச் செயலர் முத்தரசன் # குழம்புன குட்டைல தானே மீன் பிடிக்க முடியும்?

===================15  சுப்ரீம் கோர்ட்... கண்டிப்பு: பழிவாங்க அவதூறு சட்டத்தை பயன்படுத்தாதீர்கள் என உத்தரவு # அதிக முறை கோர்ட் கண்டனத்துக்கு ஆளான ஒரே அரசு நம்ம ஜெ அரசு தான்


========================


16  பருப்பு விலை குறைவது எப்போது: பிரதமருக்கு ராகுல் கேள்வி # ஃபாரீன் டூர் எப்போ முடியுதோ அப்போ

==================


17  'மாற்று கட்சிகளில் இருந்து, 'டம்மி'யானவர்களை இழுக்காமல், உள்ளூரில் செல்வாக்கு உள்ளவர்களை கட்சியில் இணைக்க வேண்டும்- கருணாநிதி # மேய்க்கறது எருமை இதுல என்ன பெருமை?====================


18  வருவாய் ஈட்ட தெரியாமல் திண்டாடுது அரசு: துரைமுருகன் #  இல்லையே , டாஸ்மாக் ல செம துட்டு வருதே?


=======================


19  தமிழகத்தில் குற்றங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளன.-OPS  #  நீங்க சரியா கவுண்ட் பண்ணலைன்னு சொல்லுங்க


========================

===================

1 comments:

R. Jagannathan said...

OPS, koottalil Kumaarasamy Mathiri!

Karunaas, unga AMMA Tamil meediyaththila padichchaangalaa?