Wednesday, September 07, 2016

ஜொள்ளு பிரசாத் யாதவ்

1 சினிமாவில் ஹீரோவாக நடிக்க தயார் : லாலு # அரசியல்வாதிங்க எல்லாரும் நல்ல நடிகர்கள்தான் ,ஆனா ஜனங்க ஒத்துக்கனுமில்ல?==============
2 இணையதளம் மூலமே வணிகர்கள் இனி மாதாந்திர கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் : தமிழக அரசு அறிவிப்பு# ஊழல்,லஞ்சம் குறைய.வாய்ப்பு.============3 வேகத்தடை அமைக்க ஐகோர்ட் உத்தரவு: அரசின் உத்தரவுகள் காகிதத்தில் மட்டுமே உள்ளன # ஒவ்வொண்ணும் கோர்ட் சொல்லி சொல்லி தான் செய்யனுமா?=============4 ரயிலில் படிக்கட்டு பயணத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்: ரயில்வேக்கு ஐகோர்ட் உத்தரவு# குட் ஸ்டெப்===========5 எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் விஜயகாந்த் தான் பொறுப்பு: வி.சி சந்திரகுமார் # விஜய்காந்த் பொறுப்பில்லாதவர்னு நீங்கதானே சொன்னீங்க?
===========6 வரி ஏய்ப்பு செய்த பான், குட்கா நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை # அபராதம் விதிக்கும்போது வரித்தொகை + 50% ஆப் வரி கட்டச்சொல்லனும்============7 நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு வாரத்தில் 12 பேர் கொலை - பீதியில் மக்கள் # அமைதிப்பூங்கா சமாதிப்பூங்காவா மாறிட்டு வருது=============8 கேரளாவில் பீட்சா, பர்கர், பாஸ்தா சாப்பிட்டா ‘கொழுப்பு வரி’ #,டாக்டர்தான் கொழுப்பை தவிர்க்கச்சொன்னார்னு ஒரு பய வரி கட்ட மாட்டான்============9 வாகனங்களில் ஹாரன் அடிப்பதால் ரூ.245 கோடி இழப்பு: அதிர்ச்சி தரும் சர்வே முடிவு # புதுசு புதுசா எப்டித்தான் கணடுபிடிக்கறாங்களோ?


==============


10 மக்களுக்கு பலனளிக்கும் ஆட்சியை வழங்கிட வேண்டும் - விஜயகாந்த் # குறைந்த பட்சம் 500 கோடி யாவது பலன் அளிக்கற மாதிரி?

==============

11 விஜய் மல்லையா செப்டம்பர் 9ல் நேரில் ஆஜராக வேண்டும்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு # நல்ல வேளை.2016 செப் 9 ன்னு சொல்லலை


==============

12 என்னால் சிறப்பாக நடிக்க முடியும்.. ஹீரோயினை தேர்வு செய்வது டைரக்டரின் பொறுப்பு - லாலு பிரசாத் # உங்க சம்சாரம்தான் ஹீரோயின்னா ஓடிடுவாரோ?


================

13 பயணிகள் கவனத்திற்கு.. சென்னை மின்சார ரயில்களில் நாளை முதல் தீவிர டிக்கெட் பரிசோதனை # அப்போ இத்தனை நாளா ட்யூட்டிக்கே வர்ல?

=============

14 தேமுதிக, தமாகா உடன் கூட்டணியில்லை ஆனால் நட்பு நீடிக்கிறது: வைகோ # வாசல் திண்ணைலதான் படுப்பேன்.ஆனா வீட்ல பைட் எதும் இல்ல

============

15 மன அழுத்தத்தால் ராம்குமார் பாதிக்கப்படாமல் இருக்க பேச்சு துணைக்காக 2 கைதிகள்!# தண்டம் வேற ,முட்டுக்கோல் வேற

=============

16 கலப்பட எண்ணெயால் மக்களுக்கு புற்றுநோய் தாக்கும் அபாயம் # ரோட்டோரக்கடைகளில் பஜ்ஜி சாப்பிடுவோர் கவனத்துக்கு்

============
17 கூடங்குளம் 2வது அணு உலையில் இன்று இரவு முதல் மின் உற்பத்தி!# உதய குமார் னு ஒரு புரட்சி வீரர் இருந்தாரே?குமாரசாமி ஆகிட்டாரா?


============

18 சென்னை மணலியில் அதிமுக கவுன்சிலர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை # ஜெயா டிவி ல அமைதிப்பூங்கா னு சொல்வாகளே?


=============

19 கேரளாவில் இளைஞர்கள் மாயம் # சரிதாநாயர் ம்யூசியம் பார்க்கப்போயிருப்பாக்


==============

20 தமிழகத்தில் உற்பத்தி ஆகும் உபரி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல வழி வேண்டும் - மோடிக்கு ஜெ கடிதம் # எங்கேயோ இடிக்குதே,என்னமோ நடக்குது


===================

0 comments: