Monday, September 19, 2016

பால் குலுக்கல்

குடிகாரன் ஒரு நாளும் திருந்த மாட்டான்,  திட்டம் போட்டு குற்றம் செஞ்சவன் என்றும் வருந்த மாட்டான்================
இன்று ஆடிப்பெருக்கு, குருபெயர்ச்சி, ஆடி அமாவாசை 3 இன் 1 .காதலி, கள்ளக்காதலி, மனைவி என 3 இன் 1 பேக்கேஜில் இருப்போர்க்கு மிக சிக்கலான நாள்
==================3 என் கணிப்பின்படி சசிகலா புஷ்பா திமுகவில் சேருவார். கேயாஸ் தியரியின் படி திருச்சி சிவா அதிமுக போவார்,.புஷ்பா புருசன் காசி ராமேஸ்வரம் போவார்
=================
4 தமிழகத்தில் உள்ள திராவிடக்கட்சிகள் , ஜாதிக்கட்சிகள், மத கட்சிகள் எல்லாமே வீண், புதுசா யாராவது வரனும் சகாயம் போல்================5    இக்கட்டான  சூழலில்  நாம் கேட்காமலேயே உதவுபவர்கள் அன்புக்கு உரியவர்கள், கேட்டும் உதவாதவர்கள் சுயநலப்பண்புக்கு உரியவர்கள்
==================6  இந்த பொண்டாடிங்க எப்பவும் நாம கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல மாட்டாங்க, ஏன்? எதுக்கு? எப்படி?ன்னு அரிஸ்டாட்டில் மாதிரி நம்மையே திருப்பிக்கேட்பாங்க
=====================
7  ஒபாமாவையும் , ஹிலாரி கிளிண்ட்டனையும் ஜோடியாப்பார்க்கும்போது அப்படியே நம்ம சிவாஜியையும்,பத்மினியையும் ஒண்ணா பார்த்தது போல் இருக்கு
================
8   அடிக்கடி ஐ லவ் யூ சொன்னால் துணைக்குப்பிடிக்கும் எனில் தினமும் ஒரு முறை அந்த மந்திரத்தை உச்சரிப்பதில் தவறில்லை
================
9   டெய்லி 10 மணி நேரம் ஆன்லைன்லயே இருந்துட்டு என்னை யாரும்  தேடலைன்னு புலம்பறாங்க நெட் தமிழன்/தமிழச்சிங்க.சைபர் க்ரைம் போலீஸ் தான் தேடப்போகுது
====================10 பொண்ணுங்களுக்கு டி எம் அனுப்பறது நமக்கெல்லாம் சர்வ சாதாரணம்-னு காட்டிக்க நெட் தமிழன் அந்தப்பொண்ணுக்கு டி எல்லில் செக் டிஎம்னு மென்ஷன் போடுவான்
================
11  தாய் நாட்டில் செடி நடும் ஆட்களும் இருக்காங்க. அயல் நாட்டில் போய் முடி நடும்  ஆட்களும் இருக்காங்க.இயற்கையை வளர்ப்போம். செயற்கையை எதிர்ப்போம்=============12  இலை உதிர்  காலம் வர்றப்போ இலை உதிர்ந்து தான் போகும், இது இயற்கையின் நியதி
==================13  சோகன் =  சோகமானவன்

 அசோகன் = சந்தோசமானவன் # சபாஷ் துபாஷ்====================


14  ட்விட்டர் ல ப்ரொஃபைல் பிக்சர்ல 

 கூட தமிழ்ப்பொண்ணுங்க  வலது காலை எடுத்து வெச்சுத்தான் உள்ளே வர்ராங்க. வாட் எ பண்பாடு!


=====================


15  ஆண்கள்  காரில் போனா அதை பெருசா வெளில சொல்லிக்கறதில்லை,ஆனா பொண்ணுங்க ஸ்கூட்டில போனாக்கூட ராக்கெட்ல  போற மாதிரி ஸ்டேட்டஸ் போடுவாங்க=================
16 மீனம்மா கயலும், மிருதுளாவும் ஆன் லைன்ல வந்தா டாஸ்மாக்ல லைன் கட்ற குடிகாரங்க மாதிரி ஒரு கூட்டம் லைன் கட்டி நின்னு மென்சன் போட்டு சாப்ட்டாச்சா? தூங்கியாச்சா?னு கேக்குது
====================17 பொண்ணுங்க லைன்ல வந்தா டாஸ்மாக்ல லைன் கட்ற குடிகாரங்கமாதிரி ஒரு கூட்டம் லைன்கட்டிநின்னு மென்சன் போட்டு சாப்ட்டாச்சா? தூங்கியாச்சா?னு கேக்குது==============
18மில்க் ஷேக் = பால் குலுக்கல் # சபாஷ் துபாஷ் ஆதி


==================


19 அரசியல் வசனங்களில் டாப்
1 பராசக்தி
2 பாலைவன ரோஜாக்கள்
3 அமைதிப்படை
4 பேராண்மை
5 ஈ
6 ஜோக்கர்

===============

20  அரசியல் வசனங்களில் டாப்- பாகம் 2

1 கேப்டன் பிரபாகரன்
2 ஏழை ஜாதி
3 ஊமை விழிகள்
4 கடமை கண்ணியம் கட்டுப்பாடு
5 முகமது பின் துக்ளக்

=============

0 comments: