Tuesday, September 27, 2016

தனுஷ் தான் அடுத்த ஜனாதிபதியா?

நடிகர் சங்கத்தில் ஒரே ஆண்டில் ரூ 3 கோடி ஊழல்... விஷால், நாசர் மீது குற்றச்சாட்டு # புகாரே வராத ஒரே தலைவர் கேப்டன் தான்

============

2 பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும்! - ரஜினி# குறிப்பா.65+ வயசான ஹீரோக்கள் 16 வயசு ஹீரோயின் கேட்கக்கூடாது

============

3 இயந்திரம் மூலம் நெல் நடவு செய்தால் ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் மானியம்: வேளாண்மை துறை#ஒருத்தனை ஏமாத்தனும்னா அவன் ஆசையைத்தூண்டனும்-சதுரங்கவேட்டை

==============

4 இனி இலவசங்களை அறிவிக்க வேண்டாம் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்.# அறிவிக்கக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லாம அட்வைஸ் போல் சொல்வது ஏனோ?


============

5 69 கோடி ரூபாயை வைப்புத் தொகையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயார்: -SRM # ஜாமீன் கட்டவே இவ்ளோ பணம்னா ஏமாத்தி சேமிச்சது எவ்ளோ இருக்கும்?

=============

6 பச்சமுத்து கைது விவகாரத்தில் பாஜக தலையிடாது- ஹெச். ராஜா # தலையிட்டா கட்சிக்கு நற்பெயர் கிடைக்காதே?


==============

7 பசு நெய் சாப்பிட்டால் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லலாம்:ராம்தேவ் # பசு வைக்கோல் புல் சாப்ட்டாலும் நெய் சாப்ட்டாலும் நாம எப்டி தங்கம் வெல்ல?

---------------

8 சட்டசபை வளாகத்தில் திடீர் போலீஸ் பாதுகாப்பு ஏன்? துரைமுருகன் கேள்வி # ரவுடிகளும் ,பொறுக்கிகளும் இருக்கும் இடம் ஆச்சே?பாதுகாப்பு வேணாமா?

============

9 காவிரி நீரை பெற்று தரும் விவகாரத்தில் தமிழக அரசு ஈகோ பார்க்க கூடாது: அன்புமணி ராமதாஸ# ஈ,கோ,2 படங்களும் ஜீவா நடிச்ச பழைய படங்கள் ஆச்சே? ்

==============

10 SRM பச்சமுத்துவை 300 கேள்விகளால் துளைத்தெடுத்த காவல்துறை #300,க்கும் பதில் 1 தான்.தெரியாது சார்


===========

11 பச்சமுத்துவை தொடர்ந்து சிக்கலில் சிக்கும் ரவி பச்சமுத்து! # ரவி ன்னா சூரியன்.சூரியனுக்கும் ஜெ க்கும் எப்பவும் ஆகாது


==============


12 பெண்கள், சாமி கும்பிடச் செல்லாமல், மருத்துவமும் பொறியியலும் படியுங்கள் - கட்ஜூ # ஓஹோ.சாமி கும்பிட்டா தெய்வக்குத்தம் ஆகிடுமா?


================

13 ஆப்பிள் நிறுவனம் 96,000 கோடி ரூபாய் வரி பாக்கி! # இவங்களை விட்ருவாங்க.தக்காளி வியாபாரி 1000 ரூபா வரி கட்லைன்னு வழக்கு போடுவாங்க

============

14 தமிழக ஆளுநராக லதா ரஜினிகாந்த் நியமிக்க வாய்ப்பு # அப்போ தனுஷ் தான் அடுத்த ஜனாதிபதியா?


==============

15 நாட்டிலேயே சிறந்த மாநிலம் தமிழகம்தான்! - மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு # எங்கய்யா போகுது நாடு?


===============

16 தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் # இன்னைக்கு பந்த் னு சொன்னான்ங்க

==============

17 ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு: வாழ்நாள் சாதனைக்காக விருது அறிவிப்பு!# அடுத்து நம்ம கமல்


=============

18 தமிழகத்துக்கு 50 டிஎம்சி நீர் ஏன் தரக்கூடாது? பதில்தர கர்நாடகாவுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு# பதில் தர தேவை இல்லை.தண்ணீர் தந்தா போதும்

=====================

19 சின்ன திரை, பெரிய திரையைவிட பெரிய கிரிமினல் செல்போன் - ராமதாஸ் # அந்த செல்போன் மூலம் தான் பல கிரிமினல்களே மாட்றாங்க.உதா கருப்பன்

=================

20 இந்தி தெரியாது என்பது எனக்கு அவமானம் அல்ல. அது என் இன எழுச்சிக்கான அடையாளம்!-சகாயம் # எதையும் கற்றுக்கொள்வதே எழுச்சிக்கான முதல் படி

====================

0 comments: