Wednesday, September 14, 2016

ஒரு அஜித் ரசிகர் முஸ்லீம் ஆக இருந்தா அவர் செல் ஃபோன் ரிங்க் டோன் என்னவா இருக்கும்?

1 டீச்சர், W  என்பதை டபுள் வி (V V) தானே சொல்லனும், ஏன் டபிள்யூ சொல்றோம்?


விட்டா நீ ஜீரோ (0) க்கும் ஓ (O)க்கும் என்ன வித்யாசம்?னு கேட்பே போல


===============

எதிர் வீட்டு பொண்ணை கிச்சு கிச்சு பண்ணுனியா? ஏன்?

 டெய்லி யாரையாவது சிரிக்க வைக்கனும் என்பது தான் என் லட்சியம் சார்


===================


3 டாக்டர், டெய்லி சரக்கு அடிச்சாதான் என் புருசனுக்கு தூக்கம் வருதாம், என்ன செய்ய?

 1ம் செய்ய முடியாதும்மா, அதான் தூங்கிடுவாரே?


===================


4  டியர், உன்னை முதல் டைம் பார்க்கும்போது பிடிக்கலை, 2 வது டைம் பார்த்தப்போதான் லேசா பிடிச்சுது

 யோவ், நான் என்ன கபாலி படமா?==================

5 தமிழ்மிஸ் = அமலாபால் - பிரித்து எழுது


 டீச்சர், அவங்க தான் ஆல்ரெடி பிரிஞ்சுட்டாங்களே? மீண்டும் நான் ஏன் பிரிக்கனும்?==================


6 ஏம்மா, மாப்ளை பொண்ணு பார்க்க வரும்போது வெட்கப்படு அல்லது வெட்கப்ப டுவது   போல் நடி

அய்யய்யோ எனக்கு வெட்கமும் வராது நடிப்பும் வராதே?=================

7    சார், டபுள் மீனிங் ஜோக் ஏன் சொல்றீங்க?

 என்னய்யா அநியாயம்? ஹீரோ, ஹீரோயின் டபுள் ரோல் பண்ணா மட்டும் ரசிக்கறீங்க? டபுள் மீனிங் காமெடியை ரசிக்கக்கூடாதா?


=========================


8  டியர், வாட்சப்ல 4 சேலை ஃபோட்டோ அனுப்பி இருக்கேன், எது நல்லாருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்

 4 மே உன்னை மாதிரியே இருக்கு


========================


9 உண்மையான விருது என்பது ஹிட் ஃபிலிம் தருவதில் இருக்கு


ஓஹோ, அப்போ நட்ட ஈடு தருவதில் என்ன இருக்கு?


====================


10 மாப்ளை ஏர்போர்ட்ல ஒர்க் பண்றாரா? அடேங்கப்பா. என்ன வேலை?

 ஏர்போர்ட் மேற்கூரை இடிஞ்சு விழுந்தா அது எத்தனாவது டைம்னு எண்ணி சொல்லும் வேலை===================================


11  குருவே! கர்மா என்றால் என்ன?

சிஷ்யா! போன ஜென்மத்துல நீ செஞ்ச பாவத்துக்கு இந்த ஜென்மத்தில் அனுபவிக்கும் தண்டனைதான் கர்மா


================

12   மேடம், டைவர்சுக்குப்பின் மீண்டும் வேற ஒருவரை காதலிப்பீங்களா?

யா, அமலா பால் இனி அமலா ஒன்ஸ்மோர்

==============


13 மேடம், டைவர்சுக்கு என்ன காரணம்?

சாரி, வெளில சொல்ல முடியாது

சரி, வீட்டுக்கு உள்ளே வர்றேன், சொல்லுங்க

============
14 டாக்டர், அடிக்கடி விக்கல் வந்தா என் ஆளு என்னை நினைச்சுட்டே இருக்காருன்னு அர்த்தமா?

இல்ல மேடம், உங்க தொண்டைக்கு தண்ணியே காட்டாம தண்ணி காட்ட்றீங்கனு அர்த்தம்


===========

15 ரஜினி படம்ன்றதை மறந்துட்டுப்பாத்தா படம் OK
தியேட்டருக்குள்ளே OK, ஆனா கவுண்ட்டர்ல டிக்கெட் ரேட் ரஜினி படம்கற லேபிளை வெச்சுதானே ஏத்தறாங்க?
==============
16 டியர்!ஒவ்வொரு மனுஷிக்கும் ஒரு பிரேக்கிங்க் பாயிண்ட்டும், மெல்ட்டிங்க் பாயிண்ட்டும் உண்டு


என்னம்மா பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ் மிஸ் கணக்கா பேசறே?


================


17 டைரக்டர் சார். வட போச்சே அப்டினு ஏன் புலம்பறீங்க?

வட சென்னை பட அக்ரிமெண்ட் ல சைன் பண்றவரை என் கூட தான் ஒத்துமையா இருந்தா


==================


18


குருவே! ஆடி கிருத்திகைக்கு என்ன செய்யனும்?

 அய்யய்யோ, எதுவும் செய்யக்கூடாது, கோயிலுக்கு மட்டும் போகனும்


=================


19  ஒரு அஜித் ரசிகர் முஸ்லீம் ஆக இருந்தா அவர் செல் ஃபோன் ரிங்க் டோன் என்னவா இருக்கும்?


 பில்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்


===================


20 தலைவரே! ஏன் கட்சி மாறீட்டீங்க?

 ஒரே கட்சில இருந்தா வருமானம் கம்மி, அப்பப்ப கட்சி மாறுனா காசு பார்க்கலாம்

0 comments: