Tuesday, September 06, 2016

ஏ டி எம் கார்டை அதிகம் யூஸ் பண்றது பணக்காரனா? ஏழையா?

மிஸ்! என்னைப்பத்தி எதுவும் கேட்காதீங்கன்னு பயோ ல போட்டிருக்கீங்க.யா.வேற எது வேணா என் கிட்டே கேட்கலாம்.
ஓ.1000 ரூபா கடன் கொடுங்க


===========

2 டியர்.எந்தப்பாட்டைக்கேட்கும்போது என் நினைப்பு உங்களுக்கு வரும்?என்னைப்பாடச்சொல்லாதே.நான் கண்டபடி பாடிப்புடுவேன்
பாட்டை கேட்கறப்ப


==========

3 டியர். உனக்கும் எனக்கும்் இடைவெளி விட்டு அமர்ந்தது, நம் இடையில் காதல் அமர்வதற்க்கு.லூசு.வேற எவனாது சீட் பிடிச்சு உக்காந்துக்கப்போறான்


=============

4 ஆடு, கோழிய வெட்டுனா தப்பில்லை நாயை மாடியில இருந்து தூக்கி போட்டா தப்பா? யுவர் ஆனர்


சரி, தீர்ப்பு, நீ 15 வது மாடில இருந்து குதி


=====

5 யுவர் ஆனர், நாய் பறக்குதா?ன்னு செக் பண்ணேன், இது ஒரு தப்பா?

அப்போ மனுசன் பறக்க முடியுமா?ன்னு நான் உன்னை வெச்சு செக் பண்ணப்போறேன்===================


6 ஆர் ஜே பாலாஜி = சார்.10 பக்க டயலாக்கை ஒரே மூச்சில் ஒரே டேக்கில் பேசுவேன்மணிரத்னம் =,நம்ம படத்தோட டோட்டல் ஸ்க்ரிப்ட்டே.3 பக்க வசனம் தான்

=========

7 டைரக்டர் = ஸ்ரேயா உங்களுக்கு அம்மா இந்தப்படத்துல.இதை உங்க ரசிகர்கள் ஏத்துக்குவாங்களா?சிம்பு =,நானே ஏத்துக்க மாட்டேன்.

===========

8 ஜட்ஜ் = 1500 பெண்களுக்கு ஆபாச எஸ் எம் எஸ் அனுப்ச்சியா?

கைதி= யுவர் ஆனர், பீப் சாங்கின் பல்லவியை அனுப்பினேன்


=================

9  

டியர், எல்லாரும் நெத்தி முத்தம் பற்றி சிலாகிக்கறாங்க?

 புத்தி உள்ளவன் நெத்தி யை செலக்ட் செய்ய மாட்டான்


=============

10  ஜெண்ட்டில்மேன் கிரிக்கெட்டர் என்பவர் யார்?

 தெரியலயே, கே டி குஞ்சுமோகன், அர்ஜூன்  இவங்கள்ல 2 பேருக்குமே கிரிக்கெட் வராதே?


==================

11  டாக்டர், செயின் ஸ்மோக்கரா இருக்கேன், அதில் இருந்து மீண்டு வர என்ன வழி?

 கொஞ்ச நாள் நெக்லஸ் ஸ்மோக்கரா இருந்து பாருங்க================

12  திறமை இருக்கறவன் கிட்டே திமிரு இருக்குமாமே?

 இல்லையே? என் கிட்டே திறமையும் இல்லை, திமிரு டிவிடியும் இல்லை, எதுவா இருந்தாலும் தியேட்டர்தான்


===============


13 சார், தமிழ் ல மிஸ்டேக் இல்லாம எழுத என்ன செய்யனும்?

”மிஸ்!டேக்” இட் ஈசி


===============

14   மிஸ்! கண்ணம்மா!எதுக்காக மொட்டை மாடில படுத்துத்தூங்கறீங்க?

 “காற்றுவெளியிடை” புகழ் கண்ணம்மான்னு பேர் எடுக்க


==================

15 தலைவரே! சூறாவளிப்பிரச்சாரம் செஞ்சும் “சுறா”வழித்தோல்வி ஆகிடுச்சே? என்ன செய்ய?

 ”புலி” பதுங்குவது பாயத்தான்னு இப்போதைக்கு சமாளிப்போம்


=================

16  ஃபேஸ்புக் போராளினி = காலைல 6 மணிக்கு கடையைத்திறந்து கடலையை ஸ்டார்ட் பண்ணுவோம்

ஏம்மா, கிச்சனை திறந்து முதல்ல சமையலை ஸ்டார்ட் பண்ணுங்க


====================

17  மிஸ்! எதுக்காக என்கிட்டே இந்துமதம், முஸ்லீம்மதம், கிறிஸ்துவமதம்னு லிஸ்ட் போடறீங்க?
 நீங்க தானே SOME  மதம் சொல்லுன்னீங்க?
 அய்யோ, அது சம்மதம்


================

18   ஏ டி எம் கார்டை அதிகம் யூஸ் பண்றது பணக்காரனா? ஏழையா?


 ஏழை தான் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமா எடுப்பான், பணக்காரன் க்ரெடிட் கார்டு தான் யூஸ் பண்ணுவான்


==============


19  ரஜினி ரசிகர்கள் கங்குலி ரசிகராகவும் இருந்தால் கபாலி பஞ்ச் டயலாக்கை எப்படி    உச்சரிப்பாங்க?  


கங்கு டா  


====================


20  சார், என் செல் ஃபோன் பேட்டரி அதிக நேரம் நிக்க மாட்டேங்குது.  


 4 மணி நேரம் நிக்குதில்ல? கால் வலிக்காது?


==================

0 comments: